என் கணவருக்கு தான் அந்த விஷயம் சங்கடத்தை கொடுக்கிறது - திருமண வாழ்க்கை பற்றி கீர்த்தி சுரேஷ் சொன்ன விஷயம்

By subhashini · 24/1/2025

திருமணத்திற்கு பிறகு தன்னுடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று கீர்த்தி சுரேஷ் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவர் சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்தில் பெரிய நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

மேலும், நடிகை கீர்த்தி சுரேஷ் பழம்பெரும் நடிகை சாவித்ரி அவர்களின் வாழ்க்கை வரலாறு படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருது பெற்றிருந்தார். தற்போது இவர் பாலிவுட்டிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் கீர்த்தி சுரேஷ், சமீபத்தில் வெளியான ‘பேபி ஜான்’ படத்தில் நடித்திருந்தார். இப்படம் தமிழில் வெளியான ‘தெறி ‘படத்தின் ரீமேக் ஆகும். வருண் தவான் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தை இயக்குனர் அட்லி தயாரித்திருந்தார்.

கீர்த்தி சுரேஷ் குறித்த தகவல்:

பல எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதற்கிடையில் நடிகை கீர்த்தி சுரேஷ்- ஆண்டனி தட்டில் என்பவரை 15 வருடமாக காதலித்து வந்து இருந்தார்கள். தற்போது ஆண்டனி துபாயில் செட்டில் ஆகி இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இதை கீர்த்தி சுரேஷ் உறுதி செய்து இருந்தார். கடந்த ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி கோவாவில் பிரம்மாண்டமாக கீர்த்தி சுரேஷின் உடைய திருமணம் நடைபெற்று இருந்தது.

கீர்த்தி சுரேஷ் திருமணம்:

இவர்கள் திருமணம் இந்து, கிறிஸ்துவ முறைப்படி நடைபெற்று இருந்தது. மேலும், இந்த திருமணத்தில் விஜய், அட்லீ உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் பல உறவினர்கள் மற்றும் நண்பர்களும் இந்த திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியிருந்தார்கள். திருமணம் முடிந்த கையோடு இவர் மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். திருமணத்திற்கு பிறகு மஞ்சள் கயிறு தாலியுடன் தான் எல்லா நிகழ்ச்சிகளிலுமே கீர்த்தி சுரேஷ் கலந்திருந்தார்.

கீர்த்தி சுரேஷ் பேட்டி:

இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இருந்தது. அதற்கு பின் சென்னையில் அவருடைய மேனேஜரின் அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழா கொண்டாட்டத்தில் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய கணவருடன் கலந்து கொண்டிருந்தார். அது மட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சியில் விஜயும் தான் கலந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் திருமணத்திற்கு பிறகு தன்னுடைய வாழ்க்கை குறித்து கீர்த்தி சுரேஷ் கூறி இருப்பது, திருமணத்திற்கு பின் என்னுடைய வாழ்க்கையில் பெரிதாக எதுவும் மாறவில்லை.

திருமணத்திற்கு பின் வாழ்க்கை:

சோசியல் மீடியாவில் இருந்து ஒதுங்கியிருக்கும் என்னுடைய கணவருக்கு இது புதுசு தான். இன்ஸ்டாவில் கூட அவர் பிரைவேட் ஆக தான் வைத்திருக்கிறார். அவர் கூச்ச சுபாவம் கொண்டவர். மீடியா அட்டென்ஷன் எல்லாம் அவருக்கு கிடையாது. ஆனால், எனக்கு இது பழகிவிட்டது. எங்கு சென்றாலும் போட்டோ, வீடியோ எடுக்கிறார்கள். எனக்கு எப்போது போலும் தான் இப்போதும் இருக்கிறது. என்னுடைய கணவருக்கு இந்த ஒரு விஷயம் தான் சங்கடத்தை கொடுக்கிறது. என்னுடைய சினிமா வாழ்க்கைக்கு இது முக்கியம் என்பதை அவர் புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப நடந்து கொள்கிறார் என்று கூறி இருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full