'ஸ்டான்ட் எடுத்துட்டு ஓட்ரா' - கேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கிங் காங் வெளியிட்ட வீடியோ.

By Arun · 30/3/2024

தமிழ் சினிமா உலகின் மிக பிரபலமான நகைச்சுவை நடிகர் கிங் காங். இவரை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அதுமட்டும் இல்லாமல் இவருடைய உண்மையான பெயர் பாதி பேருக்கு தெரியாது. நடிகர் கிங் காங் உடைய உண்மையான பெயர் ‘சங்கர்’. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளி வந்து வெற்றி நடை போட்ட ‘அதிசய பிறவி’ என்ற படத்தின் மூலம் தான் நடிகர் கிங் காங் அவர்கள் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இந்த படத்தில் நடிகர் கிங் காங் ஆடிய டான்ஸ் இப்போது பார்த்தால் கூட சிரிப்பை அடக்க முடியாது. அந்த அளவிற்கு தூளாக இருந்தது.

பிறகு தான் நடிகர் கிங் காங் அவர்களுக்கு சினிமாவில் பல பட வாய்ப்புகள் நிறைய வந்து குவிந்தன. இதுவரை இவர் ஐந்து மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் தன்னுடைய நடிப்பு திறனால் மக்களிடையே பாராட்டுகளை பெற்றவர். மேலும், இவர் நடித்த படங்களின் மூலம் மக்களிடையே நல்ல வரவேற்பையும், பாராட்டையும் பெற்றவர்.

கிங் காங் செய்த சாதனை:

இவர் அதிகமாக காமெடி நடிகர் வைகை புயல் வடிவேலுடன் இணைந்து செய்யும் நகைச்சுவை காட்சிகள் அனைத்தும் பயங்கரமாக இருக்கும். அதுமட்டும் இல்லாமல் சிரித்து சிரித்து வயிறு வலிக்கும் அளவிற்கு இவரின் காமெடி இருக்கும். மேலும், நடிகர் கிங் காங் அவர்கள் 1990 கால கட்டங்களில் தமிழ் சினிமா உலகில் பிரபலமான கவுண்டமணி, செந்தில், வடிவேலு போன்ற பல காமெடி நடிகர்களுடன் இணைந்து நடித்து இருக்கிறார்.

அதோடு நடிகர் கிங் காங் அவர்களுக்கு 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வேலூரில் உள்ள ஒரு பல்கலை கழக கல்லுரில் கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கி இருந்தார்கள்.இதனைத் தொடர்ந்து சினிமாவில் இவருடைய நடிப்புத் திறனுக்காக தேசிய விருது வழங்கி உள்ளார்கள். இது ஒரு பக்கம் இருக்க இவர் கலா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

இப்படி ஒரு நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கிங் காங் தனது மகனுடன் கலந்து விளையாடி இருந்தார். அதே போல இவருக்கு இரண்டு மகள்கள் கூட இருக்கின்றனர. சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அவரின் மகள் நம்ம அப்பா ஏண்டா இவ்வளவு குள்ளமாக இருக்கிறார் என்று என்னைக்குமே நினைத்தது கிடையாது. அது தான் அவர் பிளஸ், அவர் இப்படி இருப்பது தான் எனக்கும் ரொம்ப பிடித்திருக்கிறது' என்று கூறி இருந்தார்.

View this post on Instagram

A post shared by Behind Talkies (@behindtalkies)

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் புல்லட்டில் அமர்ந்தவாரு புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார். இதனை கண்ட ரசிகர்கள் பலர் பாராட்டினாலும் ஒரு சிலர் ஸ்டான்ட் எடுத்துட்டு ஓட்டுங்க என்று கேலி செய்தனர். இதற்கு பதிலடி கொடுக்கு வகையில் புல்லட் ஒட்டிய வீடியோ ஒன்றை பகிர்ந்து பதிலடி கொடுத்துள்ளார் கிங் காங்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full