'மனைவியை மதிப்பவன் தான் மனிதன்' குஷ்பூ போட்ட டீவ்ட், ஜெயம் ரவியை தாக்கினாரா? நெட்டிசன்கள் கேள்வி

By subhashini · 22/9/2024

குஷ்பூ போட்டிருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் குஷ்பூ. இவர் 90 கால கட்டம் தொடங்கி தற்போது வரை படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார். இவர் வெள்ளித்திரை மட்டுமில்லாமல் சின்ன திரையிலும் கலக்கி கொண்டு இருக்கிறார். மேலும், இவர் சினிமாவை தாண்டி அரசியல்வாதியாகவும் திகழ்கிறார். தற்போது இவர் பாஜகவில் ஒரு முக்கிய பொறுப்பை வகித்து வருகிறார்.

இப்படி இருக்கும் நிலையில் குஷ்பூ போட்டு இருக்கும் பதிவில், எல்லாத்தையும் விட தன்னுடைய குடும்பத்தை மதித்து போற்றுபவன் தான் உன்னதமான மனிதன். தன்னுடைய குடும்பத்தை அளவுக்கு அதிகமாக நேசிக்கும் போது அவனுடைய தனிப்பட்ட விருப்பங்கள், தேவைகள் எல்லாமே இரண்டாவது பட்சம் தான். வாழ்க்கையினுடைய முக்கிய அங்கமே திருமண வாழ்க்கை. இதில் நிறைய மேடு பள்ளங்கள் இருக்கத்தான் செய்யும், தவறுகளும் நடக்கத்தான் செய்யும். ஆனால், இந்த விஷயங்களால் ஒரு மனிதன் அவனுடைய குடும்பத்தை விலக்கி வைப்பதற்கான உரிமையாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

குஷ்பூ பதிவு:

திருமண பந்தத்தில் காலம் கடந்து அன்பு குறையலாம். ஆனால், இருவருக்கும் இடையே பரஸ்பர மரியாதை குறைய கூடாது. தன்னுடைய குழந்தைகளை அன்போடு பார்த்துக் கொள்ளும் மனைவியை மதிப்பவன் தான் உண்மையான மனிதன். ஆனால், மரியாதை இல்லாமல் அவர்களை விட்டு செல்பவன் உன்னதமான மனிதன் கிடையாது. இதனால் தன்னுடைய குழந்தைகள் எப்படி எல்லாம் பாதிக்கப்படுவார்கள் என்பதை அறியாத இருப்பவர்கள் சுயநலவாதிகள். மனித நேயமும், சரியான புரிதலும் இல்லாததால் தான் இப்படி எல்லாம் செய்கிறார்கள். வாழ்க்கை என்பது ஒரு சுழற்சி சக்கரம்.

உறவு குறித்து சொன்னது:

சுயநலத்தால் நீங்கள் செய்யும் சில தவறுகள் பூமராங்கை போல மீண்டும் உங்களையே தாக்கும். நீங்கள் அதையெல்லாம் உணரும் தருணத்தில் காலமே கடந்து போயிருக்கும். இது ஒரு கசப்பான உண்மை. உங்களுடைய குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் மனைவியை மதிப்பது என்பது ஒரு சிறந்த குணம் இல்லை. அது ஒரு அடிப்படையான குணம். இதை புரிந்து கொள்ளாதவர்கள் மற்றவர்களிடம் மரியாதையை பெற முடியாது. உங்களை அளவுக்கு அதிகமாக நேசிக்கும் மனைவியை அவமதிப்பதன் மூலம் நீங்கள் எவ்வளவு கொடூரமானவர் என்பதை காட்டுகிறது. தன்னுடைய வாழ்க்கையில் முன்னேற நினைக்கும் ஒரு மனிதன் முதலில் தன்னுடைய குடும்பத்தை தான் முன்னேற்ற நினைப்பான்.

குஷ்பூ சொன்ன அறிவுரை:

எல்லா நாளும் மகிழ்ச்சியாக இருக்கும் என எதிர்பார்க்க முடியாது. ஆனால், பரஸ்பரம் மரியாதையும் இருக்கும் பட்சத்தில் கடினமான நாட்களை கூட நம்பிக்கை கொண்டு தடுக்கலாம். உங்களையே உலகமாக இருக்கும் குடும்பத்தையும், உங்களுக்கு பக்கமாக இருக்கும் நண்பர்களையும் மதிப்பதன் மூலம் உங்களுக்கு வலிமையை கொடுக்கும். மரியாதை என்பது அடிப்படையான ஒன்று. அது உங்களுடைய வீட்டிலிருந்து தொடங்க வேண்டும். இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளாத நபர் தான் அன்பின் பாதையில் இருந்தும் நிறைவான வாழ்க்கையிலிருந்தும் விலகிச் செல்வார் என்று கூறியிருக்கிறார்.

ஜெயம் ரவி- ஆர்த்தி விவகாரம்:

இப்படி குஷ்பூ போட்டிருப்பதற்கு காரணம் ஜெயம் ரவி- ஆர்த்தி விவகாரமா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஆர்த்தியின் அம்மாவும் குஷ்புவும் நெருங்கிய நண்பர்கள் என்பது நாம் அறிந்ததே. கடந்த சில மாதங்களாகவே ஆர்த்தி- ஜெயம் ரவி விவாகரத்து குறித்த செய்தி தான் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு இருந்தது. இதை உறுதி செய்யும் விதமாக சமீபத்தில் ஜெயம் ரவி தன்னுடைய விவாகரத்து தொடர்பான பதிவை வெளியிட்டு இருந்தார். அதன் பின் ஆர்த்தி, இது எதுவும் தனக்கு தெரியாது போல ஒரு பதிவை போட்டு இருந்தார். இவர்களின் பிரிவு பிரபலங்கள் மற்றும் ரசிகர்களுக்கு பேர் அதிர்ச்சி ஆக உள்ளது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full