இந்தக் கதையை சொல்லும்போது அவரிடம் 50 ரூபாய்கூட இல்லை, ஆனால் - கென் கருணாஸ் ஓபன் டாக்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் கென் கருணாஸ். இவர் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகர் கருணாஸ் மகன் ஆவார். இவர் 2016 ஆம் ஆண்டு வெளியான அழகு குட்டி செல்லம் என்ற படத்தில் நடிகராக அறிமுகமானார். இருந்தாலும் இவரை பிரபலமாக்கியது தனுஷ் அவர்களின் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த ‘அசுரன்’ படத்தில் தான். இந்த படத்தில் கருணாஸின் மகன் கென் நடிப்பை பார்த்து பல பேர் பாராட்டினார்கள்.
இதை அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகியிருந்த விடுதலை 2 படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் கென் நடித்திருந்தார். இவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து வாத்தி என்ற படத்திலும் கென் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மத்தியில் கவனத்தை ஈர்த்தார். தற்போது இவர் யூத் என்ற படத்தை இயக்கி, ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். இந்த படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆகிறார்.
கென் கருணாஸ் குறித்த தகவல்:
இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார். அதோடு இந்த படத்தின் வெளியாக பல அறிமுக நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் சினிமாவில் அறிமுமாகி இருப்பதால் பலருக்குமே இந்த படம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. சமீபத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இதை அடுத்து கடந்த வாரம் இந்த படத்தினுடைய தெலுங்கு பதிப்பு வெளியாகி இருந்தது.
கென் பேட்டி:
அதன் பிரமோஷனில் கென், நான் யூத் கதையை பல தயாரிப்பாளர்களிடம் சொல்லி இருக்கிறேன். அனைவருக்குமே கதை பிடித்தது. ஆனால், படத்தினுடைய பட்ஜெட், நான் புதுமுக நடிகர் என்பதால் பலருமே தயங்கினார்கள். நான் அவர்களை தவறாக சொல்ல மாட்டேன். நான் எப்படி இந்த படத்தை எடுப்பேன் என்று அவர்கள் நம்புவதற்கு கஷ்டமாக இருந்தது. பிறகு என்னுடைய நண்பரும் இயக்குனருமான அம்மாமுத்து சூர்யாவிடம் எப்படியாவது என்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து இந்த படத்தை எடுத்து விடப் போகிறேன் என்றார். அப்படிதான் இந்த படத்தின் தயாரிப்பாளர் கருப்பையா எனக்கு அறிமுகப்படுத்தியிருந்தார். அவரிடம் நான் படத்தின் கதையை சொன்னேன். அதற்கு பிறகு நாங்கள் ஒரு டீ கடைக்கு சென்றோம்.
தயாரிப்பாளர் பற்றி சொன்னது:
அப்போது அவரிடம் ரூ.50 பணம் கொடுக்க கூட ஜிபே, காசு இல்லை. அவருடைய நண்பருக்கு போன் செய்து பணம் வாங்கி டீக்கு பணம் கொடுத்தார். அந்த நேரத்தில் இந்த படத்திற்கு எவ்வளவு பட்ஜெட் தேவைப்படும் என்று கேட்டிருந்தார். ஆனால், அவர் என்னை முழுமையாக நம்பினார். நான் அவரை முழுமையாக நம்பினேன். அவரிடம் நான், என்னை ஒரு ஹீரோவாக நிறுத்துவதற்கு இந்த படத்தை செய்கிறேன். உங்களுடைய பணத்திற்கு நான் பதில் அளிப்பேன். உங்களுடைய பணத்தை வீணடிக்க மாட்டேன் என்று சொன்னேன். அப்போது அவர் என் மீது அதிக நம்பிக்கை வைத்ததால் இன்று நன்றாக சம்பாதித்துக் கொண்டிருக்கிறார் என்று கூறி இருக்கிறார்.