நான் நல்ல குடும்பத்தில் பிறந்தவள் - ஆர்த்தி ரவிக்கு கெனிஷா கொடுத்த பதிலடி - நடந்தது என்ன?
ஆர்த்தி ரவிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாடகி கெனிஷா போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில வாரமாகவே சோசியல் மீடியா முழுவதும் ஆர்த்தி-ரவி மோகன் சர்ச்சை தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ரவி தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து பெறுவதாக அறிவித்திருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் பேரிடியாக விழுந்தது. அதோடு ரவி-ஆர்த்தி பிரிந்ததற்கு காரணம் பாடகி கெனிஷா தான் என்றும், இருவருக்கும் இடையே பழக்கம் இருப்பதால் தான் இவர்கள் பிரிந்தார்கள் என்றெல்லாம் செய்திகள் வந்தது.
இப்படி இவர்களுடைய பிரச்சினை நாளுக்கு நாள் சோசியல் மீடியாவில் பேசும் பொருளாகி இருக்கிறது. அதன் பின் ரவி -ஆர்த்தி விவாகரத்து வழக்கு நடந்து கொண்டு இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் ப்ரீத்தாவிற்கு சென்னையில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு தான் நடிகர் ரவி அவர்கள் கெனிஷாவுடன் ஜோடியாக வந்திருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக ஆர்த்தி அறிக்கை வெளியிட்டு இருந்தார். இதை அடுத்து நடிகர் ரவி மோகன், ஆர்த்தி எப்போதும் எனக்கு முன்னாள் மனைவி தான்.
ரவிமோகன்-ஆர்த்தி சர்ச்சை:
அதில் எந்த மாற்றமும் இல்லை. என் குழந்தைகளை நான் கவனிக்கவில்லை என்று சொல்வது முற்றிலுமே தவறு. என் குழந்தைகளை நெருங்க கூட விடுவதில்லை. என் பொறுமைக்கும் எல்லை உண்டு. கெனிஷாவை பற்றி தேவையில்லாமல் தவறான வதந்திகளை பரப்பாதீர்கள். அவர் என் உயிரை காக்க வந்த தோழி என்றெல்லாம் கூறியிருந்தார். இப்படி இவர் பேசியதை அடுத்து ஆர்த்தியின் அம்மா சுஜாதா விஜயகுமார் அறிக்கை ஒன்று வெளியிட்டு இருந்தார். இப்படி மாற்றி மாற்றி இருவர் தரப்பிலும் வாக்குவாதம் அதிகமாகி கொண்டு இருக்கிறது.
ஆர்த்தி அறிக்கை:
இதை அடுத்து ரவி மோகனின் அறிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆர்த்தி மீண்டும் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் அவர், 15 ஆண்டுகள் அவருடைய வாழ்க்கை முன்னேற்றத்திற்காக என்னுடைய சொந்த கனவுகள், லண்டனில் நான் பெற்ற முதுகலை பட்டம், இலட்சியம் என அனைத்தையும் திறந்து விட்டு தான் வாழ்ந்தேன். வாழ்க்கை முழுவதும் என்னுடன் இருப்பதாக உறுதி அளித்தார். ஆனால், அந்த வாக்குறுதியும் மீறப்பட்டது. அவருக்காக வாழாமல் எனக்காகவும் என்னுடைய லட்சியங்களுக்காகவும் நான் வாழ்ந்திருந்தால் என்னுடைய சொந்த அடையாளத்தில் இதைவிட இரண்டு மடங்கு வசதியான, ஒரு உயர்வான வாழ்க்கையை நான் வாழ்ந்து இருப்பேன். ஆனால், காதல் என்ற பெயரில்,நம்பிக்கை என்ற பெயரில் வாழ்ந்து விட்டேன்.
ஆர்த்தி ஜீவனாம்சம்:
இப்படி மாறி மாறி இரு தரப்பில் இருந்தும் அறிக்கை விட்டு விமர்சித்து வந்தார்கள். இதை அடுத்து ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என்பதற்காக ரவி மோகன் சென்னை குடும்ப நலநிதி மன்றத்தில் விளக்கம் கொடுத்து மனு தாக்கல் செய்திருந்தார். அதேபோல் ஆர்த்தி தரப்பிலும் ஜீவனாம்சம் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில் ஆர்த்தி, எனக்கு மாதம் 40 லட்சம் ரூபாய் ஜீவானம்சம் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக சொல்லப்படுகிறது. இந்த மனுவிற்கு ரவி பதிலளிக்க இந்த வழக்கை ஜூன் 12-ம் தேதிக்கு சென்னை நீதிபதி தள்ளி வைத்து உத்தரவிட்டிருந்தார்.
கெனிஷா பதிவு:
இது குறித்து பலருமே விமர்சித்து வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் கெனிஷா தன்னுடைய இன்ஸ்டாவில் சில பதிவுகளை போட்டு இருக்கிறார். அதில் அவர், நடந்ததற்கு நான் காரணம் என்று உறுதியாக இருந்தால் என்னை நீதிமன்றத்திற்கு வர வையுங்கள். எனக்கு எதிராக வெறுப்பை மட்டும் நீங்கள் மீடியாவில் பரப்பினால் தயவுசெய்து அதை நிறுத்திக் கொள்ளுங்கள். நான் ரொம்ப நல்ல குடும்பத்தில் இருந்து வந்த பெண். நீங்கள் எனக்கு கொடுக்கும் கமெண்ட்கள், சாபம், கொலை மிரட்டல் போன்ற விஷயங்களால் என்ன நிலையில் இருக்கிறேன் என்று யாராவது யோசித்தீர்களா? கர்மா பற்றி பேசி என்னை குறை சொல்கிறீர்கள். ஆனால், உண்மை வெளிவரும் போது உங்களுக்கு எல்லாம் என்ன நடக்கும் என நான் பார்க்க விரும்பவில்லை. இந்த விஷயத்தை நான் கடவுளிடம் தான் விட்டிருக்கிறேன் என்று ரொம்ப எமோஷனலாக பதிவிட்டிருக்கிறார்.