நிலங்களை வளைத்து போட்டு பங்களா காட்டுறாங்க - பிரகாஷ் ராஜ் மீது கொடைக்கானல் மக்கள் பரபரப்பு புகார்.

By Rajkumar · 23/8/2023

கொடைக்கானல் விவசாயிகள் பிரகாஷ்ராஜ் மீது அளித்திருக்கும் குற்றச்சாட்டு தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பொதுவாகவே தமிழ்நாட்டில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ஒவ்வொரு மாதமும் நடைபெறும். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்ட கொடைக்கானலில் வருவாய் கோட்டாட்சியர் ராஜா தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றிருக்கிறது.

இந்த கூட்டத்தில் அந்த பகுதியில் வாழும் விவசாய மக்கள் தங்களுடைய பிரச்சனைகளை வருவாய் கோட்டாட்சியர் இடம் கூறியிருக்கிறார்கள். அப்போது அவர்கள் பேத்துப்பாறை பகுதி ஊர் தலைவர் மகேந்திரன், நடிகர் பிரகாஷ்ராஜ், பாபி சிம்மா மீது புகார் கொடுத்திருக்கிறார்கள். அதில் அவர்கள் கூறியிருப்பது, கிட்டத்தட்ட 15 வருடமாக நாங்கள் இருக்கும் பகுதியில் சாலைகள் போடவில்லை.

கடந்த மே ஒன்றாம் தேதி நடந்த கிராம சபை கூட்டத்தில் சாலை அமைக்க வேண்டும் என்று நாங்கள் தீர்மானம் நிறைவேற்றினோம். அதன் பிறகு அந்த இடத்தில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால், அதற்கு பிரகாஷ்ராஜ் பணம் கொடுத்ததாக சொல்கிறார். அரசுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் பாமி சிம்ஹா மூன்று மாடி கட்டிடம் கட்டி வருகிறார். மலை கிராம விவசாயிகள் பயன்படுத்தும் சாலையை ஆக்கிரமித்து அப்பகுதியில் செல்லும் விவசாயி இடம் தவறாக நடந்து கொள்கிறார்கள்.

https://www.youtube.com/watch?v=InWQss8WsnA

இது குறித்து கேட்டால் ஒருமையில் பேசி திட்டுகிறார்கள். அந்த இடத்தை ஒரு லட்சம், இரண்டு லட்சத்திற்கு விற்பதாக இருக்கிறார்கள். கட்டிடம் கட்டுகிறார்கள். அதற்கு எதிர்ப்புறமான இடத்தில் ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு இடத்தை தோன்றுகின்றார்கள். இதில் ஏதோ முறைகேடு நடக்கிறது என்று மட்டும் எங்களுக்கு புரிகிறது. அனுமதியில்லாமல் இவர்கள் அரசாங்கத்தில் நடந்து கொள்வது தவறான ஒன்று.

இதற்கு அரசாங்கம் தான் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கூறியிருக்கிறார்கள். தற்போது இந்த விவகாரம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது இதனை அடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பாரா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். ஏற்கனவே நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்வதற்கான சந்திரயான்-3 விண்கலத்தை இந்தியா செலுத்தி இருக்கிறது. இந்த விண்கலம் இன்று நிலவில் தரையிறங்க இருக்கிறது.

மேலும், சந்திராயன் விண்கலம் நிலவில் இறங்குவது குறித்து பிரகாஷ்ராஜ் கிண்டலடித்து பதிவிட்டிருக்கும் டீவ்ட் சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சை கிளப்பி இருந்தது. இதனால் அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல பேர் புகார் அளித்திருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் அரசாங்க இடம் ஆக்கிரமிப்பு விவகாரத்தில் மீண்டும் பிரகாஷ்ராஜ் சிக்கி இருப்பது கவலைக்கிடமாக இருக்கிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full