எனக்கு ஆங்கர் ஆகுறதுக்கு முன்னாடியே நடிக்க வாய்ப்பு வந்தது, ஆனா அவரு வேணவே வேணாம்னு சொல்லிட்டாரு - கிகி சொன்ன காரணம்
தன்னுடைய மீடியா பயணம் குறித்து முதன் முதலாக மனம் திறந்து நடிகை கீர்த்தி சாந்தனு அளித்திருக்கும் பேட்டி வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எத்தனையோ நிகழ்ச்சிகள் மக்களுக்கு பிடித்தமான வகையில் கொண்டு செல்வதில் தொகுப்பளர்களுக்கும் முக்கிய பங்கு இருக்கிறது. அதிலும் ஆண் தொகுப்பாளர்களை விட பெண் தொகுப்பாளர்கள் தான் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம்பிடித்து விடுகின்றனர்.
டிடி, பாவனா, ரம்யா என்று இப்படி சொல்லிகொண்டே போகலாம். அந்த வகையில் பெண் தொகுப்பாளிகளின் லிஸ்டில் கிகியும் ஒருவர். தொகுப்பாளினி கீர்த்திக்கு அறிமுகம் தேவையில்லை. இவர் பிரபல தமிழ் சேனல்களில் பல வருடங்களாக ஒளிபரப்பான 'மானாட மயிலாட' நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியவர். இவர் தொகுத்து வழங்கிய `மானாட மயிலாட’ நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள்.
கிகி குறித்த தகவல்:
இதை அடுத்து கிகி `ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ்’ நிகழ்ச்சியின் தொகுப்பாளராக, குழந்தைகளின் ஃபேவரைட் அக்காவாக வலம் வந்தார். மேலும், இவர் பிரபல நடன இயக்குனர் கலா மாஸ்டரின் உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனிடையே கிகி பிரபல நடிகர் பாக்யராஜ் மகன் சாந்தனுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணதிற்கு பின்னரும் தனது தொகுப்பாளினி பணியை தொடர்ந்து வருகிறார் கிகி.
கிகி ஸ்கூல்:
அதோடு கிகி டான்ஸ் ஸ்கூல் ஒன்றை தனியாக தொடங்கி வெற்றிகரமாக இயக்கி நடத்தி வருகிறார். அதே போல இவர்கள் இருவரும் இணைந்து யூடுயூபில் சேனல் தொடங்கி இருக்கிறார்கள். அதில் இவர்கள் வெளியிடும் வீடியோக்கள் பிரபலம் ஆகி லைக்ஸ்களை குவித்து விடுகிறது. இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் கிகி, மாநாட மயிலாட நிகழ்ச்சிக்கு முன்பே எனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்தது.
கிகி பேட்டி:
அப்பா நடிப்பதற்கு அனுமதி கொடுக்கவே இல்லை. என்னுடைய அம்மாவும் ஒரு நடிகை தான். ஆனால், திருமணம் ஆனபிறகு அம்மா நடிப்பில் இருந்து விலகிவிட்டார். அப்பாவுக்கு சுத்தமாகவே மீடியாவில் இருப்பது பிடிக்கவில்லை. அதனால் நடிக்கக்கூடாது என்று சொல்லிவிட்டார். வாய்ப்பு வந்தாலுமே வேண்டாம் என்று சொல்லிவிடுவார். அதற்குப் பின் கலா ஆன்ட்டி மாநாட மயிலாட என்ற நிகழ்ச்சியை இயக்கி இருந்தார்.
https://www.youtube.com/shorts/kCdNEQJVrIg
சினிமா வாய்ப்பு குறித்து சொன்னது:
அந்த நிகழ்ச்சியில் பணிபுரிந்த பல பேர் எங்களுடைய குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான். இது ஒரு குடும்பமாக சேர்ந்து பண்ணுவதால் தொகுப்பாளராக என்னை அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அப்பாவிடம் அனுமதி கேட்டார்கள். அப்பா ஆரம்பத்தில் தாங்கினாலும் குடும்பத்தில் உள்ள எல்லோருமே சேர்ந்து இந்த நிகழ்ச்சி பண்ணுவதால் தொகுப்பாளராக இருப்பதற்கு ஒத்துக்கொண்டார். அப்படித்தான் நான் மீடியாவில் நுழைந்தேன் என்று கூறியிருக்கிறார்.