ஹீரோவான பின் தான் வாங்கிய சம்பளத்தை Kpy பாலா என்ன செய்தார் தெரியுமா? குவியும் பாராட்டு மழை

By subhashini · 3/7/2025

ஹீரோவாக நடிக்கும் தன் முதல் படத்தில் வாங்கிய சம்பளத்தை வைத்து கேபிஒய் பாலா செய்து இருக்கும் செயல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாலா. அதற்காக இவர் இரவு பகலாக தன்னை தானே தயார் செய்தார். அந்த வகையில் இவருக்கு திருப்புமுனையாக இருந்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான். இந்த நிகழ்ச்சியில் KPY பாலா செய்த காமெடிகளுக்கு அளவே கிடையாது.

இதன் மூலம் தான் இவருக்கு படங்களில் வாய்ப்பு கிடைத்தது. தற்போது இவர் படங்களில் பிசியாக நடித்தும், பல்வேறு நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும், விஜே வாகவும் பணியாற்றி வருகிறார். மேலும், பாலா அவர்கள் நடிகர் மட்டுமில்லாமல், சமூக சேவை செய்பவரும் ஆவார். இவர் தான் சம்பாதித்த பணத்தின் மூலம் தன் பகுதியில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளை படிக்க வைப்பது, ஆதரவற்ற பெரியோர்களின் மருத்துவ செலவிற்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.

சமூக சேவை செய்யும் பாலா:

பின் இவர் மலைவாழ் பகுதிகளில் இருக்கும் மக்களுக்கு ஆம்புலன்ஸ் வசதி செய்து தந்து இருந்தார். அதே போல கடந்த ஆண்டு புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து இருந்தார். இதனால் பாலாவை குட்டி ராகவா லாரன்ஸ் என்று சொல்கிறார்கள். தற்போது லாரன்ஸ் நடத்தி வரும் மாற்றம் அறக்கட்டளையில் பாலா இணைந்து சேவை செய்து கொண்டு வருகிறார். இது ஒரு பக்கம் சில மாதங்களுக்கு முன் ஜீ தமிழில் நடைபெற்ற டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் பாலா, ராகவா லாரன்ஸ் கலந்து கொண்டிருந்தார்கள்.

பாலா ஹீரோவாக நடிக்கும் படம்:

அதில் பாலா, ஹீரோவாக நடிக்க வேண்டும் என்பது தான் தன்னுடைய ஆசை என்று கூறியிருந்தார். உடனே ராகவா லாரன்ஸ், ராகவேந்திரா புரொடெக்‌சனில் நிறைய படம் பண்ணவில்லை. உனக்காக என் பிரண்ட்ஸ் நிறைய ப்ரொடியூசர் இருக்கிறார்கள். நல்ல காமெடி அண்ட் லவ் கதை பாலாவுக்கு பொருத்தமாக இருக்கும். இதை பார்க்கிற இயக்குனர்கள் யாராவது கதை இருந்தால் சொல்லுங்கள் என்று சொல்லி இருந்தார். இதைக் கேட்டவுடன் அந்த நிகழ்ச்சியிலேயே பாலா ரொம்பவே கதறி அழுதுவிட்டார். இதை அடுத்து பாலாவின் கனவு நிறைவேற்றப்பட்டது.

படம் குறித்த தகவல்:

இது தொடர்பாக ராகவா லாரன்ஸ், என்னுடைய தம்பி பாலாவின் கனவை நிறைவேற்றும் வகையில் அவரை ஹீரோவாக அறிமுகப்படுத்தி அந்த படத்தை நான் தயாரிப்பதாக சொல்லியிருந்தேன். அந்த படத்திற்கு இப்போது நல்ல தயாரிப்பாளர் நல்ல கதையுடன் கிடைத்துவிட்டார். பாலா ஹீரோவாக அறிமுகம் திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது என்று கூறி இருந்தார். பாலா நடிக்கும் படத்தை இயக்குனர் ஷெரிஃப் இயக்குகிறார். இந்த படத்தில் இந்த படத்தில் நமீதா, அர்ச்சனா, பாலாஜி சக்திவேல் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

சம்பளத்தில் பாலா சொன்னது:

இந்த படத்தை ஆதிமூலம் கிரியேஷன் நிறுவனம் மூலம் ஜெய்கிரண் தயாரிக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய டைட்டில் போஸ்டர் வெளியாகி இருந்தது. இந்த படத்திற்கு காந்தி கண்ணாடி என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்திற்காக வாங்கிய சம்பளத்தை வைத்து கேபிஒய் பாலா செய்திருக்கும் செயல்தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, இந்த படத்திற்காக வாங்கிய சம்பளத்தை வைத்து பாலா இரண்டு குடும்பங்களுக்கு வீடு கட்டிக் கொடுத்திருக்கிறார். இவருடைய இந்த மனதை பலரும் பாராட்டி வருகிறார்கள்

Tamil Behind Talkies AMP · Quick view
View full