இந்த வயசில கல்யாணம்மான்னு கேட்குறாங்க, ஆனா- மனம் திறந்த கோலங்கள் நடிகர் தில்லா சுப்பிரமணி

By subhashini · 23/9/2024

'கோலங்கள்' நடிகர் தில்லா சுப்பிரமணி அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 90ஸ் கிட்ஸ் மத்தியில் பிரபலமான தொடர்களில் ஒன்று தான் கோலங்கள். இந்த தொடரை திருச்செல்வம் இயக்கி இருந்தார். மக்கள் மத்தியில் பேராதரவை பெற்ற இந்த தொடர் சன் டிவியில் 2003 ஆம் ஆண்டு தொடங்கி 2009 ஆம் ஆம் முடிவுக்கு வந்தது. மொத்தம் இந்த தொடர் 1533 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக முடிவடைந்தது.

இந்த தொடரில் கதாநாயகியாக தேவயானி நடித்திருந்தார். மேலும், கோலங்கள் சீரியலில் வில்லனாக தில்லா கதாபாத்திரத்தில் நடித்து இருந்தவர் சுப்பிரமணி. இவருடைய பாடி லாங்குவேஜ், வசனமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு 'எதிர்நீச்சல்' சீரியலில் வில்லனாக என்ட்ரி கொடுத்து இருந்தார். சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் டிஆர்பியில் உச்சசத்தில் இருந்த சீரியல் எதிர்நீச்சல்.

சுப்பிரமணி குறித்த தகவல்:

இந்த சீரியலுக்கு எங்கும் ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருந்தது. இந்த சீரியல் அடக்கு முறைக்கு உட்படும் பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உருவாகி இருந்தது. இந்த சீரியலை இயக்குனர் திருச்செல்வம் இயக்கி இருந்தார். இந்த சீரியலில் திருச்செல்வம் ஹரிப்ரியா, மதுமிதா, விபு ராமன், மாரிமுத்து, கமலேஷ், சபரி பிரசாந்த் உட்பட பலர் நடித்து இருந்தார்கள். இந்த சீரியல் சமீபத்தில் தான் முடிவடைந்தது.

சுப்பிரமணி பேட்டி:

இந்த சீரியல் மூலம் தில்லா மீண்டும் மக்கள் மத்தியில் பிரபலமானர். இப்படி இருக்கும் நிலையில் தில்லாவாக நடித்திருந்த நடிகர் சுப்பிரமணியம் சமீபத்தில் அளித்த பேட்டியில், என்னுடைய சொந்த ஊர் கோவில்பட்டி. நான் எம்எஸ்சி கணிதம் முடித்து இருக்கிறேன். அந்த சமயம் தான் கம்ப்யூட்டர் அறிமுகமானது. அதனால் அது சார்ந்த படிப்பு படித்து விட்டு வக்கீலுக்கு படிக்கப் போனேன். அப்போது ராம்கோ சிமெண்ட் கம்பெனியில் கம்ப்யூட்டர் பிரிவில் வேலை இருக்கு என்று சொல்லி என்னை கட்டாயப்படுத்தி வேலையில் சேர்த்து விட்டார்கள்.

சமூக சேவை:

எனக்கு சமூக சேவை செய்வதில் ஆதிக்க ஆர்வம். இதனால் வேலை முடிந்ததுமே நேராக ஒரு கிராமத்துக்குள் நுழைந்து ஒவ்வொரு வீட்டுக்கு போய் என்னை அறிமுகப்படுத்தி அவங்க பிரச்சினைகளை குறித்து கேட்பேன். என்னுடைய சம்பளத்தில் அவர்களுக்கு உதவி பண்ணுவேன். அப்போது டிபி, போலியோ அதிகமாக இருந்தது. எல்லோருக்குமே உதவி பண்ணிட்டு இருந்தேன். அது ஒவ்வொருத்தருக்கும் தெரிய ஆரம்பித்து என்கூட சேர்ந்தார்கள். ராம்கோவுடைய சேர்மன் என்னை கூப்பிட்டு, நீ ஏம்ப்பா தனியா பண்ற, நாம் எல்லோருமே சேர்ந்து பண்ணுவோம்னு சொல்லி ராம்கோ சோசியல் சர்வீஸ் லீக் என்று ஆரம்பித்தோம்.

https://www.youtube.com/watch?v=VoxdBCAK4KQ

திருமணம் குறித்து சொன்னது:

இன்று அது மிகப்பெரிய துறையாக வளர்ந்து இருக்கு. தொடர்ந்து 33 வருஷமாக அந்த அமைப்பின் மூலம் உதவி பண்ணிக்கொண்டு வருகிறார்கள். அது எனக்கு மிகப் பெரிய மன நிறைவை கொடுத்திருக்கிறது. அப்பதான் திருச்செல்வம் சாருடைய கோலங்கள் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மேலும் , சமூக சேவையில் என்னுடைய கவனம் இருந்ததால் கல்யாணம் பண்ணிக்கவில்லை. 24 வயதிலேயே பேச்சுலர் ஆகவே இருக்கணும் என்று முடிவு எடுத்தேன். இப்ப இந்த வயதில் ஃபேமிலியாக போறேன். நிறைய பேர், இந்த வயதில் கல்யாணம் எல்லாம் தேவையா? என்று கேட்கிறார்கள். ஆனால், அதைப் பற்றி எல்லாம் நான் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை என்று பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full