முழசா மலையாள சேச்சியாக மாறிய கீர்த்தி சுரேஷ். இந்த கெட்டப்பில் இதுவரை பார்த்திருப்பீர்களா.

By Rajkumar · 4/3/2020

மலையாள சினிமா எத்தனையோ நடிகைகளை தமிழ் சினிமாவிற்கு தாரைவார்த்துக் கொடுத்துள்ளது. நயன்தாரா துவங்கி அனுபமா பரமேஸ்வரன் மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகைகள் ஏராளம். அந்தவகையில் மலையாள சினிமா தமிழ் சினிமாவிற்கு தத்துக்கொடுத்த கேரளத்து சாவித்திரி என்று பெயரெடுத்த நடிகை கீர்த்தி சுரேஷ்ஷும் ஒருவர். தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்தில் முன்னணி நாயகியாக உயர்ந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். 2000ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகிற்கு அறிமுகமான கீர்த்தி சுரேஷ் அவர்கள் ‘கீதாஞ்சலி’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

தனது அழகாலும், திறமையான நடிப்பாலும் ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்தவர். இவர் ரஜினிமுருகன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தற்போது கீர்த்தி சுரேஷ் ரசிகர்களின் கனவுக் கன்னியாக திகழ்ந்து வருகிறார். தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து உள்ளார். தற்போது இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழி படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற பழம்பெரும் நாயகி சாவித்திரி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை “மகாநதி” என்று தெலுங்கில், “நடிகையர்-திலகம்” என்று தமிழில் படமாக எடுத்தார்கள்

மேலும், நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள் மகாநதி (தமிழில் நடிகையர்-திலகம்) படத்திற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார். பாலிவுட்டில் நடிகர் அஜய் தேவ்கான் நடிக்கும் மெய்டன் என்ற படத்தின் மூலம் கீர்த்தி சுரேஷ் ஹிந்தியில் அறிமுகமாக இருந்தது. ஆனால், தற்போது அந்த கதாபாத்திரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷுக்குப் பதிலாக நடிகை பிரியாமணியை ஒப்பந்தம் செய்துவிட்டார்கள். தற்போது சூப்பர் ஸ்டார் நடித்து வரும் அண்ணாத்த படத்திலும் நடித்து வருகிறார்.

இந்தியில் வாய்ப்பு நழுவினாலும் அம்மணி தமிழ் மற்றும் மலையாளத்தில் படு பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது மலையாளத்தில் பிரியதர்ஷன் இயக்கி வரும் வரலாற்று கதையான 'மரக்கார் ' என்ற படத்தில் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். இந்த படத்தில் நடிகர் மோகன் லால் நடித்துள்ளார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் மலையாள சேச்சியாக மாறி படு வித்யாசமான கெட்டப்பில் இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full