அனிருத் இசையில் சூப்பர் ஹிட் பாடலை பாடிய பாடகரின் அவல நிலை - kpy பாலா செய்த உதவி

By subhashini · 15/4/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாலா. அதற்காக இவர் இரவு பகலாக தன்னை தானே தயார் செய்தார். அந்த வகையில் இவருக்கு திருப்புமுனையாக இருந்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் KPY பாலா செய்த காமெடிகளுக்கு அளவே கிடையாது. இதன் மூலம் தான் இவருக்கு படங்களில் வாய்ப்பு கிடைத்தது. தற்போது இவர் படங்களில் பிசியாக நடித்தும், பல்வேறு நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும், விஜே வாகவும் பணியாற்றி வருகிறார்.

மேலும், பாலா அவர்கள் நடிகர் மட்டுமில்லாமல், சமூக சேவை செய்பவரும் ஆவார். இவர் தான் சம்பாதித்த பணத்தின் மூலம் தன் பகுதியில் இருக்கும் ஆதரவற்ற குழந்தைகளை படிக்க வைப்பது, ஆதரவற்ற பெரியோர்களின் மருத்துவ செலவிற்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். பின் இவர் மலைவாழ் பகுதிகளில் இருக்கும் மக்களுக்கு ஆம்புலன்ஸ் வசதி செய்து தந்து இருந்தார். அதே போல இவர் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து இருந்தார்.

kpy பாலா குறித்த தகவல்:

இதனால் பாலாவை குட்டி ராகவா லாரன்ஸ் என்று சொல்கிறார்கள். தற்போது லாரன்ஸ் நடத்தி வரும் மாற்றம் அறக்கட்டளையில் பாலா இணைந்து சேவை செய்து கொண்டு வருகிறார். அந்த வகையில் அனிருத் இசையில் பாடிய பாடகருக்கு கே பி ஒய் பாலா உதவி செய்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹாரிஸ் ஜெயராஜ், அனிருத் இசையில் பிரபல பாடல்களை பாடி இருந்தவர் பாடகர் ரிச்சர்ட் ஆலிசன் நாதன்.

பாடகர் நிலை:

எங்கேயும் எப்போதும் படத்தில் இடம்பெற்ற நங்கை, நண்பேண்டா படத்தில் இடம்பெற்ற நீ மூனோ, அனிருத் இசையில் ரெமோ படத்தில் இடம்பெற்ற மீசை பியூட்டி போன்ற பாடல்களுக்கு குரல் கொடுத்தவர் ரிச்சர்ட். இவர் தன்னுடைய திறமையின் மூலம் நிறைய நல்ல பாடல்களை பாடியிருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் தற்போது இவர் ஒரு கை மற்றும் வாயில் பாதிப்பு ஏற்பட்டு பக்கவாதம் வந்து முடங்கி கிடக்கிறார்.
பலருக்கும் இவர் யார் என்றே தெரியாது.

View this post on Instagram

A post shared by Balan Akassh Balaiyan jaganathan (@bjbala_kpy)

பாலா செய்த உதவி:

தற்போது இவரின் நிலை ரொம்ப மோசமாக இருக்கிறது. இதை அறிந்த கே பி ஒய் பாலா, பாடகர் ரிச்சர்டை நேரில் சந்தித்து அவருக்கு உதவி செய்திருக்கிறார். கேபிஒய் பாலா ஐம்பதாயிரம் ரூபாய் பண உதவி கொடுத்து நீங்கள் மீண்டும் பழைய நிலைக்கு மீண்டும் வரவேண்டும். உங்களுக்கு தேவையான உதவிகளை செய்கிறேன் என்று ஆறுதல் சொல்லியும் வந்திருக்கிறார். தற்போது கே பி ஒய் பாலாவின் இந்த செயல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. பலருமே கேபிஒய் பாலாவை பாராட்டி வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full