தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்திருக்கிறது. சமீபத்தில் தான் விஜய் ஆண்டனி நடிப்பில் பிச்சைக்காரன் 2 படம் வெளியானது. இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை கொடுத்தது. இதனை அடுத்து தற்போது விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் கொலை. இந்த படத்தை பாலாஜி கே குமார் இயக்கி இருக்கிறார். இந்த படத்தை Infiniti Film Ventures மற்றும் Lotus Pictures இணைந்து தயாரித்திருக்கிறது. திரில்லர் பாணியில் இந்த படத்தை இயக்குனர் உருவாக்கி இருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகிருக்கும் கொலை படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:

படத்தில் மிகப் பிரபலமான மாடலாக லைலா இருக்கிறார். திடீரென்று ஒரு நாள் இவர் வீட்டில் மர்மமான முறையில் இறந்து இருக்கிறார். இந்த கேஸ் காவல்துறை அதிகாரியாக இருக்கும் ரித்திகா சிங்கிடம் வருகிறது. ஒரு வாரத்திற்குள் இந்த கேசை முடிக்க வேண்டும் என்று மேல் அதிகாரிகள் ரித்திகா சிங்குக்கு எச்சரிக்கை கொடுக்கிறார்கள். இதனால் என்ன செய்வது என்று புரியாமல் இருந்த ரித்திகா, விஜய் ஆண்டனி இடம் உதவி கேட்கிறார்.

Advertisement

ஆனால், விஜய் ஆண்டனி இந்த கேசை எடுத்துக் கொள்ள முடியாது என்று கூறுகிறார்.
பின் விஜய் ஆண்டனி இந்த கேசை சில காரணங்களை எடுத்து கொள்கிறார். மேலும், இந்த கேசை ரித்திகா, விஜய் ஆண்டனி இணைந்து விசாரிக்கத் துவங்குகிறார்கள். இறுதியில் இந்த கொலையை யார் செய்கிறார்கள்? கொலைக்கு பின்னணி என்ன? குற்றவாளியை விஜய் ஆண்டனி கண்டுபிடித்தாரா? எதற்காக லைலா கொலை செய்யப்பட்டார்? என்பதே படத்தின் மீதி கதை.

படத்தில் விஜய் ஆண்டனி அவர்கள் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். ஆனாலும், அவருடைய நடிப்பு பெரிய அளவு பார்வையாளர்களை கவரவில்லை. ரித்திகா சிங் நடிப்பும் சுமார் என்றுதான் சொல்லணும். அறிமுக நாயகி லைலா என்ற கதாபாத்திரத்தில் மீனாட்சி சௌந்தரி நடித்திருக்கிறார். இவர்களின் நடிப்பும் சுமார் தான். சொல்லிக் கொள்ளும் அளவிற்கு யாருடைய நடிப்பும் பெரிதாக பேசப்படவில்லை. ராதிகா சரத்குமார் எதற்காக இந்த படத்தில் நடித்திருக்கிறார் என்று தெரியவில்லை.

Advertisement

மொத்தத்தில் நடிகர்களின் நடிப்பில் இன்னும் இயக்குனர் கவனம் செலுத்தி இருக்கலாம். அதே போல் இயக்குனர் எடுத்துக் கொண்ட கதைகளம் சுவாரசியமாக இருந்தாலும் அதை கொண்டு சென்ற விதம்தான் சரியில்லை. த்ரில்லர் கதை என்று சொல்லி ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை மெதுவாக சென்று பார்வையாளர்கள் மத்தியில் சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பொதுவாகவே க்ரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் என்றாலே அடுத்து என்ன நடக்கும் என்று பார்வையாளர்கள் மத்தியில் சுவாரசியம் ஏற்படும்.

Advertisement

ஆனால், இந்த படத்தில் அந்த மாதிரி எதுவுமே நடக்கவில்லை. அடுத்து என்ன நடக்கும் என்று பார்வையாளர்களே யூகிக்க கூடிய அளவிற்கு காட்சிகள் இருக்கிறது. இதுவே படத்திற்கு மிகப்பெரிய குறையாக உள்ளது. இந்த படம் அனைத்தும் மக்களிடமும் கொண்டு போய் சேரும் என்பது கேள்விக்குறிதான். சமீபத்தில் பிச்சைக்காரன் 2 படத்தை பெரிய அளவில் ஹிட் கொடுத்துவிட்டு கொலை படம் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான். மற்றபடி பின்னணி இசை, செட், எடிட்டிங் மட்டுமே சுமாராக இருக்கிறது.

நிறை:

ஒளிப்பதிவு

பின்னணி இசை, செட் ஓகே

எடிட்டிங் சுமார்

மற்றபடி சொல்லிக் கொள்ளும் அளவிற்கு படத்தில் எந்த ஒரு நிறைகளுமே இல்லை

குறை:

இயக்குனர் கதைக்களத்தில் இன்னும் கவனம் செலுத்தி இருக்க வேண்டும்

நடிகர்கள் நடிப்பில் இன்னும் கவனம் செலுத்தி இருக்க வேண்டும்

படம் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது

திரில்லர் சஸ்பென்ஸ் எதுவும் இல்லை

மொத்தத்தில் விஜய் ஆண்டனியின் கொலை படம்- ஏமாற்றம்

Advertisement