அன்று தோனி, இன்று மோடி - மாமியாரின் கனவை நிறைவேற்றிய குஷ்பூ. மருமகளால் சுந்தர் சி அம்மாவிற்கு கிடைத்த பாக்கியம்.

By Arun · 21/1/2024

தன் மாமியாரின் கனவை நிறைவேற்றிய பிரதமருக்கு நன்றி தெரிவித்து குஷ்பூ பதிவிட்டு இருக்கும் பதிவு தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கடந்த சில தினங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் அயோத்தி ராமர் கோயிலின் திறப்பு விழா மற்றும் மோடி குறித்த செய்தி தான் பேசப்பட்டு வருகிறது. உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இருக்கும் ராமர் கோவில் திறப்பு விழா நாளை பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.

இதனால் மோடி அவர்கள் மூன்று நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்திருக்கிறார். இவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றது மட்டும் இல்லாமல் திருச்சி, இராமேஸ்வரம், தனுஷ்கோடி போன்ற பகுதிகளில் உள்ள கோயில்களுக்கும் சென்று வழிபாடு செய்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் தன் கட்சி நிர்வாகிகளையும் சந்தித்து பேசி இருக்கிறார். இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு நடிகை குஷ்பு நன்றி தெரிவித்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

குஷ்பூ பதிவு:

காரணம், பிரதமர் மோடியின் தீவிர ரசிகையாக இருப்பவர் குஷ்புவின் மாமியார். தற்போது அவர் மோடியை நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்து இருக்கிறார். இதை தான் தற்போது குஷ்பூ இணையத்தில் சோசியல் மீடியாவில் பகிர்ந்து, பிரதமர் மோடிக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது. 92 வயதாகும் என்னுடைய மாமியார் தெய்வானை. அவர்கள் பிரதமர் மோடியின் தீவிர ரசிகை. அவரை வாழ்நாளில் ஒரு முறையாவது பார்த்து விட வேண்டும் என்று கனவோடு இருந்தார்.

நிறைவேறிய மாமியார் கனவு:

அந்தக் கனவு தற்போது நினைவாகி இருக்கிறது. இது அந்த அழகிய தருணம். உலகில் மிகவும் பிரபலமானவரும், அனைவராலும் விரும்பப்படும் தலைவராகவும் இருப்பவர் பிரதமர் மோடி. இவ்வளவு பெரிய பதவியில் இருந்தும் அவர் என் மாமியாரை மிகவும் அன்போடும் அரவணைப்போடும் மரியாதையோடும் வரவேற்றார். பின் அன்பும் பாசமும் நிறைந்த வார்த்தைகளோடு அவர் பேசியதை பார்க்கும்போது தாய் மகனும் பேசிக் கொண்டது போல இருந்தது.

https://twitter.com/sridevisreedhar/status/1748840814183362656

மோடி குறித்து சொன்னது:

இளைஞர்கள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் அவரை பிடிக்கிறது. நிச்சயம் அவர் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர். உங்களுடைய பொன்னான நேரத்தை எங்களுடன் செலவிட்டதை நாங்கள் என்றென்றும் மறக்கவே மாட்டோம். உங்களை சந்தித்ததில் என் மாமியார் குழந்தை போன்று துள்ளி குதித்து விளையாடும் அளவிற்கு சந்தோஷத்தில் இருக்கிறார். இவ்வளவு வயதிலும் அவர் சந்தோஷமாக இருப்பதை பார்ப்பதை தவிர எனக்கு வேறு எதுவும் தேவையில்லை. மோடி அவர்களே உங்களுக்கு எப்போதுமே கடமைப்பட்டிருக்கிறேன். உங்களுக்கு கோடான கோடி நன்றி என்று பதிவிட்டு இருக்கிறார்.

தோனி-குஷ்பூ மாமியார் புகைப்படம்:

அதேபோல் குஷ்பு மாமியார் தெய்வானை கிரிக்கெட் வீரர் தோனியின் மிகப்பெரிய ரசிகை. அவரைப் பார்க்க வேண்டும் என்று ரொம்பவே ஆசைப்பட்டு இருந்தார். அதுமட்டுமில்லாமல் தோனியை பார்க்காமல் இருந்து விட்டால் ஆவியாக வந்து குஷ்புவை தொந்தரவு செய்வதாகவும் கூறியிருந்தார். பின் மூன்று ஆண்டுகளாக திட்டமிட்டு கடந்த ஆண்டு தான் ஒரு நட்சத்திர ஹோட்டலில் தன்னுடைய அத்தை தெய்வானையை அழைத்து சென்று தோனியை குஷ்பூ சந்திக்க வைத்திருந்தார். அது தொடர்பான புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வைரலாகி இருந்தது

Tamil Behind Talkies AMP · Quick view
View full