கோலாகலமாக நடந்து முடிந்த கீர்த்தி சுரேஷின் திருமணம், யார் எல்லாம் போயிருக்காங்க தெரியுமா? வைரலாகும் புகைப்படம்

By subhashini · 12/12/2024

நடிகை கீர்த்தி சுரேஷின் திருமண புகைப்படம் தான் தற்போது இணையத்தில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவர் சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்தில் பெரிய நடிகர்களுடன் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு,ஹிந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்து இருக்கிறது. மேலும், பழம்பெரும் நடிகை சாவித்திரி அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சாவித்திரி வேடத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார். இந்தப் படம் மிக பெரிய அளவில் வெற்றி பெற்று இருந்தது. அதோடு இந்த படத்துக்காக கீர்த்தி சுரேஷ்க்கு தேசிய விருது கூட வழங்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து இவர் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

கீர்த்தி சுரேஷ் குறித்த தகவல்:

அந்த வகையில் இறுதியாக இவர் நடித்த ரகு தத்தா படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது கீர்த்தி சுரேஷ் பாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் ஹிந்தியில் பேபி ஜான் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இப்படத்தை அட்லீ தான் தயாரிக்கிறார். வருண் தவான் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதனால் கீர்த்தி சுரேஷ் சமீப காலமாக வட இந்தியாவிலேயே செட்டில் ஆகி இருக்கிறார் என்று கூறப்பட்டது.

கீர்த்தி சுரேஷ் காதலன்:

அதை அடுத்து இவர் வேறு சில படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கிடையில் சமீப காலமாக சோசியல் மீடியாவில் கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் நடக்க இருப்பதாகவும், இவர் காதலிப்பதாகவும் செய்திகள் பரவி வந்தது. ஆனால், அதைப்பற்றி கீர்த்தி சுரேஷ் எதையுமே வெளிப்படையாக பேசவில்லை. அதன் பின் இவர் ஆண்டனி தட்டில் என்பவரை தான் திருமணம் செய்ய இருக்கிறார் என்று கூறப்பட்டது. ஆண்டனி கொச்சியை சேர்ந்தவர்.

கீர்த்தி சுரேஷ் திருமணம்:

தற்போது இவர் துபாயில் செட்டில் ஆகி இருக்கிறார். ஆண்டனி-கீர்த்தி சுரேஷ் இருவருக்கும் 15 வருட பழக்கம். சில வாரங்களாகவே இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி இருந்தது. அதுமட்டும் இல்லாமல் இதை கீர்த்தி சுரேஷ் உறுதி செய்து இருந்தார். இந்நிலையில் இன்று கீர்த்தி சுரேஷின் உடைய திருமணம் கோலாகலமாக கோவாவில் நடைபெற்று இருக்கிறது. இந்த திருமணம் இந்து முறைப்படி நடைபெற்று இருந்தது.

View this post on Instagram

A post shared by Keerthy Suresh (@keerthysureshofficial)

வைரலாகும் புகைப்படம்:

மேலும், இந்த திருமணத்தில் விஜய், அட்லீ உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களும் இந்த திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியிருந்தார்கள். தற்போது தங்களுடைய திருமண புகைப்படத்தை கீர்த்தி சுரேஷ் சோசியல் மீடியாவில் பதிவிட்டிருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full