ரவிக்காக மட்டும்தான் பராசக்தி படம் ஓடும் - பிரஸ் மீட்டில் பாடகி கெனிஷா சொன்ன விஷயம்

By subhashini · 10/1/2026

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியிருந்த படம் மதராசி. இந்த படத்தை பிரபல இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் தான் இயக்கி இருந்தார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் வசூலும் பெற்று இருந்தது.

தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பராசக்தி. இந்த படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை சுதா கொங்காரா இயக்கியிருக்கிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இது ஜிவி பிரகாஷ் உடைய நூறாவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் முதலில் ஜனவரி 14-ஆம் தேதி வெளியாகுவதாக இருந்தது.

பராசக்தி:

இன்று இந்த படத்தை வெளியிட்டு இருக்கிறார்கள். இந்த படம் முழுக்க முழுக்க இந்தி திணிப்பை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தை பார்க்க பாடகியும் ரவிமோகனின் தோழியமான கெனிஷா அவர்கள் சென்னை வடபழனியில் உள்ள காசி தியேட்டருக்கு சென்றிருக்கிறார்.

https://www.youtube.com/watch?v=eKHOZX4jdwU

கெனிஷா பேட்டி:

அங்கு பராசக்தி படத்தை பார்த்துவிட்டு திரையரங்கில் இருந்து வெளியே வந்த கெனிஷா செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்திருக்கிறார். அப்போது அவர், ரவிக்காக மட்டும் தான் பராசக்தி படம் ஓடும். என் கண்ணுக்கு வேறு யாருமே தெரியவில்லை. அவருக்காக தான் இந்த படம் எடுக்கப்பட்டது போல இருக்கிறது. அவர் ஹீரோவாக நடித்தால் என்ன, வில்லனாக நடித்தால் என்ன, இந்த படத்தில் நம்பர் ஒன் அவர் தான்.

https://www.youtube.com/watch?v=tVvmbzRvULU

ரவி மோகன் பற்றி சொன்னது:

இரண்டாம் பாதியில் அவரை தவிர படமே இல்லை. ரவி எப்போதுமே எவர் கீரின். எப்போதுமே எவர் பெஸ்ட்
என்று கூறியிருக்கிறார். உடனே அங்கிருந்த செய்தியாளர் ஒருவர், ஜனநாயகன் படம் பற்றி கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். அதற்கு கெனிஷா, விஜய் நடித்த ஜனநாயகன் படம் எப்போது வெளியாகிறதோ அன்று தான் உண்மையான பொங்கல் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full