'மதியாதார் வாசலை மிதியாதே' KPY சரத் போட்ட திடீர் பதிவு - என்ன தான் ஆச்சு?

By subhashini · 29/9/2025

குக் வித் கோமாளி நிகழ்ச்சி பற்றி kpy சரத் போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலாமன நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி’ ஒன்று. இதுவரை இந்த நிகழ்ச்சி ஆறு சீசன்கள் முடிந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அதற்கு முக்கிய காரணமே, இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான்.

மேலும், இந்த முறை ஆட்டம் புதுசு, புது ஸ்கூல், புது ரூல், புது ஜட்ஜ் என்று ஏற்கனவே இருந்த இரண்டு நடுவர்களுடன் மூன்றாவது நடுவராக செஃப் கௌஷிக் என்ட்ரி கொடுத்து இருந்தார். இந்த சீசனில் லட்சுமி ராமகிருஷ்ணன், நடிகை பிரியா ராமன், உமர் லத்தீப், ஷபானா, விவசாயி நந்த குமார், நடிகை மதுமிதா, மெரீனா கடற்கரை சுந்தரி அக்கா, யூடியூப் பிரபலம் செளந்தர்யா சில்லுகுரி, பிக் பாஸ் பிரபலம் ராஜு, நடிகர் கஞ்சா கறுப்பு ஆகியோர் களமிறங்கியிருந்தார்கள்.

குக் வித் கோமாளி:

இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. நேற்று தான் இந்த நிகழ்ச்சி முடிவடைந்தது. இதில் இறுதி போட்டியாளர்களாக ஷபானா, லட்சுமி ராமகிருஷ்ணன், உமர், ராஜு ஆகியோர் தன்னுடைய சமையல் திறமைகளை காண்பித்து இருந்தார்கள். இந்த நிகழ்ச்சியில் டைட்டில் பட்டத்தை யாரும் எதிர்பார்க்காத வகையில் ராஜு வென்றிருந்தார். இது பலருக்குமே ஷாக்கிங் தான். காரணம், ஆரம்பத்தில் இருந்து இவர் பெரிதாக சமையலில் ஆர்வம் இல்லாமல் தான் இருந்தார்.

kpy சரத் பதிவு:

இறுதிக்கட்டத்தை நெருங்கும் போது இவர் தன்னுடைய திறமையை காண்பித்து முதலிடத்தையும் பெற்று இருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் இவர் தான் வெற்றி பெற்றார். முதல் பரிசு பெற்ற ராஜுவிற்கு 5 லட்சம் ரூபாய் பரிசு தொகை கொடுக்கப்பட்டது. ஷபானா இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறார். அவருக்கு இரண்டு லட்சம் ரூபாய் பரிசும் வழங்கப்பட்டது. மேலும், இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் குக்குகள் மாறினாலும் கோமாளிகள் மாறுவதே கிடையாது. இந்த நிகழ்ச்சியின் மூலம் நிறைய கோமாளிகளுக்கு சினிமா பட வாய்ப்புகள் கிடைத்து இருக்கிறது.

View this post on Instagram

A post shared by Sarath_offl (@sarath_kpy)

நிகழ்ச்சி பற்றி சொன்னது:

அந்த வகையில் இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் இருந்து ஆறாவது சீசன் வரை கோமாளியாக இருந்தவர் kpy சரத். இவர் விஜய் டிவியின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார். இப்படி இருக்கும் நிலையில் நிகழ்ச்சி முடிந்த உடனே கேபிஒய் சரத் போட்டு இருக்கும் பதிவுதான் தற்போது இணையத்தில் சலசலப்பு ஏற்படுத்தி இருக்கிறது. அதில் அவர், முந்தைய சீசனில் வாங்கிய உழைப்பாளி என்ற விருதை பதிவிட்டு, எனக்கு இந்த விருது போதும், மக்களுடைய அன்பு போதும். மதியாதார் வாசல் மிதியாதே என்று பதிவிட்டு இருக்கிறார். இதன் மூலம் இவருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கும் இடையே பிரச்சனை என்று கூறப்படுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full