கோலங்கள் சீரியல் மேனகாவா இது? இவரு என்ன ஆனார்? பல ஆண்டுகள் கழித்து வெளியான புகைப்படங்கள்

By Manikandan · 31/1/2023

சின்னத்திரை சீரியல் இயக்குனர்களில் மிகவும் பிரபலமான இயக்குனராக திகழ்பவர் திருச்செல்வம். தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த இவர் ஆரம்பத்தில் டப்பிங் தியேட்டரிலும், இளையராஜா மியூசிக் கம்போஸ் ஒலிப்பதிவு கூடத்திலும் பணிபுரிந்து வந்தார்.பின் இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என்று பல மொழிகளில் தயாரான நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் சவுண்ட் என்ஜினியராக பணியாற்றினார்.

அதற்குப் பிறகு தான் திருச்செல்வம் சின்னத்திரையில் சீரியல்களை இயக்கும் பணியில் இறங்கினார். அந்த வகையில் இவர் முதன் முதலாக 2002 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த மெட்டி ஒலி என்ற தொடரில் இணை இயக்குனராக பணியாற்றினார். அந்த தொடரின் மூலம் நடிகராகவும் திருச்செல்வம் அறிமுகமானார். அதற்கு பிறகு கோலங்கள் என்ற தொடரை இயக்கி சின்னத்திரை இயக்குனராக மக்கள் மத்தியில் பிரபலமானார். அந்த காலகட்டத்தில் சின்னத்திரை இந்த தொடர் மிக பெரிய அளவில் ஹிட் கொடுத்தது.

இயக்கிய சீரியல்கள் :

அதோடு இந்த தொடருக்காக பல விருதுகள் வாங்கி இருக்கிறார் திருச்செல்வம். இதனை தொடர்ந்து இவர் அல்லி ராஜ்ஜியம், மாதவி, பொக்கிஷம், சித்திரம் பேசுதடி, கைராசி குடும்பம், கோலங்கள் போன்ற பல சூப்பர் ஹிட் சீரியல்களை இயக்கி இருக்கிறார். இவர் இயக்கிய கோலங்கள் சீரியல் மிகவும் பிரபலமானதாக இருந்ததற்கு முக்கிய காரணாம் அதில் நடித்த நடிகர்கள் மற்றும் நடிகைகளின் சிறப்பான நடிப்பு திறமைகள் தான் என்று கூறப்பட்டன.

கோலங்கள் மோகனா :

அந்த வகையில் சொல்லவேண்டும் என்றால் கோலங்கள் சீரியலில் மேனகா கதாபாத்திரத்தில் நடித்த பூர்ணிமா இந்திரஜித்தை சொல்லலாம். இவர் கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் மாநிலத்தை சேர்ந்தவர். இவர் அதிகமாக மலையாளா சீரியல்களில் நடித்திருக்கிறார். மேலும் இவர் பல நடிகைகளுக்கு குரலும் கொடுத்துள்ளார். அதோடு பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும், பல நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கி இருக்கிறார்.

கலை குடும்பம் :

மேலும் இவர் சினிமாவில் நடிகர் மற்றும் நடிகைகளுக்கு ஆடை வடிவமைப்பாளராகவும் இருந்திருக்கிறார். இவர் 2002 ஆம் ஆண்டு இந்திரஜித் சுகுமாரன் அவர்களை மணந்தார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அவர்களில் பிரார்த்தனா இந்திரஜித் பிரபலமான பாடகி ஆவார். மேலும் இவரது தந்தை மோகன் வழக்கறிஞராக உள்ளார் மற்றும் தாய் சாந்தி தனியார் நடன பயிற்சி பள்ளியை நடத்தி வருகிறார். மேலும் இவருக்கு ப்ரியா மேனகா என்ற தங்கையும் உள்ளார் அவரும், ஒரு பிரபலமான நடிகையாவார்.

வைரல் புகைப்படம் :

மேலும் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் பூர்ணிமா இந்திரஜித்திற்கு இன்ஸ்டாகிராமில் 1 மில்லியன் போலோவெர்ஸ இருக்கின்றனர். தொடர்ந்து படப்பிடிப்பு சொந்த வாழ்கை பற்றிய வீடியோ பதிவுகளில் வெளியிட்டு வரும் இவர் சமீபத்தில் மார்டன் உடை அணிந்து போஸ் கொடுத்திருந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி கோலங்கள் சீரியலில் நடித்த மேனகாவா இது என்று ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full