ஹரிஹரன் நிகழ்ச்சி, இலங்கையில் குஷ்பூ எழுந்த எதிர்ப்பு, அவருக்கு பதில் சென்ற டிடி. கலா மாஸ்டர் சொன்ன காரணம்.

By Rajkumar · 12/2/2024

சமீபத்தில் இலங்கை கொழும்பு நகரில் நடைபெற்ற ஹரிஹரனின் ஸ்டார் நைட் நிகழ்ச்சியில் குஷ்பூ கலந்துகொள்ளாத காரணம் குறித்து கலா மாஸ்டர் கூறி இருக்கிறார். பாடகர் ஹரிஹரன் சார்பில் ‘ஸ்டார் நைட்’  என்ற விழா இலங்கையில் யாழ்ப்பனத்தில் உள்ள முற்றவெளி மைதானத்தில் நேற்று முன் தினம் பிரம்மாண்டமாக நடைபெற்றது.இந்த விழாவில் நடிகை ரம்பா தனது குடும்பத்துடன் கலந்து கொண்ட நிலையில் நடிகை தமன்னா, கலா மாஸ்டர் போன்றவர்களும் ஒரு சில சின்னத்திரை பிரபலங்களும் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

https://twitter.com/LdanielIss63989/status/1756164337868341541

இந்த விழாவில் விஐபிகளுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டு பார்வையாளர்களுக்கு இலவசமாக அனுமதி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. என்ட்ரி இலவசம் என்பதால் இந்த விழாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் வந்திருக்கிறார்கள். அப்போது விஐபிக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் பார்வையாளர்கள் செல்ல முயன்று இருக்கிறார்கள்.இதனால் அவர்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் முயன்றதால் ரசிகர்களுக்கும் காவலர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டிருக்கிறது.

இந்த தள்ளுமுள்ளில் சிலருக்கு மூச்சு திணறல் கூட ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஒரு கட்டத்தில் ரசிகர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறியதால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் சிறப்பு விருந்தினர்களாக வந்த பிரபலங்களும் நிகழ்ச்சியையும் நடத்த முடியாமல் தவித்து இருக்கிறார்கள்.

https://twitter.com/chettyrajubhai/status/1756227624719040798

ஒரு கட்டத்தில் இந்த நிகழ்ச்சியை பாதியிலேயே நிறுத்தி இருக்கின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக யாழ்ப்பாணம் மீடியாக்களில் இந்த நிகழ்ச்சி குறித்த விவாதங்கள் வைரலாகி வருகிறது. மேலும், நிகழ்ச்சியில் பங்கேற்ற பார்வையாளர்கள் அங்கே நடந்த விஷயங்களை வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் இந்த நிகழ்ச்சி குறித்து பேசிய நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான கலா மாஸ்டர் 'நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் எல்லாம் சரியாகத்தான் செய்திருந்தோம்.

ஆனால் அந்த 35 ஆயிரம் ரசிகர்கள் வருவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் ஒரு லட்சம் ரசிகர்களுக்கு மேல் வந்துவிட்டார்கள். கூட்டம் உள்ளே நுழைந்த பிறகு தான் பிரச்சனை ஏற்பட்டது. அவர்கள் மேடைக்கு அருகில் வந்ததால் தான் ரம்பா அப்படி பேசினார். இதனால் 20 நிமிடங்கள் மட்டுமே நிகழ்ச்சி தடைபட்டது அதன் பின்னர் நிகழ்ச்சி நன்றாக தான் சென்றது. நிகழ்ச்சி பாதியில் நின்றது என்பது தவறான தகவல் என்று கூறியுள்ளனர். மேலும் பேசிய அவர் முதல்ல  குஷ்புதான் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கறதா திட்டமிட்டிருந்தோம். அது தொடர்பா சின்னதா ஒரு அறிவிப்பு செஞ்சதுமே இந்த கும்பல்தான் 'குஷ்பு இலங்கை வரக்கூடாது'னு சொன்னாங்க.

குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இருந்தப்ப என்னவோ பேசினதா சொல்லி எதிர்த்தாங்க. எனக்கு அது தொடர்பா டீடெய்லா தெரியல. ஆனா அது ஒரு அரசியல் காரணம்னு மட்டும் என்னால உறுதியா சொல்ல முடியும். அதனால குஷ்புவே 'சரி, தேவையில்லாத சர்ச்சைக்கு இடம் கொடுக்க வேண்டாம், நான் வரலை' நீங்க போயிட்டு வாங்க'னு சொல்லிட்டாங்க. அதனாலதான் குஷ்புவுக்குப் பதிலா டி.டி.யை நிகழ்ச்சியை ஹோஸ்ட் பண்ணக் கூட்டிட்டுப் போனோம்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full