முதன் முறையாக தனது மகளின் புகைப்படத்தை வெளியிட்ட கே ஜி எப் நடிகர் யாஷ்.!
பாகுபலி உள்ளிட்ட சில தெலுங்கு படங்கள் தமிழிலும் வந்து வரவேற்பை பெற்றன. இந்நிலையில் முதன் முறையாக ஒரு மாபெரும் கன்னட படம் தமிழில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. அது தான் கன்னட நடிகர் யாஷ் நடித்த கே ஜி எப் திரைப்படம்.
https://www.instagram.com/p/BxJqlP-nAlQ/?igshid=sr30ks1v21uv
கன்னட சினிமாவின் ராகிங் ஸ்டார் என்று அழைக்கப்படும் யாஷ் என்பவர் நடித்துள்ள இந்த திரைப்படம் இதுவரை வெளிவந்த கன்னட திரைப்படங்களிலேயே அதிக பொருட்செலவில் உருவாகி வெளியாகியுள்ளது. கன்னடம் ,தமிழ் மொழியில் நேரடியாக வெளியாகியது.
யாஷ் கடந்த 'ஜம்பட ஹுகுடி' என்ற கன்னட படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் கன்னடத்தில் பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு பெரும் புகழை ஏற்படுத்தி தந்தது கே ஜி எப் திரைப்படம் தான். யாஷ் கடந்த 2016 ஆம் ஆண்டு ராதிகா பண்டித் என்ற நடிகையை திருமணம் செய்த்துக்கொண்டார்.
இவர்கள் இருகிவருக்கும் 2018 ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. இதில் கவனிக்கவேண்டிய விடயம் என்னவென்றால் யாஷ்சை விட அவரது மனைவி இரண்டு வயது மூத்தவர். இதுநாள் வரை தனது மகளின் புகைப்படத்தை வெளியிடாத யாஷ் முதன் முறையாக தனது மகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.