மணிரத்தினமும், ரஹ்மானும் என் வாழ்க்கையில் விளையாடிட்டாங்க - தனது காதல் குறித்து குஷ்பூ பேட்டி

By Rajkumar · 14/7/2024

பிரபல நடிகை குஷ்பூ தனது காதல் மற்றும் திருமண வாழ்க்கை பற்றி பேட்டியில் கூறியிருக்கும் விஷயம் தான் தற்போது வைரலாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் 90 காலகட்டங்களில் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர் நடிகை குஷ்பு. இவர் 1998 ஆம் ஆண்டு 'வருஷம் 16' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர். அந்த காலத்திலேயே இவருக்கு ரசிகர்கள் சிலை வைத்தார்கள். இவர் நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், தொகுப்பாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டு திகழ்கிறார்.

மேலும், நடிகை குஷ்பு மற்றும் இயக்குனர் சுந்தர்.சி காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சுந்தர் சி ஆரம்பத்தில் இயக்குனர் மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இவர் இயக்குனராக அறிமுகமான 'முறைமாமன்' படத்தில், நடிகை குஷ்பு தான் ஹீரோயின் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்குப் பிறகு சுந்தர்.சி அவர்கள் தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்கள் கொடுத்திருக்கிறார். இந்நிலையில் நடிகை குஷ்பூ தனது காதல் மட்டும் திருமணம் பற்றி பேட்டி ஒன்று அளித்துள்ளார்.

குஷ்பு பேட்டி:

அதில், சுந்தர்.சி இயக்கிய 'முறை மாமன்' திரைப்படத்தில் நான் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்தேன். அப்போதே அவருக்கு என் மீது காதல் ஏற்பட்டு இருக்கிறது. அந்தப் படத்தின் முழு யூனிடமும் குஷ்புவை நான் காதலிக்கிறேன் என்று சுந்தர்.சி சொல்லி இருக்கிறார். அதற்கு அவர்கள் இப்பதான் நீ இயக்குனராக அறிமுகமாக இருக்கிறாய். இப்ப போய் நீ அந்த பொண்ணு கிட்ட காதலை சொன்னா, அந்தப் பொண்ணு பாதியிலேயே படத்தை விட்டுப் போயிடும் என்று கூறியிருக்கிறார்கள். அதற்கு சுந்தர்.சி பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லி இருக்கிறார்.

https://www.youtube.com/watch?v=FQ2qmmHQdu8

பம்பாய் திரைப்படம்:

'முறைமாமன்' திரைப்படத்தின் சூட்டிங் போது தான், 'பம்பாய்' படம் ரிலீஸ் ஆனது. எனக்கு இயக்குனர் மணிரத்தினமும், இசையமைப்பாளர் ரஹ்மானும் ரொம்ப பிடிக்கும். அதனால், அந்த படத்தை நான் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அப்போது என்னுடைய ஆன்ட்டி கூட வராத காரணத்தால், நானும் சுந்தர்.சி மட்டும்தான் படத்திற்கு போனோம். சொல்லப்போனால் 'ரஹ்மானும் மணிரத்தினமும் என் வாழ்க்கையில் விளையாடி விட்டார்கள்' என்று சொல்வேன். அப்போது நடிகை குஷ்பூ வந்திருக்காங்க அப்படின்னு, ரசிகர்கள் தியேட்டருக்கு வர தொடங்கிட்டாங்க.

இளையராஜா பிஜிஎம் :

உடனே தியேட்டர் ஓனர் படத்தை நாங்கள் நிறுத்தி விடுகிறோம். இல்லையென்றால் ரசிகர்கள் தியேட்டரை அடித்து நொறுக்கி விடுவாங்க என்று சொல்லிட்டார். என்னையும் வெளியே கூட்டிட்டு போக சொல்லி சுந்தர்.சி இடம் சொல்ல, அவரும் என் கையைப் பிடித்து கூட்டிட்டு வெளியே வந்து விட்டார். அந்த நேரத்தில் என்னுடைய மனதில் இளையராஜாவின் பிஜிஎம் தான் மனதிற்குள் ஓடியது. அதற்குப் பிறகு என்னிடம் கதை சொல்ல வேண்டும் என்று, என் வீட்டிற்கு சுந்தர்.சி வருவார். ஆனால் கதையை இன்டர்வெல் வரைக்கும் மட்டும் சொல்லிவிட்டு போய்விடுவார். அதுபோல் மூன்று நாட்கள் செய்தார். நான்காவது நாள் நான் கதை கேட்க மறுத்து விட்டேன். ஏனென்றால் முதல் பாதியை மட்டும் கேட்டு எனக்கு போர் அடித்து விட்டது என்று சுந்தர்.சி இடம் சொல்லிவிட்டேன்.

சுந்தர்.சி ப்ரோபோசல்:

அதற்கு அவர், 'சரி அது இருக்கட்டும் நமக்கு நாளைக்கு கல்யாணம் முடிந்து குழந்தை பிறந்தால் அது என்னை மாதிரி இருக்குமா? இல்லை உங்களை மாதிரி இருக்குமா? என்று கேட்டார். எனக்கு உடனே திக் என்றது. 'நீங்க எனக்கு ப்ரொபோஸ் பண்றீங்களா' என்று அவரிடம் கேட்டேன். அதற்கு அவர், 'ஆமாம் எனக்கு இப்படி தான் சொல்ல தெரியும். நீங்க வேணும்னா என் கையில் பூ இருக்கிறதா நினைச்சுக்கோங்க, நான் இப்போ உங்ககிட்ட ப்ரொபோஸ் பண்றேன்' என்று காதலை சொல்ல, எனக்கு பிடித்து விட்டது. ஐந்து வருடங்கள் காதலித்து பிறகுதான் திருமணம் செய்து கொண்டோம். இடையில் நிறைய சண்டைகள் போட்டாலும், ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்க மாட்டோம். எங்களுடைய திருமண வாழ்க்கை அதனால் தான் மகிழ்ச்சியாக போய்க்கொண்டிருக்கிறது என்று குஷ்பூ பூரிப்போடு கூறியிருந்தார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full