இந்தியா முழுவதும் யாஷின் கேஜிஎப் 2 படம் கொண்டாடப்பட்டு வருகிறது. கன்னட சினிமாவின் ராக்கிங் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகர் யாஷ். இவருக்கு பெரும் புகழை ஏற்படுத்தி கொடுத்தது கே ஜி எப் திரைப்படம் தான். இந்த படம் கன்னட சினிமா வரலாற்றிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை செய்தது. இதனை தொடர்ந்து தற்போது கே ஜி எஃப் 2 படம் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் கதாநாயகியாக ஸ்ரீநிதி செட்டி நடித்திருக்கிறார். இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கி இருக்கிறார். மேலும், பல எதிர்பார்ப்புகளுடன் ஏப்ரல் 14 ஆம் தேதி கேஜிஎப் 2 படம் வெளியாகியுள்ளது. படத்தில் கருடனை கொன்று கேஜிஎப்பில் கால் தடம் பதித்து இரண்டாம் கதையை துவங்குகிறார் யாஷ் .

ஆனால், அது அங்கிருக்கும் பலருக்கு பிடிக்காமல் போகிறது. கேஜிஎப் இடத்தில் இருந்து யாஷை தூக்க வேண்டும் என்று பலரும் திட்டங்களை தீட்டுகின்றனர். இறுதியில் யாஷ் கேஜிஎப் மக்களை காப்பாற்றினாரா? எதிரிகளை துவம்சம் செய்தாரா? மக்களின் நிலைமை என்ன? என்பது தான் படத்தின் மீதி கதை. மேலும், முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் 2 மடங்கு மாசாக உருவாக்கியிருக்கிறார் இயக்குனர். நீண்ட எதிர்பார்ப்புகளுடன் இருந்த ரசிகர்களுக்கு கே ஜி எஃப் 2 படம் ஒரு சிறந்த விருந்து வைத்திருக்கிறது என்று சொல்லலாம்.

Advertisement

கேஜிஎப் 2 படத்தின் வசூல்:

இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களுடைய முழு ஆதரவையும் கொடுத்து வருகின்றனர். இதுவரை கே ஜி எஃப் 2 படம் 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இந்த படம் இந்தியா முழுவதும் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் தமிழிலும் டப் செய்யப்பட்டு கேஜிஎப் 2 படம் வெளியாகி உள்ளது. தமிழ் படங்களுக்கு இணையாக தமிழ் ரசிகர்கள் கேஜிஎப் படத்தை கொண்டாடி வருகிறார்கள். அதேபோல் வட இந்தியாவிலும் கே ஜி எஃப் 2 படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

கேஜிஎப் 2 வில்லன் குறித்த தகவல்:

மேலும், இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரத்திற்கு தமிழில் டப்பிங் செய்தவர் டப்பிங் ஆர்டிஸ்ட் ஸ்ரீநிவாச மூர்த்தி. இந்நிலையில் இவர் கேஜிஎஃப் 2 படத்தில் வில்லன் அதிராவுக்கு தமிழில் டப்பிங் செய்த அனுபவம் குறித்து பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, தெலுங்கில் வெளியான அந்நியன், சிங்கம் போன்ற படங்களுக்கு நான் தான் டப்பிங் கொடுத்தேன். அதிலும் சிங்கம் படத்தின் போது  ‘என்னோட தமிழ்ப் படத்தை விடவும், தெலுங்குல உங்களுடைய வாய்ஸை வெச்சிக்கிட்டு என்னை அங்கக் கொண்டு போயிட்டீங்கனு’ சூர்யா சொன்னார்.

Advertisement

டப்பிங் ஆர்டிஸ்ட் ஸ்ரீநிவாச மூர்த்தி அளித்த பேட்டி:

கேஜிஎப் படத்தில் வில்லன் அதிரா கதாபாத்திரத்துக்கு டப்பிங் செய்திருக்கிறேன். டயலாக் சீட் பார்த்துட்டு ரெடியாகவில்லை. எல்லாமே ஆன் தி ஸ்பாட்ல பேசுனது தான். சஞ்சய் தத் உடைய கதாபாத்திரத்திற்கு எல்லா டயலாக் பேசும் போது ரொம்ப கஷ்டப்பட்டேன். இன்னும் சொல்ல வேண்டும் என்றால் குண்டு அடிக்கு அப்புறம் கோபமாக அதிரா கதாபாத்திரம் பேசும் டயலாக் ரொம்பவே கஷ்டமாக இருந்தது. ஒரு வலியோட அந்த குரல் இருக்கணும், அதே சமயம் கோபமாகவும் பேசணும். இதைக் கொண்டு வருவதற்கு மிகவும் சிரமப்பட்டேன். இதுக்கு முன்னாடி சஞ்சய் தத் நடித்த சில படங்களுக்கு தமிழில் டப்பிங் கொடுத்து இருக்கிறேன். சில படங்களில் தெலுங்கில் கூட டப்பிங் செய்து இருக்கிறேன்.

Advertisement

அதிராவுக்கு டப்பிங் கொடுத்த அனுபவம்:

ஆனால், கேஜிஎப் படத்தில் இந்த கதாபாத்திரத்தோடு எல்லா டயலாக் பேசும் போது பிரம்மிப்பாக இருந்தது. டப்பிங் ரூமில் 50 இன்சில் டிவி இருந்தது. அதில் அதிரா கதாபாத்திரத்தை பார்த்தபோது மான்ஸ்டர் மாதிரி இருந்தார். அவர் மட்டுமே டிவி முழுவதும் தெரிந்தார். அவரோட பாடி லாங்குவேஜ் ஒத்துப்போகுதான்னு பார்த்துட்டு இருந்தேன். பின் பேசினதை ஹெட்போனில் கேட்டால் கேட்டால் சரியா இருக்காதுன்னு ஸ்பீக்கரில் செக் பண்ணினேன். எல்லா நேரமும் டயலாக் ரைட்டர் அசோக் சார் கூட இருந்தார். அவர் கிட்ட கேட்டுட்டு பண்ணுவேன். ஏன்னா, வாய்ஸ் சரியாக வரவில்லை என்றால் அது படத்தை பாதிக்கும் என்பதால் கவனமாக செய்தேன் என்று பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

Advertisement