8 வயதில் தனது தந்தையால் குஷ்பூவிற்கு நடந்த கொடுமை - அவரே சொன்ன ஷாக்கிங் உண்மை.

By Manikandan · 6/3/2023

தமிழ் சினிமா உலகில் 90 கால கட்டங்களில் முன்னணி நடிகையாக கொடி கட்டி பறந்தவர் குஷ்பு. இவர் முதன் முதலாக 1980களில் தான் தன்னுடைய சினிமா பயணத்தைத் தொடங்கினார். பின் குஷ்பூ அவர்கள் தமிழ் ,தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி திரைப் படங்களில் நடித்து உள்ளார். இவர் தமிழ் சினிமா உலகில் ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்க்குமார், விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் படங்களில் நடித்து உள்ளார். நடிகை குஷ்பு படங்களில் நடிகை மட்டுமில்லாமல் அரசியல்வாதியும் ஆவார். குஷ்புவின் மீது உள்ள அன்பினால் அந்த காலகட்டத்திலேயே அவருக்கு கோவில் கட்டினார்கள் அவரின் ரசிகர்கள்.

சினிமாவில் பிரபலமான திரைப்பட இயக்குனர் சுந்தர்.சியை 2001ம் ஆண்டு நடிகை குஷ்பூ அவர்கள் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என்ற இரு பெண்கள் உள்ளார்கள். தற்போது நடிகை குஷ்பு அவர்கள் வெள்ளித்திரை படங்களில் குணசித்திர வேடங்களிலும், சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும், நடுவராகவும் பணியாற்றி வருகிறார்.

அரசியல் :

இதனை தொடர்ந்து கடந்த 2010ஆம் ஆண்டு அரசியலில் களமிறங்கினார். முதலில் திகமுகவில் இணைந்த அவர் பின்னர் அதிலிருந்து பிரிந்து 2014ஆம் ஆண்டு காங்கிரசு கட்சியில் சேர்ந்து விட்டார். இந்நிலையில் மீண்டும் அந்த கட்சியில் இருந்து பிரிந்து 2020ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்து விட்டார். பின்னர் 2021ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் நின்று படு தோலிவி அடைந்த குஷ்பு தற்போது பாஜக தேசிய மகளீர் ஆணைய உறுப்பினராக உள்ளார்.

நிகழ்ச்சியில் பேசிய குஷ்பு :

இந்த நிலையில் தான் "தி வுமன்" நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மோஜோ ஸ்டாரிக்காக பர்கா தத்துடன் அவர் பேசிய போது நடிகை குஷ்பூ யாரும் அறியாத ஒரு பரபரப்பு தகவலை கூறினார். அவர் கூறியதாவது "ஒரு பெண் குழந்தையையோ, ஆண் குழந்தையையோ துஷ்பிரயோகம் செய்யப்படும் போது அது அந்த குழந்தையின் வாழ்நாள் முழுவதும் மறையாத வடுவாக இருக்கும். என்னுடைய தாய் மிகவும் மோசமான திருமண வாழ்க்கையை அனுபவித்தார்,

தந்தை பற்றி கூறியது :

தன்னுடைய மனைவியை அடிப்பதும், தன்னுடைய ஒரே மகளை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்வதும் தன்னுடைய பிறப்புரிமை என்பது போல நினைத்து கொண்டிருந்த ஒரு மனிதன். எனக்கு பாலியல் ரீதியாக தொல்லை என்னுடைய 8 வயதில் தொடங்கியது. ஆனால் ஒரு கட்டத்திற்கு மேலே பொறுக்க முடியாமல் அந்த விஷியத்தை எதிர்த்து என்னுடைய 15 வயதி எதிர்த்து பேச ஆரம்பித்தேன். இதனை என்னுடைய அம்மா நம்புவார் என்று தெரியவில்லை. என்னேற்றால் கணவனே கண்கண்ட தெய்வம் என இருந்தார்.

இந்த மன உறுதிக்கு காரணம் :

எனக்கு அப்போது 16 வயது கூட ஆகவில்லை. எங்களிடம் இருந்த அனைத்தையும் அவர் எங்ககளிடமே விட்டு விட்டு சென்றுவிட்டார். அடுத்த வேலை உணவு எங்கிருந்து வரும் என்று தெரியாத சூழ்நிலை அது. இது போன்ற சம்பவங்கள் என்னை சிறு வயதிலேயே வலிமையான மன உறுதியை கொடுத்தது என்று அந்த நிகழ்ச்சியில் பேசியிருந்தார். தென்னிந்தியாவில் பிரபலமான இருக்கும் குஷ்பு இப்படி தன்னுடைய அப்பா பற்றி கூறியுள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full