இப்போ தான் சின்னத்தம்பி ஞாபகம் வருதா ? - தனது தம்பியின் இரங்கல் பதிவில் மோசமாக கமண்ட் செய்த நபர். குஷ்பூவின் செருப்படி பதில்.

By Rajkumar · 21/12/2022

தனது தம்பியின் இறப்பு குறித்து பதிவிட்ட பதிவில் கேலியாக கமண்ட் செய்த நபருக்கு குஷ்பூ செருப்படி பதிலை கொடுத்துள்ளார். தமிழ் சினிமா உலகில் 80பது கால கட்டங்களில் முன்னணி நடிகையாக கொடி கட்டி பறந்தவர் நடிகை குஷ்பு. தமிழ் ,தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி திரைப் படங்களில் நடித்து உள்ளார். குஷ்புவின் மீது உள்ள அன்பினால் அந்த காலகட்டத்திலேயே அவருக்கு கோவில் கட்டினார்கள் அவரின் ரசிகர்கள். தற்போது இவர் சின்னத்திரை,வெள்ளித்திரை என பல துறைகளிலும் கலக்கி கொண்டு இருக்கிறார்.

இவர் தமிழ் சினிமா திரை உலகில் ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்க்குமார், விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் படங்களில் நடித்து உள்ளார். நடிகை குஷ்பு திரைப்பட நடிகை மட்டுமில்லாமல் அரசியல்வாதியும் ஆவார். ஆரம்பத்தில் திமுக கட்சியில் இருந்து இவர் பின்னர் காங்கிரஸ் கட்சிக்கு தாவினார். பின்னர் காங்கிரஸ் கட்சியில் இருந்தும் விலகி தற்போது பாஜகவில் இருந்து வருகிறார். இதனாலையே குஷ்புவை அடிக்கடி காங்கிரஸ் மற்றும் திமுகவை சேர்ந்த ஆதரவாளர்கள் அடிக்கடி விமர்சித்து வருவது வழக்கம்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் குஷ்பூ தனது அண்ணன் உயிரருக்கு போராடி வருவதாக தெரிவித்து இருந்தார். இதுகுறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்ட குஷ்பூ 'தனிப்பட்ட நெருக்கடி காரணமாக சிறிது காலம் ஓய்வில் இருந்தேன். எனது மூத்த சகோதரர் உயிருக்கு போராடி வருகிறார். கடந்த 4 நாட்களாக ICUவில் சிகிச்சை பெற்று வருகிறார். இன்று தான் ஒரு சிறிய முன்னேற்றம் காணப்படுகிறது. அவர் குணமடைய வேண்டிக்கொள்ளுங்கள் என்று நடிகை குஷ்பு அந்த பதிவில் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். ரசிகர்களும் உங்களுடைய அண்ணன் விரைவில் குணமடைவார் என்று பதிவிட்டு இருந்தார்கள்.

இந்த நிலையில் குஷ்புவின் அண்ணன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிகிச்சை பலனின்றி காலமானார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்த குஷ்பூ '"உங்கள் அன்புக்குரியவர்கள் எப்போதும் உங்களுடன் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பும் அளவுக்கு, விடைபெறும் நேரமும் வரும். என் சகோதரனின் பயணம் இன்றுடன் முடிந்தது. அவருடைய அன்பும் வழிகாட்டுதலும் எப்போதும் எங்களோடு இருக்கும். அவருக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் சொல்வது போல், வாழ்க்கையின் பயணம் கடவுளால் தீர்மானிக்கப்படுகிறது" என்று வருத்தத்துடன் தெரிவித்து இருந்தார்.

குஷ்பூவின் இந்த பதிவிற்கு ரசிகர்கள் பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்தனர். மேலும், தம்பியை இழந்து வாடிய குஷ்பூவிற்கு பலரும் ஆறுதல் தெரிவித்தனர். இப்படி ஒரு நிலையில் ட்விட்டர் வாசி ஒருவர் 'உங்களுக்கு இப்போ தான் சின்னத்தம்பி ஞாபகம் வருதா' என்று சின்னத்தம்பி பிரபுவை மாறைமுகமாக குறிப்பிட்டு படு மோசமாக ட்வீட் செய்து இருந்தார். இந்த பதிவை கண்டு மற்ற ட்விட்டர் வாசிகள் பலரும் அந்த நபரை திட்டினர்.

தன் தம்பியின் இறப்பு பதிவில் கூட இப்படி கேவலமாக பதிவிட்ட அந்த நபரின் பதிவால் கடுப்பான குஷ்பூ 'என் செருப்பு சைஸ் 41 தைரியம் இருந்தா நேர்ல வா. இதுதான் உங்க கீழ்தனமான புத்தி. மாறவே மாட்டிங்களாடா. நீயெல்லாம் கலைஞரா பின் தொடர்ரனு சொல்லிக்க வெட்கப்படணும். இதுதான் உங்கள் அறிவாலயத்தின் உறுப்பினர். இதற்கு கீழ் அவர்களால் போக முடியுமா ?' என்று பதிவிட்டு இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full