கேபிஒய் பாலாவின் கனவை நிறைவேற்றிய ராகவா லாரன்ஸ் - வெளியான மாஸ் அப்டேட்
கேபிஒய் பாலா ஹீரோவாக நடிக்க இருக்கும் படம் பற்றிய தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாலா. அதற்காக இவர் இரவு பகலாக தன்னை தானே தயார் செய்தார். அந்த வகையில் இவருக்கு திருப்புமுனையாக இருந்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான். இந்த நிகழ்ச்சியில் KPY பாலா செய்யும் காமெடிகளுக்கு அளவே கிடையாது.
இதன் மூலம் தான் இவருக்கு படங்களில் வாய்ப்பு கிடைத்தது. தற்போது இவர் படங்களில் பிசியாக நடித்தும், பல்வேறு நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும், விஜே வாகவும் பணியாற்றி வருகிறார். மேலும், பாலா அவர்கள் நடிகர் மட்டுமில்லாமல், சமூக சேவை அவர்கள் நபரும் ஆவார். இவர் தான் சம்பாதித்த பணத்தின் மூலம் தன் பகுதியில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளை படிக்க வைப்பது, ஆதரவற்ற பெரியோர்களின் மருத்துவ செலவிற்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.
சமூக சேவை செய்யும் பாலா:
பின் இவர் மலைவாழ் பகுதிகளில் இருக்கும் மக்களுக்கு ஆம்புலன்ஸ் வசதி செய்து தந்து இருந்தார். அதே போல கடந்த ஆண்டு புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து இருந்தார். இதனால் பாலாவை குட்டி ராகவா லாரன்ஸ் என்று சொல்கிறார்கள். தற்போது லாரன்ஸ் நடத்தி வரும் மாற்றம் அறக்கட்டளையில் பாலா இணைந்து சேவை செய்து கொண்டு வருகிறார். மேலும் சமீபத்தில் ஜீ தமிழில் நடைபெற்ற டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் பாலா, ராகவா லாரன்ஸ் கலந்து கொண்டிருந்தார்கள்.
பாலா ஹீரோவாக நடிக்கும் படம்:
அதில் ராகவா லாரன்ஸ், கேரியரில் உங்களுக்கு என்ன ஆசை? என்று கேட்டிருக்கிறார். அதற்கு பாலா, ஹீரோவாக நடிக்க வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை என்று கூறியிருக்கிறார். உடனே ராகவா லாரன்ஸ், ராகவேந்திரா புரொடெக்சனில் நிறைய படம் பண்ணவில்லை. உனக்காக என் பிரண்ட்ஸ் நிறைய ப்ரொடியூசர் இருக்கிறார்கள். நல்ல காமெடி அண்ட் லவ் கதை பாலாவுக்கு பொருத்தமாக இருக்கும். இதை பார்க்கிற இயக்குனர்கள் யாராவது கதை இருந்தால் சொல்லுங்கள் என்று சொல்லி இருந்தார்.
ராகவா லாரன்ஸ் பதிவு:
இதைக் கேட்டவுடன் அந்த நிகழ்ச்சியிலேயே பாலா ரொம்பவே கதறி அழுதுவிட்டார். இப்படி இருக்கும் நிலையில் இது தொடர்பாக ராகவா லாரன்ஸ் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், என்னுடைய தம்பி பாலாவின் கனவை நிறைவேற்றும் வகையில் அவரை ஹீரோவாக அறிமுகப்படுத்தி அந்த படத்தை நான் தயாரிப்பதாக சொல்லியிருந்தேன். அந்த படத்திற்கு இப்போது நல்ல தயாரிப்பாளர் நல்ல கதையுடன் கிடைத்துவிட்டார். பாலா ஹீரோவாக அறிமுகம் திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.
பாலா பதிவு:
மேலும், இது குறித்து பாலாவும் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவு போட்டிருக்கிறார். அதில் அவர், என்னுடைய வாழ்நாளின் பெரும் கனவு நிறைவேறி இருக்கிறது. நான் ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறேன். நீங்கள் இல்லாமல் நான் இல்லை ரொம்ப நன்றி என்று கூறியிருக்கிறார். தற்போது இவருடைய பதிவை ரசிகர்கள் பலரும் வாழ்த்து சொல்லி இருக்கிறார்கள். ஷெரீஃப் இயக்கத்தில் விவேக் மெர்வின் இசையில் உருவாகும் படத்தில் தான் பாலா ஹீரோவாக அறிமுகமாகிறார். 'jayi kiran' தயாரிப்பு நிறுவனம் தான் இப்படத்தைத் தயாரிக்கிறது.