நடிகர் பிரித்திவிராஜ் மனைவி கொடுத்த புகார், தமிழ் ராக்கர்ஸ் அட்மினை தூக்கிய கேரளா போலீஸ்-பின்னணி இது தான்

By subhashini · 28/7/2024

தமிழ் ராக்கர்ஸ் இணைய தளத்தின் மீது நடிகர் பிரித்விராஜின் மனைவி அளித்திருக்கும் புகார் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீப காலமாக இணையத்தின் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. இதனால் நன்மைகள் பல நடந்தாலும், தீமைகளுமே நடக்கிறது. அந்த வகையில் இணையத்தில், திரையரங்கில் வெளியான முதல் நாளே படங்களை பதிவேற்றம் செய்கிறார்கள். இது சட்ட விரோத செயல்.

இருந்தாலும், சில இணைய தளங்கள் இதை செய்து கொண்டு தான் இருக்கிறது. இதில் தமிழ் ராக்கர்ஸ் தளமும் ஒன்று. இந்த நிலையில் தமிழ் ராக்கர்ஸ் தளத்தின் அட்மினை போலீஸ் கைது செய்து இருக்கும் சம்பவம் தான் தற்போது சர்ச்சையாகி இருக்கிறது. அதாவது, தற்போது தனுஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ராயன்.

ராயன் படம்:

இது தனுஷின் 50வது படம். இதனால் ராயன் படத்தை தனுஷே இயக்கி நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தில் துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்து இருக்கிறார். மேலும், இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

கைது செய்த அட்மின்:

இந்த நிலையில் ராயன் படத்தை கேரளாவில் உள்ள திரையரங்கில் தமிழ் ராக்கர்ஸ் தளத்தின் அட்மின் ஸ்டீபன்ராஜ் மொபைலில் பதிவிறக்கம் செய்து இருந்தார். இதை பார்த்த போலீஸ் அவரை கையும் களவுமாக கைது செய்திருக்கிறது. இவர் இதற்கு முன்பு கூட பல திரைப்படங்களை இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிட்டு இருந்தார். தற்போது இது தொடர்பாக கேரளா போலீசார் விசாரணை நடத்தி இருக்கிறார்கள்.

பிரிதிவிராஜன் மனைவி அளித்த புகார்:

இதில் 12 பேர் இணைந்து செயல்பட்டு இருப்பதாக கண்டறியப்பட்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் கடந்த மே மாதமே தமிழ் ராக்கர்ஸ் தளத்தின் மீது மலையாள நடிகர் பிரித்விராஜ் மனைவி புகார் கொடுத்திருந்தார். அதில் அவர், தன்னுடைய கணவர் பிருத்திவிராஜ் நடிப்பில் வெளியாகி இருந்த குருவாயூர் அம்பல நடையில் படத்தை தமிழ் ராக்கர்ஸ் வெளியான முதல் நாளே மொபைலில் பதிவேற்றம் செய்து இணையத்தில் வெளியிட்டு இருந்தார்கள்.

போலீஸ் விசாரணை:

இது தொடர்பாக தான் பிரிதிவிராஜன் மனைவி சுப்ரியா கொச்சி சைபர் கிரைம் போலீசாருக்கு புகார் அளித்திருந்தார். மேலும், ஸ்டீபன்ராஜ் தமிழ் ராக்கர்ஸ் தளத்தில் மட்டும் இல்லாமல் டெலிகிராம் செயலிலும் படங்களை வெளியிட்டு இருக்கிறார் என்பது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. கைது செய்யப்பட்ட ஸ்டீபன் ராஜை போலீசார் ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. தற்போது இந்த விவகாரம் தான் இணையத்தில் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full