பத்துக்கு பத்து வீட்ல ஒத்த ரூமுல தான் மொத்த குடும்பமும் இருந்தோம் - நெகிழ்ச்சியில் நடிகர் தங்கதுரை

புது வீடு வாங்கிக் குடியேறிய கலக்கப் போவது யாரு தங்கதுரை

By subhashini · 17/6/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் தங்கதுரை. இவரை கடி ஜோக் தங்கதுரை என்றுதான் சொல்வார்கள். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார். அதனை தொடர்ந்து இவர் பல நிகழ்ச்சிகளில் தன்னுடைய காமெடி திறமையை வெளிப்படுத்தி வந்தார். அதன் மூலம் தான் இவருக்கு சினிமா பட வாய்ப்புகளும் வந்தது. அந்த வகையில் இவர் டிடி ரிட்டன்ஸ், பன்னி குட்டி போன்ற பல படங்களில் சிறு வேடங்களில் நடித்திருந்தார்.

இவருடைய நடிப்பும் மக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றிருந்தது. தற்போதும் இவர் சில படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார். அது மட்டும் இல்லாமல் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாகவும் கலக்கிக் கொண்டிருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் தங்கதுரை அவர்கள் சென்னையில் சொந்தமாக வீடு வாங்கி கிரகப்பிரவேசம் நடித்திருந்தார். இது தொடர்பான வீடியோக்கள் புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வைரலாகி இருந்தது. அது மட்டும் இல்லாமல் இவருடைய வீட்டின் கிரகப்பிரச விழாவிற்கு விஜய் சேதுபதி, செந்தில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அமைச்சர் ராஜ்மோகன், ஸ்ரீநாத் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.

தங்கதுரை புது வீடு:

இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் தங்கதுரை, சென்னையில் ஒரு வீட்டில் குடியிருந்தோம். சமைக்க படுக்க எல்லாம் ஒரே ரூம்தான். ஆனால், குடும்பம் பெரியது. மழைக்காலம் வந்தால் கேட்கவே வேண்டாம். மழைத்தண்ணீரும் சாக்கடை தண்ணீரும் சேர்ந்து வீட்டுக்குள்ளே வந்துவிடும். பெரிய இரும்பு கட்டிலில் எல்லா பொருட்களையும் தூக்கி வைத்து விட்டு அக்கம் பக்கத்தில் தெரிந்தவர்களின் வீடுகளில் தான் போய் தங்கிக் கொள்வோம். சின்ன வீடு என்பதாலே என்ன நினைப்பாங்களோ என்று பள்ளிக்கூடத்தில் இருந்து நண்பர்கள் யாரையும் வீட்டுக்கு கூப்பிட்டு வரமாட்டேன். ஆனாலும், எங்க அப்பா எங்களையெல்லாம் நல்லா படிக்க வைத்தார்.

தங்கதுரை பேட்டி:

நான் 12-வது ஸ்கூல் அளவில் மூன்றாவது இடம் பிடித்தேன். பெரிய குடும்பமாக இருந்ததாலேயே அடிக்கடி வீடு மாற வேண்டி இருந்தது. ஹவுசிங் போர்டு வீட்டில் கொஞ்ச நாள் இருந்தோம். வாடகை வீடுகளில் கசப்பான அனுபவம் ரொம்பவே இருக்கு. நானுமே அதை எல்லாம் கடந்து தான் வந்தேன். பத்துக்கு பத்துல தொடங்கி அப்புறம் சிங்கிள் பெட்ரூம் வீடு டபுள் பெட்ரூம் வீடுன்னு கொஞ்சம் கொஞ்சமாக அடி எடுத்து வைத்தோம். எப்படியோ முட்டி மோதி இன்னைக்கு சென்னையில் முக்கியமான கோயம்பேட்டில் 19வது மாடியில் சொந்தமாக ஒரு பிளாட்டை வாங்கி விட்டேன். நம்ம குடும்பத்தில் சொந்த வீடு வாங்குற முதல் தலைமுறை என்று என்னுடைய அப்பா என்னை பார்த்து பெருமையாக சொன்னார்.

வாழ்க்கையில் பட்ட கஷ்டம்:

மூன்று பெட்ரூம் வீடு நீச்சல் குளம் லைப்ரரி விளையாட கிரௌண்ட் என எல்லா வசதியும் இருக்கிற கம்யூனிட்டி ஏரியா. எனக்கு கிடைக்காத வசதி வாய்ப்புகள் என் பிள்ளைகளுக்கு கிடைக்கணும் என்ற சந்தோசமாக இருக்கு. அதேபோல் சொந்தக்காரங்க எல்லோரையும் ஃபங்ஷனுக்கு கூப்பிட்டேன். சிலர் கண்ணு பட்டுடும் கிரகப்பிரவேசத்தை கிராண்டா செய்ய வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். என்னால் இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. என் சொந்த பந்தம் அண்ணன் தம்பி பங்காளிங்க எல்லாமே கஷ்டப்பட்டு தான் இருந்தோம். அதில் ஓரளவு வசதியா வந்த நான் புதுசா ஒரு வீட்டை வாங்கி குடியேறும் போது அவங்களுக்கும் அது ஒரு உத்வேகத்தை தரும் இல்லையா? நாம நல்ல விதமா யோசித்தால் நமக்கும் நல்லது தான் நடக்கும் என்று உறுதியாக நம்புகிறேன் என்று கூறி இருக்கிறார்

Tamil Behind Talkies AMP · Quick view
View full