அப்பாவான கேபிஒய் பிரபலம் தீனா, சந்தோஷத்தில் அவரே வெளியிட்ட புகைப்படம் - குவியும் வாழ்த்துக்கள்
கேபிஒய் தீனாவின் மனைவி கர்ப்பமாக இருக்கும் செய்தி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பல்வேறு காமெடி நடிகர்கள் தற்போது சினிமாவில் நடித்து வருகிறார்கள். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் நடிகர் தீனா. இந்த நிகழ்ச்சியில் இவர் சரத் என்பவருடன் இணைந்து செய்த காமெடிகளை நாம் யாராலும் மறக்க முடியாது.
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் இவருக்கு கிடைத்த பிரபலம் மூலம் இவருக்கு சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்தது. இவர் தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியாகி இருந்த ‘பா பாண்டி' என்ற படத்தில் தனுஷின் நண்பராக நடித்திருந்தார். அதன் பின்னர் ‘தும்பா’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தீனா நடித்திருந்தார். இந்த இரண்டு படங்களிலும் இவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. ஆனால், இவருக்கு மிகப் பெரிய புகழை ஏற்படுத்தித் தந்தது கைதி படம் தான்.
தீனா திரைப்பயணம்:
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான ‘கைதி’ திரைப்படத்தின் மூலம் தான் தீனா மக்கள் மத்தியில் படு பேமஸ் ஆனார். மேலும், இந்த படத்திற்கு பின்னர் இவருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் உருவாக்கினார்கள். இதை அடுத்து இயக்குனர் லோகேஷ் இயக்கிய விஜய்யின் மாஸ்டர் படத்திலும் தீனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தற்போது இவர் படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் இவர் ஸ்டேஜ் ஷோக்களை கூட செய்து கொண்டிருக்கின்றார்.
தீனா குறித்த தகவல்:
இது ஒரு பக்கம் இருக்க, சில ஆண்டுகளுக்கு முன் இவர் தன்னுடைய சொந்த ஊரில் வீடு கட்டி முடித்திருந்தார். அதனுடைய புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வைரலாகி இருந்தது. அதன் பின் தீனாவிற்கு திருமணம் நடந்தது. தீனாவுக்கும் பிரகதி என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. பிரகதி கிராபிக் டிசைனராகப் பணிபுரிகிறார். திருமணம் பட்டுக்கோட்டையில் நடந்தது.
தீனா திருமணம்:
மணப்பெண்ணின் சொந்த ஊரும் பட்டுக்கோட்டை தான். இதனால் உறவினர்கள் மட்டும் திருமணத்தில் கலந்து கொண்டு இருந்தார்கள். டிவி, சினிமா பிரபலங்கள் எல்லாம் சென்னையில் நடந்த வரவேற்பில் கலந்து கொண்டு இருந்தார்கள். இவர்களுடைய திருமணத்திற்கு பிரபலங்கள் கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். அதோடு இது லவ் மெசேஜ் ஆகும். திருமணத்திற்கு பின்பும் தீனா படங்களை பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார்.
தீனா சொன்ன குட் நியூஸ்:
இப்படி இருக்கும் நிலையில் தீனா சொல்லி இருக்கும் சந்தோஷமான செய்தி தான் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதாவது தீனாவின் மனைவி பிரகதி தற்போது கர்ப்பமாக இருக்கிறாராம். இதை தான் தீனா சோசியல் மீடியாவில் அறிவித்து இருக்கிறார். அதோடு தன் மனைவி பிரக்னன்சி போட்டோஷூட் புகைப்படங்களை எல்லாம் இணையத்தில் பகிர்ந்து இருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்