கடந்த மாதம் பிறந்தநாள் இந்த மாதம் இறந்தநாள் - உடன்பிறந்த சகோதரன் குறித்து குஷ்பூ உருக்கம்.

By Rajkumar · 17/12/2023

தமிழ் சினிமா உலகில் 80பது கால கட்டங்களில் முன்னணி நடிகையாக கொடி கட்டி பறந்தவர் நடிகை குஷ்பு. இவர் முதன் முதலாக 1980களில் தான் தன்னுடைய திரைப்பட பயணத்தைத் தொடங்கினார். பின் நடிகை குஷ்பூ அவர்கள் தமிழ் ,தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி திரைப் படங்களில் நடித்து உள்ளார். குஷ்புவின் மீது உள்ள அன்பினால் அந்த காலகட்டத்திலேயே அவருக்கு கோவில் கட்டினார்கள் அவரின் ரசிகர்கள். தற்போது இவர் சின்னத்திரை,வெள்ளித்திரை என பல துறைகளிலும் கலக்கி கொண்டு இருக்கிறார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு குஷ்பூ தனது அண்ணன் உயிரருக்கு போராடி வருவதாக தெரிவித்து இருந்தார். இதுகுறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்ட குஷ்பூ 'தனிப்பட்ட நெருக்கடி காரணமாக சிறிது காலம் ஓய்வில் இருந்தேன். எனது மூத்த சகோதரர் உயிருக்கு போராடி வருகிறார். கடந்த 4 நாட்களாக ICUவில் சிகிச்சை பெற்று வருகிறார். இன்று தான் ஒரு சிறிய முன்னேற்றம் காணப்படுகிறது.

அவர் குணமடைய வேண்டிக்கொள்ளுங்கள் என்று நடிகை குஷ்பு அந்த பதிவில் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். ரசிகர்களும் உங்களுடைய அண்ணன் விரைவில் குணமடைவார் என்று பதிவிட்டு இருந்தார்கள். இந்த நிலையில் குஷ்புவின் அண்ணன் கடந்த ஆண்டு டிசம்பர் 17 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி காலமாகி இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் தனது அண்ணனின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் குஷ்பூ உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

View this post on Instagram

A post shared by Kushboo Sundar (@khushsundar)

அதில் 'காலம் வேகமாக பறக்கிறது. அதிலும் குறிப்பாக இந்த ஒரு வருடம் பறந்து விட்டது.. நேரம் குணமடைகிறது என்று சொல்கிறார்கள், ஆனால் அது இல்லை. நாம் மாற்றங்களுடன் வாழ கற்றுக்கொள்கிறோம். நீங்கள் எங்களைச் சுற்றி இல்லை என்ற வலி எப்போதும் அப்படியே இருக்கும். நீங்கள் எங்களை விட்டு பிரிந்து ஒரு வருடம் ஆகிறது என்பதை நம்ப முடியவில்லை. நாங்கள் செய்யும் எல்லாவற்றிலும் தினமும் உங்களை மிஸ் செய்கிறோம்.

நீங்கள் என்னை பேட்டா என்று அழைப்பதை மிஸ் செய்கிறோம். நீங்கள் வண்ணம் தீட்டுவதைப் பார்க்கத் மிஸ் செய்கிறோம். உங்கள் உடல்நிலை குறித்து அலட்சியமாக இருப்பதற்காக சில சமயங்களில் உங்களைக் கண்டிப்பதை மிஸ் செய்கிறோம். எங்களை சிரிக்க வைப்பதை மிஸ் செய்கிறோம். நான் உன்னை மிஸ் செய்கிறேன் பாய்ஜான். சொர்கத்திலாவது நீங்கள் உங்களை கவனித்து கொண்டு மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன் என்று உருக்கமுடன் பதிவிட்டு இருக்கிறார்.

View this post on Instagram

A post shared by Kushboo Sundar (@khushsundar)

கடந்த மாதம் தான் குஷ்பூவின் சகோதரனுக்கு பிறந்தநாள் கூட சென்று இருந்தது. இதுகுறித்து பதிவிட்டு இருந்த அவர் 'என் வாழ்வில் ஒரு தூய்மையான காற்றாக நீ வந்தாய் என்னை அம்மா என்ற கூப்பிட்ட முதல் ஆள் நீ தான். என் கையைப் பிடித்து நடக்க கற்றுக் கொண்ட நாள் முதல் 30 ஆண்டுகள் என் கையை விடவே இல்லை. பிறந்தநாள் வாழ்த்துக்கள் பேட்டா என்றும் நீ என் அச்சுவாக இருப்பாய்' என்று உருக்கமுடன் பதிவிட்டுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full