பிரபலங்கள் கலந்து கொண்ட குறளரசனின் திருமண வரவேற்பு.! வெளியான புகைப்படங்கள்.!

By Rajkumar · 30/4/2019

நடிகர் மற்றும் இயக்குனரான டி ராஜேந்தர் மகனும் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவின் தம்பியுமானவர் குறளரசன். இவர் சிறு வயதில் சிம்புவை போல டி ராஜேந்தர் இயக்கிய பல்வேறு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.சமீபத்தில் இவர் இஸ்லாம் மதத்திற்கு மாறியது பரபரப்பாக பேசப்பட்டது.



இயக்குநர்  டி.ராஜேந்தருக்கு இலக்கியா என்ற மகளும், சிலம்பரசன், குறளரசன் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். இலக்கியாவிற்கு திருமணம் ஆகிவிட்டது. காதல் தோல்வியால் தனது திருமணத்தை தள்ளிப்போட்டுள்ளார் சிம்பு என்று தகவல்.

இந்நிலையில், கடந்த மாதம் ராஜேந்தரின் இளையமகனும் சிம்புவின் தம்பியான குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்.  தந்தை ராஜேந்தர், தாய் உஷா முன்னிலையில் அவர் மதம் மாறினார். குறளரசன்பெண்ணின் நபீலா ஆர். அஹமத். என்பவரை காதலித்து வந்தார்.

நபீலாவின் பெற்றோர் பெயர் ரஃபி அஹமத் - ரெஹ்மத் அஹ்மத்.இவர்களுடைய திருமண வரவேற்பு, நேற்று 29-ம் தேதி சென்னை கிண்டியிலுள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் உள்ள ராஜேந்திர ஹாலில் மாலை 7 மணிக்குநடைபெற்றது.

behindtalkies AMP · Quick view
View full