இந்தாங்க அண்ணா,என்னால முடிஞ்சது - லொள்ளு சபா நடிகரின் வீடியோவை கண்ட அடுத்த கணமே நேரில் சென்று உதவிய பாலா.

By Rajkumar · 11/11/2023

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாலா. தற்போது இவர் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதோடு இவர் பல்வேறு நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராகவும், விஜே வாகவும் பணியாற்றி வருகிறார். மேலும், பாலா நடிகர் மட்டுமில்லாமல், சமூக அக்கறை கொண்ட நபரும் ஆவார். சமீபத்தில் கூட தன்னுடைய பிறந்த நாளை ஒட்டி முதியோர் இல்லத்திற்கு ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கிக் கொடுத்திருந்தார் பாலா. இது குறித்து பலருமே பாராட்டி இருந்தார்கள். மேலும், இதுவரை 4 ஆம்புலன்ஸை கூட சொந்த செலவில் வாங்கி கொடுத்தார் பாலா.

ஆம்புலன்ஸ் வாங்கி கொடுப்பதோடு மட்டுமல்லாமல் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவி செய்வது, வறுமையில் வாடும் நடிகர்களுக்கு உதவுவது என்று செய்து வருகிறார் பாலா. அந்த வகையில் சமீபத்தில் லொள்ளு சபா நடிகர் வெங்கட் ராஜ், உடல் நிலை சரியில்லாமல் மருத்து வாங்க கூட கஷ்டப்படுவதாக வீடியோ ஒன்று வெளியானதை தொடர்ந்து அவருக்கு நேரில் சென்று உதவி செய்து இருக்கிறார் பாலா.

விஐய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சி 90ஸ் ரசிகர்கள் மத்தியில் மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் இருந்து சந்தானம் முதல் மனோகர் வரை பலர் சினிமாவில் நுழைந்தனர். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார் வெங்கட் ராஜ். சமீப காலமாக இவரை எந்த நிகழ்ச்சிகளிலும் காண முடிவதில்லை. இப்படி ஒரு நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவரது வீடியோ ஒன்று வைரலானது.

https://www.youtube.com/watch?v=rasxa37pc88&t=21s

அதில் பேசிய அவர் 'எனக்கு வீசிங் பிரச்சனை இருந்தது. ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அது மோசமாகி நான் மயங்கி விழுந்து விட்டேன். மருத்துவமனைக்கு வந்து எனக்கு infection ஆகிவிட்டது என்று சொன்னார்கள். இப்போது கொஞ்சம் தேறி வருகிறேன் என்று கூறியிருந்தார். மேலும்,சினிமா துறையில் இருந்து யாரும் உதவ வில்லையா? சந்தானம் எந்த உதவியும் செய்யவில்லையா என்று கேட்டதற்கு இல்லை பேசிக் கொண்டுதான் இருக்கிறேன்.

அவர் பிசியாக இருப்பதால் அவரால் வர முடியவில்லை. ஆனால் வந்து பார்க்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்கள். எனக்கு இப்போதைக்கு மருந்து வாங்க முடியவில்லை அதற்கு யாராவது உதவி செய்தால் நன்றாக இருக்கும் என்று உருக்கமுடன் பேசி இருந்தார். இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து Kpy பாலா வெங்கட் வீட்டிற்கு நேரில் சென்று தன்னால் முடிந்த பண உதவியை செய்து இருக்கிறார்.

View this post on Instagram

A post shared by Balan Akassh Balaiyan Jaganathan (@bjbala_kpy)

இதுகுறித்து அவரிடம் பேசிய பாலா 'உங்கள் வீடியோவை பார்த்ததும் மனசு ரொம்ப கஷ்டமாக போய்விட்டது உங்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தேன் தீபாவளிக்கு குழந்தைகளுக்கு துணிமணி எடுத்து கொடுத்தேன் எனவே என்னால் முடிந்த ஒரு ஒன்பதாயிரம் இருக்கிறது இதை வைத்துக் கொள்ளுங்கள் மேலும் ஏதாவது மருந்துச் செலவு வேண்டும் என்றாலும் என்னிடம் கேளுங்கள் நீங்கள் விரைவில் மீண்டு வர வேண்டும்' என்று கூறியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full