தந்தையின் இறப்பிற்க்கே செல்லாத கோவை சரளா - பின்னணியில் இப்படி ஒரு காரணமா?

By subhashini · 7/5/2024

தன்னுடைய தந்தையின் இறப்புக்கு வராததற்கான காரணம் குறித்து முதன் முதலாக மனம் திறந்து கோவை சரளா கூறி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் நகைச்சுவை ராணி ஆச்சி மனோரமாவுக்குப் பிறகு காமெடி இளவரசியாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் கோவை சரளா. இவர் தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக பிரபலமான நகைச்சுவை நடிகையாக திகழ்ந்து கொண்டு இருக்கிறார்.

பெரும்பாலும் இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தான் நடித்திருக்கிறார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் இதுவரை 800 படங்களுக்கும் மேல் நடித்து இருக்கிறார். இன்றும் இவர் இளம் நடிகையைப்போல உற்சாகம் குறையாமல் வலம் வருகிறார். தற்போதும் இவர் படங்களில் கவனம் செலுத்தி தற்போதும் வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியாகியிருக்கும் அரண்மனை 4 படத்தில் நடித்திருக்கிறார்.

அரண்மனை 4 :

இந்த படத்தில் தமன்னா, ராசி கண்ணா, யோகி பாபு, சந்தோஷ் பிரதாப் உட்பட பட நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசை அமைத்து இருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலமையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இதை தொடர்ந்தும் இவர் சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கோவை சரளா தன் தந்தை குறித்து சொன்னது, என்னுடைய சொந்த ஊர் கோயம்புத்தூர். அதனால் தான் எனக்கு கோவை சரளா என்று பெயர் வந்தது. எனக்கு நான்கு சகோதரர்கள், சகோதரிகள் இருக்கிறார்கள். எனக்கு திருமணம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை திட்ட வட்டமாக முடிவெடுத்திருக்கிறேன். என்னுடைய வாழ்க்கையில் நடந்த மோசமான விஷயம் என்றால் என்னுடைய தந்தையினுடைய இறப்பு தான்.

தந்தை இறப்பு குறித்து சொன்னது:

கடைசியாக கூட என்னுடைய தந்தையை என்னால் பார்க்க முடியவில்லை. காரணம், ஒருமுறை சூட்டிங் காக ஊட்டிக்கு போயிருந்தேன். அப்போதுதான் அப்பா இறந்துவிட்டார். நான் நடித்த படத்தோட தயாரிப்பு நிறுவனம் ரொம்ப சின்னது. அந்த படத்தில் எனக்கு முழு நீள காட்சிகள் இருந்தது. படத்தை நிறுத்திவிட்டால் தயாரிப்பாளருக்கு ரொம்ப நஷ்டம் ஏற்படும். அதனால் தான் படப்பிடிப்பை நிறுத்த முடியவில்லை. அப்பாவை பார்க்க முடியாமல் போனது. ஆனால், எல்லோருமே என்னை தப்பாக புரிந்து கொண்டார்கள். எனக்கு படமும் பணமும் முக்கியம் கிடையாது என்று எமோஷனல் ஆக பேசி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full