புது வீடு வாங்கியுள்ள KPY சரத், வைரலாகும் கிரகப்பிரவேசப் புகைப்படங்கள் இதோ
விஜய் டிவி பிரபலம் KPY சரத் புது வீடு வாங்கி இருக்கும் செய்தி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் சரத். இவர் பார்ப்பதற்கு அச்சு அசலாக திரைப்பட நடிகர் மொட்டை ராஜேந்தர் அசலாக போன்று இருப்பார்.
மேலும், இவர் நிகழ்ச்சியில் தீனாவுடன் இணைந்து மொட்டை ராஜேந்திரன் பேசி அசத்திய காமெடிகள் செய்திருந்தார். கலக்க போவது யாரு நிகழ்ச்சிக்கு முன்பாகவே இவர் விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான வெற்றித் தொடரான 'கனா காணும் காலங்கள்' தொடரில் நடித்து இருந்தார். ஆனால், இது பலரும் அறிந்திராத ஒரு விஷயம். அதன்பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தான் இவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
சரத்- கிருத்திகா திருமணம்:
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலத்தை வைத்து இவர் சிபிராஜ் நடிப்பில் வெளியான 'சத்யா' படத்திலும் நடித்திருந்தார். அதற்கு பின் தன்னுடைய நீண்ட நாள் காதலியான கிருத்திகா என்பவரை சரத் திருமணம் செய்து கொண்டார். இவரின் மனைவி கிருத்திகாவும் மீடியாவுடன் தொடர்புடையவர் தான். இவர் முறைப்படி கிளாகிக்கல் நடனம் கற்றவர். இதுவரை இவர் பல மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார். கூத்து பட்டறை நிகழ்ச்சியிலும் நடனமாடியுள்ளார்.
குக் வித் கோமாளி:
பின், சரத்- கிருத்திகா இருவரும் சேர்ந்து Mr and Mrs சின்னத்திரை சீசன் 3ல் கலந்து கொண்டு டைட்டிலை வெற்றி பெற்றார்கள். அத்ததுடன் சரத் – கிருத்திகா ஜோடிக்கு 5 லட்சம் ரொக்கத்தையும் வழங்கி இருக்கிறார்கள். அதற்கு பின் சரத் விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று வருக்கிறார்.
புது வீடு வாங்கியுள்ள சரத்:
மேலும், சரத்தும் அவர் மனைவி கருத்திகாவும் இணைந்து இன்ஸ்டாகிராம் மற்றும் youtube சேனல்களில் மிக ஆக்டிவாக வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இவர்கள் போடும் குக்கிங் வீடியோ மற்றும் Vlogs வீடியோக்களுக்கும் பல லட்சம் பார்வையாளர்கள் உண்டு. இந்நிலையில் சரத் மற்றும் கிருத்திகா இணைந்து தற்போது புதிய வீடு வாங்கியிருக்கும் செய்திதான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சரத் பதிவு:
தற்போது இது குறித்து சரத் தனது instagram பக்கத்தில், சென்னையில் வீடு வாங்குவது. நீண்ட நாள் கனவு இன்று நிறைவேறியது. 12 வருடம் போராட்டத்திற்குப் பிறகு ஒரு இடத்தை எங்கள் வீடு என்று அழைக்கும் நாள் வந்துவிட்டது. அனைவருக்கும் நன்றி. என்னுடன் உறுதுணையாக இருந்த என் துணை மனைவி கிருத்திகா, லவ் யூ மா என்று எமோஷனலாக பதிவிட்டு, வீட்டின் கிரக பிரவேச புகைப்படங்களையும் பகிர்ந்திருக்கிறார். தற்போது புது வீடு வாங்கிய சரத்திற்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.