சிறந்த படங்கள் 2024: பெரிய நடிகர்களை பின்னுக்கு தள்ளி ரசிகர்கள் மனதை கவர்ந்த நடிகர்களின் தமிழ் படங்கள்- லிஸ்ட் இதோ
2024 ஆம் ஆண்டில் வெளிவந்த சிறந்த படங்களின் பட்டியல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மக்களுடைய பொழுதுபோக்கு அம்சங்களில் ஒன்று சினிமா. அந்த வகையில் இந்த 2024 ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் தொடங்கி டிசம்பர் வரை கிட்டத்தட்ட 200-க்கும் மேற்பட்ட படங்கள் தமிழ் சினிமாவில் வெளியாகி இருக்கிறது. இதில் பத்து முதல் 15 படங்கள் மட்டும் தான் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. அந்த டாப் 10 இடத்தைப் பிடித்த படங்களின் பட்டியலை பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம்.
ப்ளூ ஸ்டார்:
அறிமுக இயக்குனர் எஸ். ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் ப்ளூ ஸ்டார். இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன் தயாரித்தது. இந்த படத்தில் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன், பகவதி பெருமாள் உட்பட பலர் நடித்திருந்தார்கள். கோவிந்த் வசந்த் இந்த படத்திற்கு இசை அமைத்தார். கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.
கருடன்:
தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சூரி. இவர் நடிப்பில் வெளியான கருடன் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் சசிகுமார், உன்னி முகுந்தன், மைம் கோபி, ஆர் வி உதயகுமார் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்தை இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கி இருந்தார்.
லவ்வர்:
தமிழில் ஜெய் பீம், குட் நைட் போன்ற வெற்றி படத்தை தொடர்ந்து மணிகண்டன் நடித்த படம் லவ்வர். அறிமுக இயக்குனர் பிரபு ராம் வியாஸ் இயக்கி இருந்தார். இந்த படத்தில் மணிகண்டன், கௌரிப்பிரியா, கண்ணா ரவி, நிகிலா ஷங்கர், ஹரிஷ் குமார், ஹரிணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒரு காதல் ஜோடிக்குள் நடக்கும் சிக்கல்கள் குறித்து இந்த படம் உருவாகி இருந்தது.
ஸ்டார்:
தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக கவின் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான படம் ஸ்டார். இந்த படத்தில் அதிதி போங்கர், ப்ரீத்தி முகுந்தன், லால் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்தப் படத்தை இயக்குனர் இளன் இயக்கி இருந்தார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
ரகு தத்தா:
கீர்த்தி சுரேஷின் நடிப்பில் வெளியாகியிருந்த படம் தான் ‘ரகு தாத்தா’. இப்படத்தை புது இயக்குனர் சுமன் குமார் இயக்கி இருந்தார். இவர் ஏற்கனவே தி ஃபேமிலி மேன் வெப் சீரிஸில் கதை ஆசிரியராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் கீர்த்தியுடன் இணைந்து தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
கொட்டுக்காளி:
தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் சூரி. சமீபகாலமாக இவர் ஹீரோவாக நடித்து வரும் படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில், இவர் ஹீரோவாக நடித்திருந்த படம் கொட்டுக்காளி. இந்த படத்தை பி.எஸ். வினோத்ராஜ் இயக்கி இருந்தார். நடிகர் சிவகார்த்திகேயன் இந்த படத்தை தயாரித்திருந்தார். இந்த படத்தில் சூரி, அன்னா பென் உட்பட பலர் நடித்திருந்தார்கள்.
நந்தன்:
இயக்குனர் ஆர்.சரவணன் இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் நந்தன். இந்த படத்தில் சசிகுமார், ஸ்ருதி பெரியசாமி, பாலாஜி சக்திவேல், சமுத்திரக்கனி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது.