ஜாபர் சாதிக் கொடுத்த வாக்குமூலத்தால் சர்ச்சையில் சிக்கிய மங்கை. சர்ச்சைக்கு மத்தியில் கிருத்திகா போட்ட பதிவு.

By Rajkumar · 10/3/2024

போதைப்பொருள் கடத்தல் பணத்தில் தான் கிருத்திகா உதயநிதி இயக்கும் மங்கை திரைப்படம் தயாரிக்கப்பட்டதாக தகவல் உலா வரும் நிலையில் கிருத்திகா வெளியிட்டுள்ள பதிவு கேலிக்கு உள்ளாகி வருகிறது. சமீப காலமாகவே போதை பொருள் கும்பலை கைது செய்யும் நடவடிக்கை நடைபெற்று வருகிறது. இதனால் கடந்த சில மாதங்களாக டெல்லியில் போதை பொருள் கடத்தல் கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்து இருந்தது. அந்த வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன் டெல்லியில் இரண்டு போதைப் பொருள் குடோனில் போலீசார் சோதனை நடத்தி இருந்தது.

https://twitter.com/Muthuhere3/status/1766697419478032843

அதில் சுமாராக 1700 கிலோ மெப்பட்ரோன் என்ற போதை பொருளை பறிமுதல் செய்யப்பட்டது. அதற்பின் ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்துக்கு 50 கிலோ போதை பொருளை கடத்த முயன்ற போது டெல்லி மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு மற்றும் டெல்லி போலீஸ் இணைந்து அதிரடியாக சோதனை நடத்தி கைது செய்திருக்கிறார்கள். தேங்காய் பொடி மற்றும் ஊட்டச்சத்து பவுடருடன் சேர்த்து இந்த சூடோ பெடரின் எனப்படும் போதைப் பொருளை கடத்த முயற்சித்து இருந்தார்கள்.

போதை பொருள் கடத்தல் கும்பல்:

பின் போலீஸ் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடம் விசாரிணை நடத்தி இருக்கிறார்கள். அப்போது விசாரணையில் இந்தியாவில் கடந்த மூன்று ஆண்டுகளாக டெல்லியை மையமாக வைத்து தான் வெளிநாடுகளுக்கு போதைப்பொருள் கடத்தப்படுவது தெரிய வந்திருக்கிறது. மேலும், 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த போதை பொருள் கடத்தலுக்கு முக்கிய நபராக செயல்பட்டவர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் என்பவர் தெரிய வந்திருக்கிறது.

https://twitter.com/naturaize/status/1766708394180689942

போலீஸ் விசாரணை:

இவர் இதுவரை இறைவன் மிகப் பெரியவன், இந்திரா போன்ற படங்களை தயாரித்து இருந்தார். தற்போது இவர் கயல் ஆனந்தி நடித்து இருக்கும் மங்கை என்ற திரைப்படத்தை தயாரித்து இருப்பது தெரிய வந்திருக்கிறது. அதோடு இவர் போதை பொருள் சாம்ராஜ்யத்தின் தலைவராக இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் தன்னுடைய சகோதரர்கள் மைதீன் மற்றும் சலீம் ஆகியோருடன் இணைந்து தான் இந்த போதப்பொருள் கடத்தலில் ஈடுபடுகிறார் என்று கூறப்படுகிறது.

மங்கை படம்:

மேலும், மைதீன், இறைவன் மிகப் பெரியவன் என்ற திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். அதேபோல் சலீம் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இதை அடுத்து போலீஸ் ஜாபரை கைது செய்து அடுத்த கட்ட விசாரணை நடத்தி இருக்கிறது. இந்த படத்தை அமைச்சர் குபேந்திரன் காமாட்சி என்பவர் இயக்கியிருக்கிறார். மார்ச் 1ஆம் தேதி கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகி இருந்த மங்கை திரைப்படம் வெளியிடுவதாக இருந்தது. ஆனால், இவர் போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் ஈடுபட்டதால் இந்த படம் வெளியாகவில்லை.

கிருத்திகா பதிவு :

அது மட்டும் இல்லாமல் படம் குறித்த அப்டேட்டும் தெரியவில்லை. இதனை அடுத்து போதை பொருள் தடுப்பு பிரிவினரின் விசாரிக்கையில் மங்கை படத்தை போதை பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தில் தான் தயாரித்ததாக ஜாபர் சாதிக் ஓப்பு கொண்டிருக்கிறார். இப்படி ஒரு நிலையில் கிருத்திகா உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில் 'சமூக ஊடகங்களில் மனிதர்களின் நடவடிக்கைகளை பார்த்தல் வியப்பாக இருக்கிறது. எல்லோரும் கொஞ்சம் பைத்தியமாகிவிட்டனர்' என்று பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/youturn_in/status/1766727488682463609

உண்மை என்ன :

இதனை கண்ட நெட்டிசன்கள் பலரும் பல விதமான கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். இதற்க்கு காரணம் பலரும் மங்கை படத்தின் இயக்குனர் கிருத்திகா என்று நினைத்து வருகிறார்கள். ஆனால், உண்மையில் அந்த படத்தின் இயக்குனர் அவர் கிடையாது. சவுக்கு சங்கர் ஒரு பதிவில் 'சின்ன அண்ணி இயக்கம் படத்தை தயாரிப்பவர் போதை மருந்து கடத்துபவரா?' என்று பதிவிட்டு இருந்தது தான் காரணம்..

Tamil Behind Talkies AMP · Quick view
View full