ஒரு புரமோஷன் பண்ணித்தர கேட்டேன், ஆனால் சூரி சொன்னது - கோபத்தில் கொந்தளித்த கொட்டாச்சி
தமிழ் சினிமா உலகில் காமெடி நடிகராக வலம் வந்தவர் கொட்டாச்சி. வடிவேலு, விவேக் போன்ற முன்னணி காமெடி நடிகர்களுடன் படத்தில் இணைந்து கலக்கிய கொட்டாச்சி சமீப காலமாகவே படத்தில் காண முடியவில்லை. இவர் சினிமா உலகில் தன்னை சிறந்த காமெடியனாக நிலைநிறுத்திக் கொள்ள பல போராட்டங்களை செய்து வருகிறார். மேலும், இவருடைய மகள் மானஸ்வி குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகில் அறிமுகமாகி குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் மிகப் பிரபலம் ஆகி விட்டார்.
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வந்து சூப்பர் ஹிட் கொடுத்த இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாராவின் மகளாக மானஸ்வி நடித்து இருந்தார். இதில் மானஸ்வி நடிப்பு பாராட்டக்கூடிய வகையில் இருந்தது. பிறகு இருட்டு, தர்பார் போன்று பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக மானஸ்வி நடித்து உள்ளார். தற்போது கொட்டாச்சியின் மகள் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது வெற்றி வீரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பூ காய் கனி.
கொட்டாச்சி மகள்:
இந்த படத்தில் கொட்டாட்சியின் மகள் மானஸ்வி நடித்திருக்கிறார். அந்த படத்தினுடைய பிரஸ்மீட் நடைபெற்று இருக்கிறது. அதில் நடிகர் சூரி பற்றி கொட்டாச்சி பேசி இருக்கும் அதிருப்தி தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர், சினிமாவில் கஷ்டப்பட்டு கொண்டிருந்த காலத்தில் இருந்து சூரி எனக்கு நல்லாகவே தெரியும். அவர் எனக்கு நண்பர்தான். நானும் அவரும் ஒரே ரூமில் தான் தங்குவோம். ஒரே கல்யாண மண்டபத்தில் எல்லாம் வேலை பார்த்து இருக்கிறோம்.
கொட்டாச்சி பேட்டி:
வாய்ப்பு கேட்டு நிறைய பேரு காலில் நாங்கள் விழுந்திருக்கிறோம். எல்லா சமயங்களில் நண்பர்கள் தான். ஆனால், வாய்ப்பு என்று வரும்போது தான் பிரச்சனை வருகிறது. இப்போது சூரி பெரிய இடத்தில் இருக்கிறார். அவரிடம் நான் போன் செய்து படத்தினுடைய ப்ரோமோசனை பற்றி கேட்டேன். ப்ரோமோஷன் வீடியோ அல்லது ஒரு ட்விட் போட்டு கொடு நண்பா என்று கேட்டேன். அதற்கு சூரி, வெற்றிமாறன் சாரிடம் இருக்கும் உதவி இயக்குனர்களெல்லாம் ப்ரோமோஷன் பண்ணி தர சொல்லி லைனா என்னிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
https://www.youtube.com/watch?v=ygKHPQEJoEk
சூரி பற்றி சொன்னது:
அதனால் என்னால் செய்து தர முடியாது. உனக்கு செய்தால் அவனுக்கு மட்டும் செய்து தருவாயா? என்று கேட்பார்கள் என்று சொன்னார். அதற்கு நான், நீ பிரமோஷன் செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை ஒரு வாய்ஸ் மெசேஜ் மட்டும் போட்டு கொடு நான் என்னுடைய சமூகவலைத்தள பக்கத்தில் போட்டுக்கொள்கிறேன் என்று கேட்டேன். ஆனால், அது கூட சூரி செய்து தரவில்லை. ரொம்பவே கஷ்டமாக இருக்கிறது. இத்தனை வருடமாக பழகியிருந்த நண்பனுக்கு ஒரு உதவி கூட செய்ய முடியவில்லை. விஜய் சேதுபதி எவ்வளவோ பேருக்கு உதவி செய்திருக்கிறார். வளர்ந்து வரும் நடிகர்களை கொஞ்சமாவது சப்போர்ட் செய்ய வேண்டும் என்று தான் இந்த தருணத்தில் நான் கேட்டுக்கொள்கிறேன் என்று கோபமாக பேசியிருக்கிறார்.