என் வாழ்க்கைய இந்தப் படம் மாத்தும்ன்னு தெரியாது - நடிகர் கென் கருணாஸ் எமோஷனல்

By subhashini · 31/3/2026

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் கென் கருணாஸ். இவர் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகர் கருணாஸ் மகன் ஆவார். இவர் 2016 ஆம் ஆண்டு வெளியான அழகு குட்டி செல்லம் என்ற படத்தில் நடிகராக அறிமுகமானார். இருந்தாலும் இவரை பிரபலமாக்கியது தனுஷ் அவர்களின் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த ‘அசுரன்’ படத்தில் தான். இந்த படத்தில் கருணாஸின் மகன் கென் நடிப்பை பார்த்து பல பேர் பாராட்டினார்கள்.

இதை அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகியிருந்த விடுதலை 2 படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் கென் நடித்திருந்தார். இவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து வாத்தி என்ற படத்திலும் கென் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மத்தியில் கவனத்தை ஈர்த்தார். தற்போது இவர் யூத் என்ற படத்தை இயக்கி, ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். இந்த படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆகிறார்.

கென் கருணாஸ் குறித்த தகவல்:

இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார். அதோடு இந்த படத்தின் வெளியாக பல அறிமுக நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் சினிமாவில் அறிமுமாகி இருப்பதால் பலருக்குமே இந்த படம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. சமீபத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தினுடைய சக்சஸ் மீட் இன்று நடைபெற்று இருக்கிறது.

சக்ஸஸ் மீட் கென்:

இதில் பேசிய கென், நான் ஒரு படம் பண்ணி தியேட்டர் விசிட்டுக்கு போகும்போதெல்லாம் என்னை பார்த்து மக்கள் கத்துறாங்க. அதை என்னால் நம்பவே முடியவில்லை. நான் ரொம்ப ஆசைப்பட்ட ஒரு விஷயம் எல்லாம் உண்மையாக நடக்கிறது. எங்க அப்பா ஒரு விஷயம் சொன்னார். நான் ரொம்ப ஆசைப்பட்ட விஷயம் நிச்சயமாக நடக்கும்போது நமக்கு நம்புகிற மாதிரி இருக்காதுன்னு சொல்லுவார். என் ஆசையை நிறைவேற்றின தயாரிப்பாளருக்கு நன்றி. எங்க அப்பா, அம்மாவை பெருமைப்படுத்தத்தான் இந்த யூத் படத்தை நாங்க பண்ணோம்.

https://www.youtube.com/watch?v=GXCLPpQO4I8

படம் பற்றி சொன்னது:

அவங்க எல்லோருமே இப்ப சந்தோஷமாக இருக்கிறார்கள். நாங்கள் நினைத்ததை தாண்டி படம் கலெக்ஷன் ஆகி இருக்கிறது. இந்த படத்தில் நடித்த எல்லோருமே அடுத்த கட்டத்துக்கு போயிட்டு இருக்கிறார்கள், சந்தோஷமாக இருக்கிறது. எல்லா விமர்சனங்களையும் பார்த்தேன், படித்தேன். என்னோட அடுத்தடுத்த படங்களில் அது எல்லாத்தையும் மாற்ற முயற்சி செய்கிறேன். என் வாழ்க்கையை இந்த படம் மாற்றும் என்று நினைக்கவில்லை. இந்த யூத் படம் எனக்கு நிறைய சொல்லிக் கொடுத்திருக்கிறது. ஒரு ஹீரோவா இந்த படம் என்னை மாற்றி இருக்கிறது. எல்லோருக்கும் ரொம்ப நன்றி என்று எமோஷனலாக பேசி இருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full