Fan போட்டதும் அவரோட Wig - பாலய்யா குறித்து மேடையில் பேசிய KS ரவிகுமார். கடுப்பன ஜெய் பாலைய்யா ரசிகர்கள்.

By Arun · 8/3/2024

தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா குறித்து கே எஸ் ரவிக்குமார் பேசிய விஷயம் பாலகிருஷ்ணா ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தி இருக்கிறது. தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா மோத்வானி. இவர் சீரியலின் மூலம் தான் தன்னுடைய கேரியரை தொடங்கினார். அதன் பின் இவர் ஹிந்தியில் வெளியான கோய் மில் கயா, ஹவா, ஆப்ரா கா டாப்ரா, ஜாகோ, போன்ற பல சீரியல்களில் குழந்தைக்கு நட்சத்திரமாக நடித்து இருக்கிறார்.

https://twitter.com/iam_Tharani/status/1765430332952871365

பின்னர் தெலுங்கு படத்தின் மூலம் தான் ஹன்சிகா வெள்ளித்திரைக்கு முதன் முதலாக அறிமுகமாகினார்.
அதனை தொடர்ந்து இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் பிற மொழி படங்களில் நடித்து இருக்கிறார். அதோடு இவர் சமீப காலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்து எடுத்து நடித்து வருகிறார். ஆனால், அந்த படங்கள் எதுவும் பெரிதாக வெற்றியடைவில்லை. இருந்தாலும், ஹன்சிகா தொடர்ந்து நடித்து வருகிறார்.

ஹன்சிகா குறித்த தகவல்:

இதற்கிடையில் தனது நீண்ட நாள் நண்பர் மற்றும் தொழில் கூட்டாளியுமான சோஹைல் கதுரியா என்பவரை காதலித்து வந்த ஹன்சிகா கடந்த வருடம் டிசம்பர் 4 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் ஒரு வாரம் கோலாகலமாக நடந்தது. திருமணத்திற்கு பிறகும் ஹன்சிகா படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஹன்சிகா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் கார்டியன். இயக்குனர் சபரி, குரு சரவணன் இணைந்து இயக்கியிருக்கும் திரில்லர் படம்.

https://twitter.com/saloon_kada/status/1765429123206324715

கார்டியன் படம்:

இந்த படத்தை விஜய் சுந்தர் தயாரித்திருக்கிறார். இந்த படம் இந்த மாதம் வெளியாக இருக்கிறது இந்நிலையில் இந்த படத்தினுடைய நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இயக்குனர் கே எஸ் ரவிக்குமார், தெலுங்கில் பாலைய்யாவை வைத்து ஒரு படத்தை இயக்கியிருந்தேன். அப்போது செட்டில் யாராவது சிரிப்பதை பார்த்தாலே இவர் எதுக்கு சிரிக்கிறார் என்று கோபப்பட்டு கேட்பார். அப்படிதான் என்னுடைய உதவியாளர் சரவணன் பாலாய்யாவிடம் மாட்டிக் கொண்டார்.

கே எஸ் ரவிக்குமார் சொன்னது:

அது என்னன்னா, பாலைய்யா ரசிகர்களை பார்த்து திரும்பும் போது அவருடைய வீக் கொஞ்சம் அசைந்து விட்டது. அதைப் பார்த்து சரவணன் சிரித்து இருக்கிறார். இதை கவனித்த அவர், எதுக்கு சிரித்தாய்? என்று கோபப்பட்டு கேட்டார். உடனே நான் சென்று இவர் என்னுடைய உதவியாளர் தான் என்று சொன்னேன். ஆனால், அவர் அதைக் கேட்காமல் இவர் எதிர் கேங் என்று கூறி அவரை அடிக்கவே பாய்ந்தார். அப்புறம் ஒரு வழியாக சரவணனை அவரிடம் இருந்து காப்பாற்றினேன்.

https://twitter.com/cinecorndotcom/status/1765694507428032602

கடுப்பான பாலைய்யா ரசிகர்கள் :

ஒருவழியாக சரவணன் அவரிடம் மாட்டிக் கொண்டு அடி வாங்காமல் தப்பித்து விட்டார். மேலும், பாலைய்யா பழகுவதற்கு தங்கமானவர், நல்ல மனிதர். ஆனால், எதிலியுமே ஒரு விதமான சந்தேகத்துடன் தான் இருப்பார் என்று கூறியிருக்கிறார். தற்போது கே எஸ் ரவிக்குமாரின் இந்த பேச்சு பாலைய்யா ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. உங்களுக்கு வாய்ப்பு கொடுத்த பாலைய்யாவை இப்படியா பேசுவீர்கள் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full