வித்தியாசமான கிரைம் த்ரில்லர் பாணியில் வந்த 'ஃப்ரைடே' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ
இயக்குனர் ஹரி வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ஃப்ரைடே. இந்த படத்தில் அனீஸ் மாசிலாமணி, மைம் கோபி, கேபிஒய் தீனா, ராமச்சந்திர துரைராஜ், கலையரசன், சித்ராசேனன் , சித்து குமரேசன் உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜானி நாஷ் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். டுமே இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தை அனீஸ் மாசிலாமணி தயாரித்து இருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
கதைக்களம்:
படத்தில் ஹீரோ அனீஸ் மாசிலாமணி. இவர் கேபிஒய் தீனாவுடன் சேர்ந்து ஒருவரை கொலை செய்ய முயற்சிக்கிறார். அப்போது தீனா தாக்கப்படுகிறார். பின் இவர்களின் குழுவில் இருந்து தப்பித்தவர் அனீஸ் மாசிலாமணியை கொலை செய்ய முயற்சிக்கிறார். அனீஸ் மாசிலாமணி உடன் சேர்ந்து கொண்டு தீனா அவரே தீர்த்துக்கட்ட திட்டமிட உதவி செய்து கொண்டிருக்கிறார். அதற்குப்பின் என்ன நடந்தது? அனீஸ் மாசிலாமணி எதற்காக கொலை செய்ய முயற்சித்தார்? அவருடன் இருந்து கொண்டே கொலை செய்ய தீனா உதவி செய்வதற்கான காரணம் என்ன? இதற்கெல்லாம் பின்னணி என்ன என்பது தான் படத்தின் உடைய மீதி கதை.
படத்தின் நாயகனாக அனீஸ் மாசிலாமணி நடித்திருக்கிறார். தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து முடித்திருக்கிறார். நடிப்பு,வசனம்,ஆக்சன் என அனைத்துலுமே தன்னுடைய நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார். இவரை அடுத்து படத்தில் வரும் கேபிஒய் தீனாவும் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். மைம் கோபி மற்றும் பிற நடிகர்கள் எல்லோருமே தங்களுடைய வேலையை கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார்கள்.
நடிகர்களுடைய கதாபாத்திரங்களை இயக்குனர் சிறப்பாக தேர்வு செய்திருப்பது பாராட்டக் கூடிய விஷயம்.
கிரைம் திரில்லர் கதையை இயக்குனர் விறுவிறுப்பாக கொண்டு சென்றிருப்பது பாராட்டுக்குரிய விஷயம்.
சில இடங்களில் தொய்வை ஏற்படுத்தியிருந்தாலும் இயக்குனர் அதை நேர்த்தியாக கொண்டு சென்றிருப்பது நன்றாக இருக்கிறது. அடுத்து என்ன? என்று யூகிக்க கூடிய அளவிற்கு கதைகளை இயக்குனர் கொண்டு சென்றிருக்கிறார்.
தற்போது இருக்கும் தலைமுறையினருக்கு ஏற்ற வகையில் இயக்குனர் கதையை கொடுத்திருப்பது நன்றாக இருக்கிறது. பின்னணி இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் நன்றாக இருக்கிறது. ஒவ்வொரு காட்சிகளுக்கு ஏற்றவாறு பின்னணி இசை இருப்பது படத்திற்கு பக்கபலம். படத்தின் தலைப்பிற்கு ஏற்ப கதை முழுவதும் ஒரே ஒரு வெள்ளிக்கிழமை இரவில் தான் நடக்கிறது. மர்மமான முறையில் ரவுடிகள் எல்லாம் கொலை செய்யப்படுகிறார்கள். யார்? எதற்கு? என்ன? என்பதை தான் இயக்குனர் சுவாரசியமாக சொல்லியிருக்கிறார்.
படத்தில் நிறைய வன்முறை காட்சிகள் இருந்தாலும் முகம் சுளிக்காத வகையில் இயக்குனர் கொடுத்திருப்பது சிறப்பு. அதிலும் சில காட்சிகள் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையிலும் கொடுத்திருக்கிறார். படத்தில் குறை என்று சொன்னால் அது ஒரே இரவில் நடக்கும் கதை தான். பிளாஷ் பேக் காட்சிகள் கொஞ்சம் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பழிவாங்கல் கதையாக இருந்தாலும் அதை வித்தியாசமாக இயக்குனர் கொடுத்திருக்கிறார். மொத்தத்தில் எல்லோரும் சென்று பார்க்கும் படமாக தான் இருக்கிறது.
நிறை:
நடிகர்கள் நடிப்பு
பின்னணி இசை ஒளிப்பதிவு நன்றாக இருக்கிறது
விறுவிறுப்பான கதைக்களம்
ஆரம்பம் முதல் இறுதி வரை இயக்குனர் நேர்த்தியாக கதையை கொண்டு சென்றிருக்கிறார்
குறை:
ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்
புதுமுக நடிகர்கள்
பிளாஷ்பேக் காட்சிகள் குழப்பம்
மொத்தத்தில் ஃப்ரைடே - குட் டே