Selfie எடுக்க வந்த குள்ள ரசிகரை கேலி செய்த நபரை கடிந்த பரம சுந்தரி நடிகை. பின் அவர் செய்த செயல். குவியும் பாராட்டு.

By Siva · 3/9/2022

நடிகை க்ரிதி சனோன் உடன் செல்பி எடுக்க வந்த குள்ளமான நபர் செய்த செயலால் நடிகை ஷாக் ஆகிருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் க்ரிதி சனோன். இவர் சிறந்த கதை அம்சங்களை தேர்வு செய்து நடித்து வருவதால் பிரபலமான நடிகையாக திகழ்கிறார். இவருடைய நடிப்பு திறமைக்காக இவர் பல விருதுகளையும் வாங்கி இருக்கிறார்.

அதிலும் இவர் நடித்த தில்வாலே, க்ளாங்க், பரேலி கி பார்ஃபி, ஹவுஸ்புல் போன்ற பல படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் தெலுங்கில் மகேஷ்பாபு ஜோடியாக நேனொக்கடே என்ற படத்திலும் நடித்திருக்கிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த படம் ” மிமி ”. இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. அதிலும் அந்த திரைப்படத்தில் இடம்பெற்ற பரமசுந்தரி பாடல் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்தது.

கீர்த்தி சனோன் குறித்த தகவல்:

இந்தப் பாடலை ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு இருந்தார்கள். இதனிடையே நடிகை கீர்த்தி சனோன் அவர்கள் நடிகர் அமிதாப்பச்சன் வீட்டில் வாடகைக்கு இரண்டு வருடங்களுக்கு ஒப்பந்தம் போட்டிருக்கிறார். அதற்காக அட்வான்ஸ் தொகையை 60 லட்சமும், மாதம் வாடகை 10 லட்சம் கொடுத்து இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது இவர் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

https://www.youtube.com/watch?v=LrJJixwEn9E

செல்பி எடுத்த மர்ம நபர்:

இந்த நிலையில் செல்பி எடுக்க வந்த மர்ம நபர் செய்த செயலால் நடிகை கீர்த்தி சனான் ஷாக் ஆகி இருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகர் நடிகைகள் பொது இடங்களுக்கு வந்தால் அவர்களை பார்க்க பெரிய ரசிகர் கூட்டமே திரண்டு வரும். மேலும், பிரபலமான நடிகர்களுடன் ரசிகர்கள் செல்பி எடுப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். ஆனால், அப்படி செல்பி எடுக்கும் வாய்ப்பு எல்லோருக்குமே கிடைப்பதில்லை.

குள்ள நபர் செய்த செயல்:

அந்த வகையில் பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் சமீபத்தில் பொது இடத்திற்கு சென்றிருக்கிறார். அப்போது அவரைக் காண ரசிகர்களின் கூட்டம் திரண்டு இருக்கிறது. போட்டோ எடுக்க போட்டோகிராபர்கள் பலருமே கூடி இருந்தார்கள். இப்படி ஒரு நிலையில் ஒரு குள்ளமான நபர் நடுவில் புகுந்து கீர்த்தி சனோன் உடன் செல்பி எடுக்க வந்திருக்கிறார். அவரை அங்கு இருந்த நபர் ஒருவர் 'வேறு எதாவது உயரமாக எடுத்து வாருங்கள் என்று கிண்டல் செய்திருந்தார்.

ஷாக்கான கீர்த்தி சனோன்:

அதற்கு , நடிகை கிரிட்டி சனோன் ''ஏய் எதுக்கு அப்படி சொல்றீங்க' என்று கூறியதோடு அந்த நபரை அருகில் வர வைத்து அவருக்கு கீழே அமர்ந்து போனை வாங்கி செல்பி எடுத்துக் கொடுத்திருக்கிறார். ஆனால், அந்த நபர் தன்னிடம் இருந்த கூலிங் கிளாஸை போட்டுக்கொண்டு இன்னொரு செல்பி எடுங்க என்று கூறியிருக்கிறார். இதை பார்த்ததுமே நடிகை கீர்த்தி சனோன் ஷாக் ஆகிவிட்டார். தற்போது இந்த வீடியோ தான் சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.

behindtalkies AMP · Quick view
View full