விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பல்வேறு காமெடி நடிகர்கள் தற்போது சினிமாவில் நடித்து வருகிறார்கள். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் நடிகர் தீனா. இந்த நிகழ்ச்சியில் இவர் சரத் என்பவருடன் இணைந்து செய்த காமெடிகளை நாம் யாராலும் மறக்க முடியாது.கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் இவருக்கு கிடைத்த புகழ் மூலம் இவருக்கு சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்தது. இவர் தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியாகி இருந்த ‘பா பாண்டி’ படத்தில் தனுஷின் நண்பராக நடித்திருந்தார்.

அதன்பின்னர் ‘தும்பா’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தீனா நடித்திருந்தார். இந்த இரண்டு படங்களிலும் இவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. ஆனால், இவருக்கு மிகப் பெரிய புகழை ஏற்படுத்தித் தந்தது கைதி படம் தான்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான ‘கைதி’ திரைப்படத்தின் மூலம் தான் தீனா மக்கள் மத்தியில் படு பேமஸ் ஆனார். மேலும், இந்த திரைப்படத்திற்கு பின்னர் இவருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் உருவாக்கினார்கள்.

Advertisement

இதை அடுத்து இயக்குனர் லோகேஷ் இயக்கிய விஜய்யின் மாஸ்டர் படத்திலும் தீனா முக்கிய கதாபாத்திரத்தில்நடித்து இருந்தார் . தற்போது இவர் சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.அது மட்டும் இல்லாமல் இவர் ஸ்டேஜ் ஷோக்களை கூட செய்து கொண்டிருக்கின்றார். மேலும், சில மாதங்களுக்கு முன்பு தான் இவர் தன்னுடைய சொந்த ஊரில் வீட்டை கட்டி முடித்திருந்தார். அதனுடைய புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வைரலாகி இருந்தது.

இந்த நிலையில் இன்று தீனாவிற்கு திருமணம் நடக்க இருக்கிறது. இவருடைய திருமணம் திருவாரூரில்நடைபெற்றது.இது குறித்து தீனா கூறியிருப்பது, வீட்டைக் கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப்பார் என்று பெரியவர்கள் சொல்வார்கள். வீட்டை கட்டி முடித்த கொஞ்ச நாட்களிலேயே எனக்கு கல்யாணமும் கைகூடி வந்துவிட்டது. எல்லாம் கடவுள் ஆசிர்வாதம் தான். அதோடு எனக்கு டிவி தந்த ஆதரவும், ரசிகர்களுடைய அன்பு தான் இதற்கெல்லாம் காரணம். ஷூட்டிங்கில் இருந்ததனால் நிறைய பேருக்கு என்னால் நேரில் போய் பத்திரிகை கொடுக்க முடியவில்லை என்று கூறி இருந்தார்.

Advertisement

இந்த நிலையில் இன்று காலை தீனாவுக்கும் பிரகதி என்பவருக்கும் திருமணம் நடந்திருக்கிறது. பிரகதி கிராபிக் டிசைனராகப் பணிபுரிகிறார். திருமணம் காலை பட்டுக்கோட்டையில் நடந்திருக்கிறது. மணப்பெண்ணின் சொந்த ஊரும் பட்டுக்கோட்டைதான். உறவினர்கள் மட்டும் திருமணத்தில் கலந்து கொண்டனர். டிவி, சினிமா பிரபலங்கள் இம்மாதம் 10ம் தேதி சென்னையில் நடக்கும் வரவேற்பில் கலந்து கொள்விருக்கிறார்.

Advertisement

கலக்கப்போவது யாரு’ சரத் மட்டும் பட்டுக்கோட்டை திருமணத்திலும் கலந்து கொண்டார். அவரிடம் பேசியபோது,நான் அவன் குடும்பத்துல ஒருத்தன் பாஸ். கல்யாணத்துக்கு வரலைன்னா அப்படியே போயிடுன்னு சொல்லிடுவான்’ என்றார் சரத். சமீபத்தில்தான் தன் சொந்த ஊரில் வீடு கட்டியிருக்கிறார் தீனா. அப்போது பலரும் திருமணம் எப்போது எனப் பதிவிட்டிருந்தனர். தற்போது திருமணமும் நடந்திருக்கிறது. கமென்ட்டில் தீனாவுக்கு வாழ்த்துகளைத் தட்டிவிடுங்கள் மக்களே!

Advertisement