கோலங்கள், வாணி ராணி சீரியல் நடிகர் ஜோக்கர் துளசி மரணம் - இவருக்கும் இந்த நோயா ?

By Rajkumar · 10/5/2021

நடுமுழுதும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனாவின் கோர தாண்டவம் முடிவில்லாமல் தொடர்ந்து வருகிறது. இந்த நோயினால் இந்தியாவில் பல லட்சம் பேர் பலியான நிலையில் பல்வேறு பிரபலங்களையும் இந்த கொடிய வைரஸ் விட்டுவைக்கவில்லை. பாலிவுட்டின் டாப் ஸ்டாரான அமிதாப் பச்சன் மற்றும் அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், தெலுங்கு சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி மலையாள நடிகர் பிருத்விராஜ் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் அவரது மகனுமான நடிகர் ராம்சரண் நடித்த ரகுள் பிரீட் சிங் நிக்கி கல்ராணி தமன்னா என்று பல்வேறு தளங்கள் கொரோனா தொட்டால் பாதிக்கப்பட்டு பின்னர் அதிலிருந்து மீண்டு வந்தார்கள்.

அதே போல தமிழ் சினிமாவில் சூர்யா, விஷால், அதர்வா, ஆண்ட்ரியா, சரத் குமார், சுந்தர் சி என்று பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமாகினார். அதே போல கொரோனாவால் பாதிக்கப்பட்டு பல சினிமா பிரபலங்கள் உயிரிழந்தனர். சமீபத்தில் கூட கே வி ஆனந்த் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் காலமானார்.

அதே போல கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆட்டோகிராப் புகழ் கோமகன், பிரபல காமெடி நடிகர் பாண்டு ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு காலமான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இப்படி ஒரு நிலையில் பிரபல நடிகரான ஜோக்கர்துளசி நேற்று (மே 9) காலமாகி இருக்கிறார். ‘ஜோக்கர்’ துளசி ,1976 இல் வெளியான தேவராஜ்-மோகன் இயக்கிய “உங்களில் ஒருத்தி” படத்தில்  தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானார்.

https://twitter.com/actormohanraman/status/1391420806941401088

அதன் பின்னர் பல்வேறு படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக 1992 ஆம் ஆண்டில் வெளிவந்த திருமதி பழனிச்சாமி படத்தில் இவரது நடிப்பு பாராட்டப்பட்டது. மேலும் கோலங்கள், வாணி ராணி, கேளடி கண்மணி, முத்தராம், கஸ்தூரி, நாணல், மாதவி, அழகு உள்ளிட்டசீரியல்களில் கூட நடித்துள்ளார். இப்படி ஒரு நிலையில் இவர் கொரோனா தொற்று ஏற்பட்டு காலமாகியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full