உனக்கு மட்டும் எப்படி இது நடக்குது? வலிமை படம் பார்த்திவிட்டு அஜித்திடம் குஷ்பு கேட்ட கேள்வி.

By Rajkumar · 25/2/2022

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. அந்த வகையில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து இரண்டு வருட காத்திருப்புக்கு பிறகு வலிமை படம் ரிலீசாகி இருக்கிறது. நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத் அவர்கள் அஜித்தை வைத்து வலிமை படத்தை இயக்கி இருக்கிறார். இதையும் போனிகபூரே தயாரித்து உள்ளார். இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள்.

இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து உள்ளார் மற்றும் நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், படத்தில் அஜித் அவர்கள் அசிஸ்டன்ட் கமிஷனராக நடித்திருக்கிறார். சென்னையில் Satan Slave குழுவை சேர்ந்த இளைஞர்கள் பைக்கை வைத்து பல்வேறு குற்றங்களில் ஈடுபடுகின்றார்கள். இதை அஜித் கண்டுபிடித்து அந்த கூட்டத்தின் தலைவரை பிடிக்கிறார். இந்த குழுவில் அஜித்தின் தம்பியும் இருப்பது தெரிகிறது. இதையெல்லாம் அஜித் எப்படி சமாளித்து வருகிறார்? என்பது தான் படத்தின் கதை.

வலிமை படம் பற்றிய தகவல்:

படம் முழுவதும் அஜித்தின் ஒவ்வொரு காட்சிகளும் பிரமிக்க வைக்கும் வகையில் உள்ளது. அதோடு வில்லன் கதாபாத்திரத்தில் கார்த்திகேயா மிரட்டியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் ஆண்களுக்கு இணையாக ஆக்சன் காட்சிகளில் ஹூமா குரேஷி மாஸ் காட்டியிருக்கிறார். அதிலும் படத்தில் பஸ் பைட் தமிழ் சினிமாவிலேயே ஒரு மைல்கல் காட்சி என்று சொல்லுமளவிற்கு இயக்குனர் மிரட்டி இருக்கிறார். மேலும், வலிமை படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டும் இல்லாமல் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது.

வலிமை படத்தின் வசூல் சாதனை:

அதுமட்டும் இல்லாமல் வலிமை திரைப்படம் கேரளாவில் வெளியாகி முதல் நாளில் 6.9 லட்சம் வரை வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் கேரளாவில் அதிக ரசிகர்களை கொண்டவர் விஜய். விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் கேரளாவில் வெளியாகி முதல் நாளில் 3.65 லட்சம் தான் வசூல் செய்தது. ஆனால், தற்போது வலிமை படம் விஜய்யின் மாஸ்டர் படத்தின் வசூல் சாதனையை முறியடித்து முந்தி இருக்கிறது. மேலும், வலிமை’ படத்தை பார்த்து திரை உலக பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை அஜித்துக்கும், வலிமை படக் குழுவினர்களுக்கும் தெரிவித்து வருகின்றனர்.

அஜித் குறித்து குஷ்பூ பதிவிட்ட பதிவு;

அந்த வகையில் தற்போது நடிகை குஷ்பு அவர்கள் வலிமை படம் குறித்தும், அஜித் குறித்தும் தனது டுவிட்டரில் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனி பெயரை போட்டு, எனது ஜார்ஜ் க்ளூனி தல! உனக்கு மட்டும் தான் இப்படி கூட்டம் வருகிறது. அஜித், போனிகபூர், வினோத் மற்றும் அனைத்து குழுவினருக்கும் எனது வாழ்த்துக்கள். குறிப்பாக எனது டார்லிங் ஹூமா குரேஷிக்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார். தற்போது குஷ்புவின் இந்த பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

குஷ்பூவின் திரைப்பயணம்:

தமிழ் சினிமா உலகில் 90 காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் நடிகை குஷ்பு. இவர் 1980களில் குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். பின் 1989ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் தமிழ் சினிமா உலகில் பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக இருந்தார். பிறகு இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் கன்னடம், மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இவர் குணச்சித்திர வேடங்களில் படங்களில் நடித்து வருகிறார். இவர் சினிமாவில் மட்டும் இல்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினி ஆகவும், நடுவராகவும் பணியாற்றி வருகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full