Good Touch,Bad Touch மாதிரி இதையும் சொல்லிக்கொடுங்க - பாண்டிச்சேரி சிறுமி விவகாரம் குறித்து KPY பாலா ஆதங்கம்.

By Siva · 10/3/2024

புதுச்சேரி சம்பவம் குறித்து Kpy பாலா பேசி இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில தினங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் புதுச்சேரியில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் புதுச்சேரியில் மட்டும் இல்லாமல் தமிழகத்தையும் புரட்டி போட்டு இருக்கிறது. புதுச்சேரி முத்தியால் பேட்டையில் உள்ள சோலை நகர் பகுதியை சேர்ந்தவர்கள் நாராயணன்- மைதிலி தம்பதியினர்.

https://twitter.com/dinathanthi/status/1765725188984054255?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1765725188984054255%7Ctwgr%5Ed2103a4cbf75ea9313c95264ac5d9ac35f26e8b7%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftamil.behindtalkies.com%2Fyuvan-condemn-on-puducherry-issue%2F

இவர்களுக்கு 9 வயதில் ஆர்த்தி என்ற மகள் இருக்கிறார். இவர் அரசு பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார்.
இவர் கடந்த 2ம் தேதி தன்னுடைய வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருக்கும் போது மாயமாகி இருக்கிறார். நீண்ட நேரம் ஆகியும் தன் மகளை காணவில்லை என்று பெற்றோர்கள் போலீசில் புகார் கொடுத்திருந்தார்கள். நான்கு நாட்கள் ஆகியும் ஆர்த்தி கிடைக்கவில்லை. பின் ஒரு கால்வாயில் சாக்கு மூட்டையில் சடலமாக ஆர்த்தி கிடைத்து இருக்கிறார்.

புதுச்சேரி சிறுமி கொலை சம்பவம்:

இதனை அடுத்து போலீசார் உடலை பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். அப்போது அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொலை செய்யப்பட்டு தெள்ளத்தெளிவாக தெரிந்திருக்கிறது. பின் போலீஸ் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், இது சம்பந்தமாக போலீஸ் குற்றவாளிகளை கைது செய்து இருக்கிறார்கள். அந்த ஏரியாவில் கஞ்சா குடிக்கும் 19 வயது இளைஞனும், 58 வயது கொண்ட முதியவரும் சேர்ந்து கூட்டு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்கள்.

https://www.youtube.com/shorts/Mo25WXIGGhQ

போலீஸ் விசாரணை:

பின் விசாரணையில், அந்த இளைஞர் சிறுமிக்கு மொட்டை மாடியில் பாலியல் தொல்லை கொடுத்த போது அதை பார்த்த முதியவரும் தன்னுடன் சேர்ந்து கொண்டதாகவும் சிறுமி ரொம்ப கத்தி ஆர்ப்பாட்டம் செய்ததால் அடித்த அடியில் அவர் இறந்து விட்டதாக கூறியிருக்கிறார். இதை அறிந்த ஊர் மக்கள் குற்றவாளிகளை தங்களிடம் ஒப்படைக்க சொல்லி ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார்கள். குற்றவாளிகள் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்து இருக்கிறார்கள். இந்த சம்பவம் நெஞ்சை பதற வைத்து இருக்கிறது.

Kpy பாலா கருத்து :

இது குறித்து பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலருமே கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இப்படி ஒரு நிலையில் பாண்டிச்சேரி சிறுமியின் இறப்பு குறித்து பேசி இருக்கும் பாலா 'எப்போதும் Good Touch, Bad Touch சொல்லித் தருவது போல Dont Touch என்பதையும் சொல்லித் தர வேண்டும். என்னதான் பாதுகாப்பாக இருந்தாலும் அதை எல்லாம் தாண்டி நடப்பது தான் பிரச்சனை. ஈவு இறக்கமற்ற நபர்களால் நடக்கும் விஷயங்கள் தான் இது.

அப்படித்தான் சமீபத்தில் நடந்து இருக்கிறது. அவர்களுக்கான தண்டனை கண்டிப்பாக கிடைக்க வேண்டும்' என்று பேசி இருக்கிறார். Kpy பாலா சமீப காலமாக அனாதை பிள்ளைகளை படிக்க வைப்பது, முதியோர் இல்லங்களுக்கு உணவளிப்பது, இலவச ஆம்புலன்ஸ் வாங்கி தருவது என்று பல உதவிகளை செய்து வருகிறார். இதனால் மக்கள் இவரை ஹீரோ போல கொண்டாடி வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full