லாக்டவுன் காதலான கொஞ்சம் பேசினால் என்ன படம் வெற்றி பெற்றதா? இல்லையா? முழு விமர்சனம் இதோ
அறிமுக இயக்குனர் கிரி மர்பி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் கொஞ்சம் பேசினால் என்ன. இந்த படத்தில் வினோத் கிஷான், கீர்த்தி பாண்டியன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திலேயே தயாரிப்பாளர் சமித் பாரத் ராம் தயாரித்திருக்கிறார். இந்த படத்திற்கு தீபன் சக்கரவர்த்தி இசையமைத்திருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
கதைக்களம்:
படத்தில் ஹீரோ வினோத் பெங்களூரில் ஓவியராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இவர் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு தன்னுடைய சொந்த ஊரான மதுரைக்கு செல்கிறார். அந்த நேரம் பார்த்து கொரோனா தொற்று அதிகமாக இருப்பதால் ஊரடங்கு உத்தரவு போடப்படுகிறது. இதனால் வீட்டுக்குள்ளேயே ஹீரோ இருக்கிறார். இன்னொரு பக்கம் ஆடை வடிவமைப்பாளராக கீர்த்தி பாண்டியன் இருக்கிறார்.
சமூக வலைத்தளம் மூலம் இவருடன் ஹீரோவுக்கு பழக்கம் ஏற்படுகிறது. நாட்கள் செல்ல செல்ல இவர்களுடைய நட்பு காதலாக மாறுகிறது. ஒருவரை ஒருவர் நேரில் பார்த்துக் கொள்ளாமலேயே வீடியோ கால் மூலமே இவர்களுடைய காதலை வளர்க்கிறார்கள். இறுதியில் என்ன ஆனது? இவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்டார்களா? சேர்ந்தார்களா? என்பதே படத்தின் மீதி கதை.
படத்தின் ஹீரோ வினோத்திற்கு பெரிய அளவிற்கு வேலை எதுவும் இல்லை. இருந்தாலும் இவர் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். ஆனால், சில இடங்களில் இவர் நடிப்பில் இன்னும் கவனம் செலுத்தி இருந்தால் நன்றாக இருந்து இருக்கும். அதேபோல் கீர்த்தி பாண்டியன் நடிப்பும் நன்றாக இருக்கிறது. ஆனால், அவருடைய கதாபாத்திரமும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை. படத்தில் மற்ற நடிகர்கள் நடித்திருக்கிறார்கள் தவிர பெரிதாக முக்கியத்துவம் எதுவும் இல்லை.
அதேபோல் படத்தின் ஒளிப்பதிவு ஆரம்பத்தில் நன்றாக இருந்தாலும் இறுதியில் பெரிதாக இல்லை. ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை படம் பார்வையாளர்கள் மத்தியில் கடுப்பை தான் ஏற்றி இருக்கிறது. பின்னணி இசையும் பெரிதாக சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை. லாக்டவுன் நேரத்தில் நடக்கும் ஒரு காதல் கதையை தான் இயக்குனர் காண்பித்திருக்கிறார்.
அதில் கொஞ்சம் சுவாரசியங்களும் வித்தியாசமாக கொடுத்திருந்தால் நன்றாக இருக்கும். படம் முழுக்க ஜவ்வு போல் இழுத்துக் கொண்டே சென்றிருக்கிறார் இயக்குனர். அதேபோல் அடுத்து என்ன
காட்சிகள் வரும் என்று யோசிக்க கூடிய அளவிற்கு இருக்கிறது. மொத்தத்தில் படம் ரொம்ப ரொம்ப சுமார்தான்.
நிறை:
நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்
லாக்டவுன் நேரத்தில் நடக்கும் காதல் கதை
மற்றபடி படத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு சுவாரசியமும் கதைக்களமும் கிடையாது
குறை:
ஆரம்பத்திலிருந்து இறுதிவரை பார்வையாளர்கள் மத்தியில் கடுப்பை ஏற்றி இருக்கிறது
பின்னணி இசையும் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலத்தை கொடுக்கவில்லை
நடிகர்கள் உடைய தேர்வு
கதாபாத்திரத்தை அழுத்தமாக சொல்லி இருக்கலாம்
மொத்தத்தில் கொஞ்சம் பேசினால் என்ன-தோல்வி