இணையத்தில் கசிந்த கே ஜி எப் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர். குவியும் லைக்ஸ்கள்..

By Rajkumar · 7/1/2020

நான் ஈ, மஹாதீரா, பாகுபலி உள்ளிட்ட சில தெலுங்கு படங்கள் தமிழிலும் வந்து நல்ல வரவேற்பை பெற்று தமிழகத்திலும் நல்ல வசூல் சாதனைகளை செய்தது. ஆனால், அண்டை மாநிலமான கன்னட மொழியில் இருந்து எந்த படமும் தமிழ் டப் செய்யப்பட்டு வெளியாவது அரிதாக இருந்த நிலையில் முதன் முறையாக ஒரு மாபெரும் கன்னட படம் தமிழில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. அது தான் கன்னட நடிகர் யாஷ் நடித்த கே ஜி எப் திரைப்படம்.  கன்னட சினிமாவின் ராகிங் ஸ்டார் என்று அழைக்கப்படும் யாஷ் என்பவர் நடித்துள்ள இந்த திரைப்படம் இதுவரை வெளிவந்த கன்னட திரைப்படங்களிலேயே அதிக பொருட்செலவில் உருவாகி வெளியாகி இருந்தது.

https://twitter.com/Itz_Varun1/status/1214431290100862976

பிற மொழியில் நேரடியாக வெளியான இந்த படம் ஆச்சரியப்படுத்தும் விதமாக தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்ப்பை பெற்றது. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மலையாளம் என்று பல்வேறு மொழிகளிலும் இந்த படம் மாபெரும் வெற்றியடைந்து வசூல் சாதனை செய்தது. இந்த படத்தில் ஹீரோவாக நடித்த யாஷ் கடந்த ‘ஜம்பட ஹுகுடி’ என்ற கன்னட படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் கன்னடத்தில் பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு பெரும் புகழை ஏற்படுத்தி தந்தது கே ஜி எப் திரைப்படம் தான்.

இந்த படம் கன்னட சினிமா வரலாற்றிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை செய்தது. முதல் பாகம் மாபெரும் வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து இந்த படத்தின்  இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்புகள் கடந்த சில மாதங்களாக படு மும்முரமாக நடைபெற்று வந்தது மேலும் இரண்டாம் பாகத்தில் வில்லனாக ‘சஞ்சய்தத்’ ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது இந்த படத்தின் மேல் இருந்த எதிரார்பை மேலும், அதிகரித்தது. இதனால் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்தனர்.

இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி இருந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது. படு கெத்தாக இருக்கும் இந்த போஸ்டரில் ‘ஒரு சாம்ராஜ்ஜியத்தை மறுகட்டமைக்கும்போது’ என்ற வாசகத்துடன் உருவாக்கப்பட்திருந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் போஸ்டர் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. ஆனால், இந்த போஸ்டர் அதிகார பூர்வமாக வெளியிட்ட போஸ்டர் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


Tamil Behind Talkies AMP · Quick view
View full