ஓடி ஓடி நல்லது செய்த பாலாவிற்கா இப்படி ஒரு சோகம் - ஆறுதல் கூறும் ரசிகர்கள்.

By Rajkumar · 16/12/2023

ஓடி ஓடி உதவி செய்த பாலாவிற்கு ஏற்பட்ட சோகத்திற்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர். கடந்த சில வாரமாக ஒட்டுமொத்த தமிழகத்தையும் மிக்ஜாம் புயல் புரட்டி போட்டு இருக்கிறது. சோசியல் மீடியா முழுவதும் மிக்ஜாம் புயல் குறித்த செய்தி தான் வைரலாகி வருகிறது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டும், வெளிவர முடியாத சுழலில் ஏற்பட்டது. 2015 ஆம் ஆண்டு பெய்த கனமழையை விட இந்த மழை சென்னை மக்களை பெரிதும் பாதித்து இருந்தது.

https://www.youtube.com/watch?v=Sz8YX6Hzn3U

சாதாரண மக்கள் மட்டும் இல்லாமல் சினிமா பிரபலங்கள் கூட இந்த புயலால் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.இந்த மழையில் டூவீலர், ஃபோர் வீலர் என எல்லா வண்டிகளுமே தண்ணீரில் அடித்து செல்லப்பட்டிருந்தது. அந்த வீடியோ எல்லாம் மக்கள் மத்தியில் பதபதப்பை ஏற்படுத்தியிருந்தது. மழை பொழிவு நின்றாலும் தண்ணீர் முழுமையாக வடியவில்லை. தண்ணீர் வடிந்து மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு செல்ல பல நாட்கள் ஆனது.

அதுமட்டுமில்லாமல் பிரபலங்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் கார்த்தி- சூர்யா இருவரும் இணைந்து மிக்ஜாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிதி உதவி கொடுத்திருக்கிறார்கள். இவர்களை தொடர்ந்து ஜி.வி. பிரகாஷ், ஹரிஷ் கல்யாண் உட்பட ஒரு சில பிரபலங்கள் தங்களால் முடிந்த அளவிற்கு பண உதவி செய்து வருகின்றனர்.

View this post on Instagram

A post shared by Balan Akassh Balaiyan Jaganathan (@bjbala_kpy)

வெள்ளித்திரை மட்டுமல்லாது சில சின்னத்திரை பிரபலங்கள் கூட தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் அறந்தாங்கி நிஷா தனது காரில் சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்களை கொடுத்துவிட்டு வந்தார். இப்படி ஒரு நிலையில் Kpy பாலா அவரது குடியிருப்பு பகுதியான பல்லாவரம், அனகாபுத்தூர், பம்பல் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்பத்திற்கு தலா 1000 ரூபாய் வீதம் 200 குடும்பங்களுக்கு ரூபாய் 2 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்க இருக்கிறார்.

இதுகுறித்து பேசிய அவர் ' என்ன வாழ வைத்த சென்னைக்கு என்னால் முடிந்த உதவி. 2015ல் மழை வந்த போது செய்யணும்னு ஆசை இருந்தது ஆனா அப்போ காசு இல்ல. அதனால் தான் இப்போ என் அக்கவுண்டில் இருந்த சுமார் 2.15 லட்ச ரூபாயை எடுதது ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 1000ரூ கொடுத்து இருக்கிறேன்' என்று பேசி இருக்கிறார். இதனை தொடர்ந்து மீண்டும் மக்களுக்கு தொடர்ந்து உதவி வந்தார்.

ஏற்கனவே இலவச ஆம்புலன்ஸ், குழந்தைகளின் படிப்புக்கு உதவி, ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உதவி, நலிந்த கலைஞர்களுக்கு உதவி என்று செய்து வரும் Kpy பாலா தற்போது செய்துள்ள இந்த உதவியும் மக்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது பாலா தனது விரல்கள் உடைந்துவிட்டது என கையில் கட்டுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்."மனம் நிறைந்தது.... விரல் உடைந்தது.... நன்றி" என அவர் கூறி இருக்கிறார். இதனை கண்ட ரசிகர்கள் நல்லது செய்பவர்களுக்கு ஏன் தான் இப்படி நடக்குதோ. விரைவில் நீங்கள் குணமடைய வேண்டும் என்று நாங்கள் வேண்டிக்கொள்கிறோம்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full