நடிகையாக என்ட்ரி கொடுக்கும் குஷ்பூ மகள், முதல் படமே எந்த மொழி தெரியுமா? வெளியான மாஸ் அப்டேட்
தென்னிந்திய சினிமா திரை உலகில் உள்ள முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் குஷ்பூ. இவர் நடிகை மட்டுமல்லாமல் அரசியல்வாதியும் ஆவார். இவர் சினிமா திரை உலகில் 1980களில் வெளி வந்த படங்களில் குழந்தை நட்சத்திரமாக தான் முதலில் அறிமுகமானார். பின் 1989 ஆம் ஆண்டு ‘வருஷம் 16’ என்ற தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். பின்னர் நடிகை குஷ்பூ 90களில் தமிழ் திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்து இருந்தார்.
அதோடு ஒரு காலகட்டத்தில் இளைஞர்களின் கனவுக் கன்னியாக திகழ்ந்தவர் நடிகை குஷ்பு. மேலும், இவர் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற பல மொழி படங்களில் நடித்து உள்ளார். தற்போது குஷ்பூ படங்களில் குணச்சித்திர வேடங்களிலும்,சின்னத்திரையிலும் நடித்து வருகிறார். இதற்கிடையில் குஷ்பூ அவர்கள் இயக்குனர் சுந்தர்.சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என்ற இரு மகள்கள் இருக்கிறார்கள்.
குஷ்பூ குறித்த தகவல்:
இவர்கள் இருவரும் குஷ்புவை போல மிகவும் குயூடாக பப்லியான தோற்றத்தில் தான் இருந்தார்கள். இதனால் இவர்கள் உருவத்தை வைத்து பல முறை உருவ கேலி கிண்டல்களை செய்து இருந்தார்கள். பின் குஷ்பூ மகள்கள் உடல் எடையை குறைத்து படு ஸ்லிம்மாக மாறிய இருந்தார்கள். மேலும், குஷ்புவின் மகள் அவந்திகா லண்டனில் நடிப்பு பயிற்சி படித்து முடித்து இருக்கிறார். இவருக்கு நடிப்பின் மீது அதிக ஆர்வம் இருப்பதால் சினிமாத்துறையில் என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.
அவந்திகா குறித்த தகவல்:
இவர் ஏற்கனவே மணிரத்தினிடம் உதவி இயக்குனராக பணியாற்றியிருந்தார். பொன்னியின் செல்வன், பொன்னியின் செல்வன் 2 , தக் லைப் போன்ற படங்களில் எல்லாம் பணியாற்றி இருந்தார். சில மாதங்களுக்கு முன்பு நகைக்கடை விளம்பரத்தில் கூட மாடலாக அவந்திகா நடித்து இருந்தார். அதை பற்றி கூட குஷ்பூ எமோஷனலாக பதிவு ஒன்று போட்டு இருந்தார். இந்த நிலையில் தற்போது அவந்திகா சினிமாவில் நடிக்க இருக்கும் தகவல் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அவந்திகா நடிக்கும் படம்:
அதாவது. இவர் ஆரம்பம் என்ற படத்தில் மூலம் தான் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார். சுஜேஷ் இயக்கம் இந்த படத்தினுடைய பூஜை திருச்சூரில் நடைபெற்றது. இந்த படத்தில் அவந்திகா, சரிதா இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். அவந்திகா தமிழ் சினிமாவில் அறிமுகமாகுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மலையாள படத்தின் மூலம் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுக்கிறார். இந்த படம் தமிழிலும் வெளியாகும் என்று கூறப்படுகிறது.