பாலிவுட்டை போல தமிழ் சினிமாவிலும் எத்தனையோ வாரிசு நடிகர், நடிகைகள் இருக்கின்றனர். அந்த வகையில் குஷ்பூவின் மகளும் தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார். தென்னிந்திய சினிமா திரை உலகில் உள்ள முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகை குஷ்பூ. உண்மையிலேயே குஷ்புவின் இயற்பெயர் நக்கர்த் கான் ஆகும். இவர் திரைப்பட நடிகை மட்டுமல்லாமல் அரசியல்வாதியும் ஆவார். இவர் சினிமா திரை உலகில் 1980களில் வெளி வந்த படங்களில் குழந்தை நட்சத்திரமாக தான் முதலில் அறிமுகமானார். பின் 1989 ஆம் ஆண்டு ‘வருஷம் 16’ என்ற தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படமே அவருடைய முதல் படமாகும். பின்னர் நடிகை குஷ்பூ 90 களில் உள்ள தமிழ் திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாகவும் விளங்கியுள்ளார்.

சினிமா உலகில் 90 களின் காலகட்டத்தில் இளைஞர்களின் கனவுக் கன்னியாக திகழ்ந்தவர் நடிகை குஷ்பு. மேலும், ரசிகர்கள் குஷ்பு மீது உள்ள பற்றின் காரணமாக அவருக்கு கோவில் ஒன்று கட்டி உள்ளார்கள். தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற பல மொழி படங்களில் நடித்துள் குஷ்பூ படங்களில் குணச்சித்திர வேடங்களிளும்,சின்னத்திரையிலும் நடித்து வருகிறார். குஷ்பு கடந்த 2000ஆம் ஆண்டு சினிமா துறையில் பிரபலமான இயக்குனர் சுந்தர்.சியும், குஷ்பூவும் திருமணம் செய்து கொண்டார்கள்.

இதையும் பாருங்க : 1.2 பில்லியன் மக்கள் தொகையில் இத்தனை பேர் தான் ட்விட்டரில் இருக்கின்றார்கள் அத பத்தி ஏன் கலவைப்படனும் – ட்விட்டர் விமர்சங்களுக்கு மாதவன் பதிலடி.

Advertisement

உடல் கேலிக்கு உள்ளான மகள் :

மேலும், இவர்கள் திருமணம் காதல் திருமணம் தான். குஷ்பு மற்றும் சுந்தர் சி தம்பதியருக்கு அவந்திகா, அனந்திதா என்ற இரு மகளும் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் குஷ்புவை போல மிகவும் குயூடாக பப்லியான தோற்றத்தில் தான் இருந்தார்கள். இருப்பினும் இவர்கள் உருவத்தை வைத்து பல முறை பலரும் கேலி கிண்டல்களை செய்தார்கள். அவ்வாரான கிண்டல்களுக்கு குஷ்புவும் பல முறை பதிலடி கொடுத்துள்ளார்.

உடல் எடை குறைத்த மகள்கள் :

குஷ்பூவின் மகள்களின் உருவத்தை கேலி செய்து வந்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் சமீபத்தில் குஷ்புவின் மகள் அனந்திதா உடல் எடையை குறைத்து படு ஸ்லிம்மாக மாறிய இருந்தார். அந்த புகைப்படங்கள் வலைதளத்தில் வைரலாக பரவியது. அதே போல குஷ்பூவின் மற்றொரு மகளான அவந்திகாவும் உடல் எடையை குறைத்து இருந்தார். இவர்கள் இருவருக்கும் போட்டி போடும் வகையில் குஷ்பூவும் உடல் எடையை குறைத்தார்.

Advertisement

சினிமாவில் அறிமுகமாகும் மகள் :

இப்படி ஒரு நிலையில் குஷ்பூவின் மகள் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார். அது வேறு யாரும் இல்லை. குஷ்பூவின் மூத்த மகளான அவந்திகா தான் சினிமாவில் களமிறங்க இருக்கிறார். அவந்திகா லண்டனில்  நடிப்பு பயிற்சி பள்ளியில் தனது படிப்பை முடித்த நிலையில் தற்போது அவர் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார். இந்த நிலையில் குஷ்பூவின் இளைய மகளான அனந்திதா முதல் முறையாக பேட்டி ஒன்றில் பங்கேற்று இருந்தார்.

Advertisement

இளைய மகள் கொடுத்த பேட்டி :

அதில் பேசிய அவர் ‘நான் குண்டாக இருந்த போது பலரும் என்னை என் அம்மாவுடன் ஒப்பிட்டு கேலி செய்தனர். அதே போல நான் ஒல்லியானதும் கிழவி மாதிரி இருக்க ஒரு 16, 17 வயசு பொண்ணு மாதிரியா இருக்கனும்னு கேலி செஞ்சாங்க. அதிலும் ஒரு சிலர் நான் ஆப்ரேஷன் செய்து தான் உடல் எடையை குறைத்தேன் என்கிறார்கள். ஒரு 16 வயசு பொண்ண ஆப்ரேஷன் செய்துகொள்வாரா இது கூடவா தெரியாது ‘ என்று பேசி இருக்கிறார்.


Advertisement