'தம்பி பாலா போதும்' - தொடர்ந்து உதவி செய்து வரும் பாலாவிற்கு நெட்டிசன்களின் அறிவுரை.

By Rajkumar · 13/1/2024

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாலா.தற்போது இவர் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதோடு இவர் பல்வேறு நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராகவும், விஜே வாகவும் பணியாற்றி வருகிறார். மேலும், பாலா நடிகர் மட்டுமில்லாமல், சமூக அக்கறை கொண்ட நபரும் ஆவார். இவர் தான் சம்பாதித்த பணத்தின் மூலம் தன் பகுதியில் உள்ள சிறியவர்களை படிக்க வைப்பதுடன், ஆதரவற்ற குழந்தைகளை படிக்க வைப்பது, ஆதரவற்ற பெரியோர்களின் மருத்துவ செலவிற்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்தும் வருகிறார்.

https://twitter.com/NewsTamilTV24x7/status/1745782253941408003

இதுவரை மக்களுக்காக தனது சொந்த செலவில் 4 இலவச ஆம்புலன்ஸை வாங்கி கொடுத்து இருக்கிறார் பாலா. அதே போல சமீபத்தில் மிஃஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து இருந்தார். அவரது குடியிருப்பு பகுதியான பல்லாவரம், அனகாபுத்தூர், பம்பல் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்பத்திற்கு தலா 1000 ரூபாய் வீதம் 200 குடும்பங்களுக்கு ரூபாய் 2 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கி இருந்தார்.

இதனை தொடர்ந்து சமீபத்தில் தாம்பரத்தில் உள்ள அனகாபுத்தூர் பகுதியில் மாற்றுத்திறனாளி மற்றும் கர்ப்பிணிகளுக்கான இலவச ஆட்டோ சேவையை வழங்கி இருந்தார் பாலா. பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஒரு மூனு மாசத்திற்கு முன்னாடி எங்க ஏரியாவில் உள்ள கடையில் டீ குடிச்சிட்டு இருந்தேன். அப்போது ஒரு பெரியவரை கஷ்டப்பட்டு பஸ்ஸில் ஏத்துனாங்க. அந்த இடமே ட்ராபிக் ஆயிடுச்சு.

https://twitter.com/senthazalravi/status/1745962065838145594?s=48

ஏன்னு கேட்டபோது, அவர் செக்கப்புக்கு மருத்துவமனை போகணும். ஆட்டோவில் போனால் காசு அதிகம் செலவாகுதுன்னு சொன்னார்கள். அதனால் ஆட்டோ கொடுக்க முடிவெடுத்து காசு சேத்து வச்சு கொடுத்தேன். மாற்றுத்திறனாளி மற்றும் கர்ப்பிணிகளுக்கு அனகாபுத்தூர் பாலத்திலிருந்து, பல்லாவரம், பம்மல், காமராஜபுரம்... இந்த பெல்டில் உள்ள பகுதிகளுக்கு மருத்துவ சேவைக்கு இலவசமாக செல்லும்.

இப்போதைக்கு காலை 9 மணியிலிருந்து இரவு 10 மணி வரைக்கும் செயல்படும். கொஞ்ச நாளுக்கு பிறகு 24 மணி நேரமும் செயல்படுத்த ப்ளான் பண்ணிக்கிட்டு இருக்கோம். இதற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து மத்த இடங்களிலும் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம்' என்றும் கூறி இருந்தார். பாலா இப்படி தொடர்ந்து உதவி செய்து வருவதை பாராட்டி வந்தாலும் பாலா இப்படி செய்வதை குறைத்துகொள்ள வேண்டும் என்றும் பலரும் அட்வைஸ் செய்து வருகின்றனர்.

சினிமாவை பொறுத்த வரை உச்ச நட்சத்திர நடிகர்கள் மட்டும் தான் வசதி வாய்ப்பு அப்படியே இருக்கும். ஆனால், பாலாவை போல எத்தனையோ சிறு நடிகர்கள் சிகிச்சைக்கு கூட பணமில்லாமல் இறந்ததை பார்த்துள்ளோம். எனவே, பாலா காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள வேண்டும் என்ற பழமொழிக்கு இன்னங்க, இப்போது தனக்காக பணத்தை சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும் என்பது பலரின் அட்வைஸ்.

அதே போல பாலா இப்படி செய்வதற்கு பின்னால் ஒரு உளவியல் பிரச்சனை இருப்பதாகவும் சிலர் கூறி வருகின்றனர். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஒரு பயனர் 'இது ஒருவகையான உளவியல் பிரச்சனை தான். உதவி செய்யும் "போதை", தன்னை பலர் பாராட்டுவதை ரகசியமாக கண்ணாடியில் ரசிப்பது. மன நல மருத்துவரை பார்ப்பது நல்லது. நாளைக்கு உனக்கு ஒரு பண பிரச்சினை என்றால் யாரும் வரமாட்டாங்க தம்பி. இல்ல இதை வெச்சு அரசியல் ஐடியா இருக்கா.' என்று குறிப்பிட்டுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full