பெற்றோருக்கு 60-வது கல்யாணம் செய்து அழகு பார்த்த பாலா - அழகிய வீடியோ இதோ.

By subhashini · 4/8/2023

கேபிஒய் பாலா தன்னுடைய அப்பா, அம்மாவிற்கு 60-வது கல்யாணம் செய்து இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாலா. இவரை அனைவரும் வெட்டுக்கிளி என்று தான் அழைப்பார்கள். அந்த பெயர் தான் மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது. இவர் சாதாரண நபராகத்தான் விஜய் டிவியில் நுழைந்தார்.

பின், ஆரம்பத்தில் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் காமெடி செய்து வந்த இவர் மற்றவர்கள் கொடுக்கும் கவுண்ட்டருக்கு உடனடியாக பதில் கவுண்ட்டர் கொடுத்து விடுவார். அதற்க்காக இவர் இரவு பகலாக தன்னை தானே தயார் படுத்திக் கொண்டு இருந்தார். அந்த வகையில் இவருக்கு திருப்புமுனையாக இருந்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான். குக் வித் கோமாளி கோமாளி சமையலை மையப்படுத்தி இருப்பதாக இருந்தாலும் அதிலும் செய்யும் காமெடிகள் தான் அந்த நிகழ்ச்சியை இந்த அளவிற்கு வளர்த்து விட்டது.

KPY பாலா:

அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட KPY பாலா செய்யும் காமெடிகளுக்கு அளவே கிடையாது. தற்போது தான் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி கோலாகலமாக முடிவடைந்தது. ஆனால், இந்த சீசனில் பாலாவால் கலந்து கொள்ள முடியவில்லை. அதற்கு காரணம், இவர் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். ஏற்கனவே இவர் விஜய் சேதுபதியின் புலிக்குட்டி பாண்டி, யோகி பாபு நடித்த Shoe, பாண்டி, விமர்சகரான ப்ளூ சட்டை மாறனின் ஆண்டி இந்தியன், நாய் சேகர் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.

View this post on Instagram

A post shared by Bj Bala (@bjbala_kpy)

பாலா குறித்த தகவல்:

அதோடு இவர் பல்வேறு நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராகவும், விஜே வாகவும் பணியாற்றி வருகிறார். மேலும், குக் வித் கோமாளி பாலா அவர்கள் நடிகர் மட்டுமில்லாமல், சமூக அக்கறை கொண்ட நபரும் ஆவார். இவர் தான் சம்பாதித்த பணத்தின் மூலம் தன் பகுதியில் உள்ள சிறியவர்களை படிக்க வைப்பதுடன், ஆதரவற்ற குழந்தைகளை படிக்க வைப்பது, ஆதரவற்ற பெரியோர்களின் மருத்துவ செலவிற்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.

சமூக சேவை செய்யும் பாலா:

அதுமட்டும் இல்லாமல் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கிடைக்கும் பரிசுகளை கூட அவர் ஆதரவற்ற இல்லத்திற்கு தான் கொடுத்திருக்கிறார். சமீபத்தில் கூட இவருடைய பிறந்த நாளை முன்னிட்டு முதியோர் இல்லத்திற்கு ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கிக் கொடுத்திருந்தார். இது குறித்து பலருமே பாராட்டி இருந்தார்கள். பாலாவின் இந்த நல்ல மனசுக்கு தற்போது சினிமாவில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. அது மட்டும் இல்லாமல் விஜய் டிவியில் தொகுப்பாளராகவும் கலக்கிக்கொண்டு இருக்கிறார்.

பாலா வீட்டில் விசேஷம்:

இந்த நிலையில் பாலா வீட்டில் நடந்திருக்கும் விசேஷம் குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, கே பி ஒய் பாலா அவர்கள் தன்னுடைய பெற்றோரான ஜெகநாதன்- பூங்குழலி தம்பதிக்கு மிகவும் பிரம்மாண்டமாக 60-வது திருமணம் செய்து அழகு பார்த்திருக்கிறார். இது குறித்த புகைப்படத்தை தான் பாலா சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள், பிரபலங்கள் என பலருமே பாலாவின் பெற்றோருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வீடியோவை வைரலாக்கி தருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full